பூ
=============================================ருத்ரா
உனக்கு ஒரு ரோஜாவை
நீட்ட
நானும் வந்து கொண்டு தான்
இருந்தேன்.
ஆனாலும் அந்தக்கோடு
புனிதமானது..
புனிதத்தையும் விட மனிதமானது.
அதனால்
உன்னிடம் அந்தப்பூவை காட்டவே இல்லை
ஆம்.
அந்த நட்புக்கோடு..
நினைத்து நினைத்துப்பார்த்தால்
அது
எவ்வளவு உன்னதமானது.
எவ்வளவு பரவசமானது.
இதயங்கள் கத கதப்பாய்
நேயமோடு உருகுவது மட்டுமே
உள்ளக்கசிதல்களின் இருக்கும்
அந்த "பூமத்திய ரேகை"க்கோடு.
ஆனால்
அன்று
நீ திடீரென்று ஒரு பூவை நீட்டி
ஹாய் என்றாய்.
நான் திடுக்கிட்டேன்.
"ஏண்டா? ஃபூல் மறந்துட்டியா
ஹேப்பி பெர்த் டே டு யூ!"
..........
..........
அந்தப் பூவைக்காட்டி சொன்னாள்.
"இது என்ன பூ வேண்டுமானலும்
இருக்கட்டும்.
வாடாது
வதங்காது
சுருங்காது
ஆம் இது நம் "நட்பூ"
அவள் கோடு தாண்டிவிட்டள்.
நல்லவேளை
அந்தக்கோடு என்னால்
முறிவு படும் ஒரு நிகழ்வை
தடுத்துக் காப்பாற்றி விட்டாள்.
நன்றி..மிக மிக நன்றி
என்று
அந்தப்பூவை வாங்கிக்கொண்டேன்.
=========================================
=============================================ருத்ரா
உனக்கு ஒரு ரோஜாவை
நீட்ட
நானும் வந்து கொண்டு தான்
இருந்தேன்.
ஆனாலும் அந்தக்கோடு
புனிதமானது..
புனிதத்தையும் விட மனிதமானது.
அதனால்
உன்னிடம் அந்தப்பூவை காட்டவே இல்லை
ஆம்.
அந்த நட்புக்கோடு..
நினைத்து நினைத்துப்பார்த்தால்
அது
எவ்வளவு உன்னதமானது.
எவ்வளவு பரவசமானது.
இதயங்கள் கத கதப்பாய்
நேயமோடு உருகுவது மட்டுமே
உள்ளக்கசிதல்களின் இருக்கும்
அந்த "பூமத்திய ரேகை"க்கோடு.
ஆனால்
அன்று
நீ திடீரென்று ஒரு பூவை நீட்டி
ஹாய் என்றாய்.
நான் திடுக்கிட்டேன்.
"ஏண்டா? ஃபூல் மறந்துட்டியா
ஹேப்பி பெர்த் டே டு யூ!"
..........
..........
அந்தப் பூவைக்காட்டி சொன்னாள்.
"இது என்ன பூ வேண்டுமானலும்
இருக்கட்டும்.
வாடாது
வதங்காது
சுருங்காது
ஆம் இது நம் "நட்பூ"
அவள் கோடு தாண்டிவிட்டள்.
நல்லவேளை
அந்தக்கோடு என்னால்
முறிவு படும் ஒரு நிகழ்வை
தடுத்துக் காப்பாற்றி விட்டாள்.
நன்றி..மிக மிக நன்றி
என்று
அந்தப்பூவை வாங்கிக்கொண்டேன்.
=========================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக