"கர் புர்" விஸ்வாஸம்.
============================================ருத்ரா
இந்த அட்டப்புலிகளின்
கர் புர் சத்தங்கள்
தாங்க முடியல.
நிமிடத்துக்கு நிமிடம்
லட்சம் லட்சம் ஈசல்கள்
இந்த ட்விட்டர்களில்
விழுந்து மாண்டு போகின்றன.
அந்த கொல மாஸ
பொடி மாஸ் பண்ணத்தான்
இவர்
தல எடுத்துருக்காராம்.
என்னடா இது
கன்னடா கலாட்டாவா இருக்கு?
அவரு
நரச்ச தலையிலே
கொஞ்சம் வெள்ளையை
இழைய விட்டிருக்காருன்னா
இவரும்
அதே "ப்ளாக் அண்ட ஒயிட்"ல
"விக்"கை வச்சு செஞ்சுருக்காரு.
"ஆசை நாயகன்" அன்று ஆடிய
நிழல் நடனத்திலேயே
நிழலாகிப்போனவர்கள்
தமிழன் வாழும் நிஜ வாழ்க்கையை
தொலைத்தே விட்டனர்.
தமிழா! தமிழா!
உங்களை முட்டித்தள்ள வரும்
ஆதிக்க சக்திகளை நெட்டித்தள்ள
இந்த ஜிகினாக்காளைகளை
வைத்துக்கொண்டா
ஜல்லிக்கட்டு நடத்தப்போகிறாய்?
அந்த மெரினா கடற்கரை
செத்த மீன்கள் நாறும்
மணற்கரை அல்ல தமிழா!
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
என்று பாடினானே கண்ணதாசன்.
அந்த மணல் எல்லாம் புண்ணாகலாமா
தமிழா!
அனல் பூக்களின் மகரந்தங்கள்
அங்கு இறைந்து கிடப்பதை
நீ அறிய வில்லையா?
சினிமாவின் சில்லறைச்சத்தங்களிலா
உன் சரித்திரம் முரசு கொட்டுவது?
"விழித்துக்கொள் தமிழா"
திரும்ப திரும்ப ஒலிப்பதால்
கீறல் விழுந்த வரிகள் அல்ல இவை.
திரும்பவே திரும்பாமல்
போய்விடுமோ
நம் செந்தமிழ் வெளிச்சம்
எனும் ஏக்கமே
இங்கு உரத்து ஒலிக்கின்றது.
"ஆம்.
மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இது.
"விழித்துக்கொள் தமிழா".
==============================================================
============================================ருத்ரா
இந்த அட்டப்புலிகளின்
கர் புர் சத்தங்கள்
தாங்க முடியல.
நிமிடத்துக்கு நிமிடம்
லட்சம் லட்சம் ஈசல்கள்
இந்த ட்விட்டர்களில்
விழுந்து மாண்டு போகின்றன.
அந்த கொல மாஸ
பொடி மாஸ் பண்ணத்தான்
இவர்
தல எடுத்துருக்காராம்.
என்னடா இது
கன்னடா கலாட்டாவா இருக்கு?
அவரு
நரச்ச தலையிலே
கொஞ்சம் வெள்ளையை
இழைய விட்டிருக்காருன்னா
இவரும்
அதே "ப்ளாக் அண்ட ஒயிட்"ல
"விக்"கை வச்சு செஞ்சுருக்காரு.
"ஆசை நாயகன்" அன்று ஆடிய
நிழல் நடனத்திலேயே
நிழலாகிப்போனவர்கள்
தமிழன் வாழும் நிஜ வாழ்க்கையை
தொலைத்தே விட்டனர்.
தமிழா! தமிழா!
உங்களை முட்டித்தள்ள வரும்
ஆதிக்க சக்திகளை நெட்டித்தள்ள
இந்த ஜிகினாக்காளைகளை
வைத்துக்கொண்டா
ஜல்லிக்கட்டு நடத்தப்போகிறாய்?
அந்த மெரினா கடற்கரை
செத்த மீன்கள் நாறும்
மணற்கரை அல்ல தமிழா!
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்
என்று பாடினானே கண்ணதாசன்.
அந்த மணல் எல்லாம் புண்ணாகலாமா
தமிழா!
அனல் பூக்களின் மகரந்தங்கள்
அங்கு இறைந்து கிடப்பதை
நீ அறிய வில்லையா?
சினிமாவின் சில்லறைச்சத்தங்களிலா
உன் சரித்திரம் முரசு கொட்டுவது?
"விழித்துக்கொள் தமிழா"
திரும்ப திரும்ப ஒலிப்பதால்
கீறல் விழுந்த வரிகள் அல்ல இவை.
திரும்பவே திரும்பாமல்
போய்விடுமோ
நம் செந்தமிழ் வெளிச்சம்
எனும் ஏக்கமே
இங்கு உரத்து ஒலிக்கின்றது.
"ஆம்.
மீண்டும் மீண்டும் ஒலிக்கும் இது.
"விழித்துக்கொள் தமிழா".
==============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக