ஹேப்பி நியூ இயர் (1)
=======================================ருத்ரா
புத்தாண்டுகளுக்கு
மொழியில்லை தான்.
பாருங்கள்
பக்தர்களின்
இந்த பாம்புவரிசையை!
தமிழ்க்கோயில்களில்
ஆங்கிலப்புத்தாண்டுக்கு
சமஸ்கிருதத்தில்
அர்ச்சனைகள்.
ஹேப்பி நியூ இயரை
"விஷ்ணு சகஸ்ர நாமத்தில்"
ஒப்பிக்கிறார்
அர்ச்சகர்.
புரிந்துகொண்டவர்கள்
இன்னும்
புரியவில்லையே என்று
கண்மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
புரியாதவர்களோ
புரியாததற்கே புளகாங்கிதம் கொண்டு
கன்னத்தில் தட்டி
கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
காலப்பாம்பே!
இதைப்பார்த்தாயா?
வருடங்கள் எனும் மைல் கற்களே
நகரும் அடையாளங்களாய்
சரசரவென
உன் மீது சித்திரங்களாய்
ஓடிக்கொண்டிருக்கின்றனவே!
புதிய நானோ செகண்ட்
பிறந்த உடனேயே இறந்தகாலம்
ஆனதால்
தன் நெற்றியின் மீதே
இன்னொரு புதிய நானோ செகண்டை
காலண்டராய் ஆணி அடித்து
மாட்டிக்கொண்டிருக்கிறது.
காலம் என்பதன்
அர்த்தத்தின் விளிம்பே
அர்த்தம் அற்றது என்பது தான்
ஒரு ஆச்சரியமான முரண்.
அதோ ஆலய மணி ஒலிக்கிறது.
இல்லை இல்லை
என்பதே அங்கு ஒலிக்கிறது.
நீங்கள் இன்னும் அறிவு என்பதை
ஸ்பர்சிக்கவே
இல்லை என்பது தான் அது.
ஆம்
நீங்கள் இன்னும் அதை தொடவில்லை
என்று தான்
இந்த ஆத்திகம்
நாத்திகம் சொல்ல வைக்கிறது!
======================================================
`
=======================================ருத்ரா
புத்தாண்டுகளுக்கு
மொழியில்லை தான்.
பாருங்கள்
பக்தர்களின்
இந்த பாம்புவரிசையை!
தமிழ்க்கோயில்களில்
ஆங்கிலப்புத்தாண்டுக்கு
சமஸ்கிருதத்தில்
அர்ச்சனைகள்.
ஹேப்பி நியூ இயரை
"விஷ்ணு சகஸ்ர நாமத்தில்"
ஒப்பிக்கிறார்
அர்ச்சகர்.
புரிந்துகொண்டவர்கள்
இன்னும்
புரியவில்லையே என்று
கண்மூடிக்கொண்டிருக்கிறார்கள்.
புரியாதவர்களோ
புரியாததற்கே புளகாங்கிதம் கொண்டு
கன்னத்தில் தட்டி
கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
காலப்பாம்பே!
இதைப்பார்த்தாயா?
வருடங்கள் எனும் மைல் கற்களே
நகரும் அடையாளங்களாய்
சரசரவென
உன் மீது சித்திரங்களாய்
ஓடிக்கொண்டிருக்கின்றனவே!
புதிய நானோ செகண்ட்
பிறந்த உடனேயே இறந்தகாலம்
ஆனதால்
தன் நெற்றியின் மீதே
இன்னொரு புதிய நானோ செகண்டை
காலண்டராய் ஆணி அடித்து
மாட்டிக்கொண்டிருக்கிறது.
காலம் என்பதன்
அர்த்தத்தின் விளிம்பே
அர்த்தம் அற்றது என்பது தான்
ஒரு ஆச்சரியமான முரண்.
அதோ ஆலய மணி ஒலிக்கிறது.
இல்லை இல்லை
என்பதே அங்கு ஒலிக்கிறது.
நீங்கள் இன்னும் அறிவு என்பதை
ஸ்பர்சிக்கவே
இல்லை என்பது தான் அது.
ஆம்
நீங்கள் இன்னும் அதை தொடவில்லை
என்று தான்
இந்த ஆத்திகம்
நாத்திகம் சொல்ல வைக்கிறது!
======================================================
`
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக