சனி, 29 டிசம்பர், 2018

மின்னற்பீலிகள் (7)

மின்னற்பீலிகள் (7)
============================================ருத்ரா

காதலிப்பதை விட‌
காதலிக்கப்படுவதில் தான்
காதலின் நுட்பம்
வெளிப்படும் என்று
கவிதைகள் எழுதினார்கள்.
கண்ணாடி பாட்டில்களில்
கலர் கலராய் கிடக்கும்
சாக்கலேட்டுகளைப் பார்த்து
ஏங்கும்
குழந்தையைப்போல்
காத்துக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள்
நான் காதலிக்கப்பட்டேன்.
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
எல்லையில்லை.
சாக்கலேட் மழையில் நான்.
இருப்பினும்
இனிமையாய் ஒரு ஆர்வம்
குறு குறுத்தது!
அவளிடம் கேட்டேன்.
"என்னைக் காதலிக்க என்ன காரணம்?"
அவள்
உறுத்து என்னைப்பார்த்தாள்.
அப்புறம் முகம் திருப்பிப்போனவள் தான்!
சாக்கலேட்டுகளின்
கண்ணாடி பாட்டில் உடைந்து போனது.
காதல்
உருவாக நுட்பம் சொன்ன கவிஞர்களே!
உடைந்து போகும் நுட்பத்தையும்
ஏன்
எழுதாமல் விட்டீர்கள்?

=============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக