மாறி மாறி மாரி ...தனுஷ்!
========================================ருத்ரா
தனுஷ் அவர்களே !
உங்கள் நடிப்பின் பரிமாணம்
ஒன்று இரண்டு ...என
எண்களைக்கொண்டா
மலர்ச்சி கொள்வது?
மாரி 2 என்பது
ஒரு புதிய புயல் தான்.
ஆனால்
கடல் ஒன்று தான்!
காற்று ஒன்று தான்!
அலை ஒன்று தான்!
உங்கள் முத்திரை
வெறும் தபால் தலைக்கு
அச்சடிக்கும்
ஸ்டீரியோ முத்திரை அல்ல.
தேதி மாறுவது மட்டும் வளர்ச்சியல்ல
மலர்ச்சியல்ல !
சமுதாய முரண்களை களைகிறேன்
என்று தான் இன்று
எல்லாப்படங்களும்
புதிய புதிய சமுதாயக்களைகளை
பதியம் போடுகின்றன.
ரோஜாவாய் இருக்கும் காதல்
வெறும் சப்பாத்திக்கள்ளி
என்று பூதம் காட்டுகின்றன.
தசை கிழியும் அடியும் குத்தும் நம்
திசை மாற்றும் என்று
நம்புகிறீர்களா தனுஷ் அவர்களே?
மானிடத்துவத்தின்
மெல்லிய ரேகைகள் மீது
ஆதிக்கத்தின் ரோடு ரோலர்கள்
அந்த விடியல் குரல்களை
நொறுக்கி கூழாக்குவதும் உண்மை.
அதை "பட"ப்படுத்த
மிகக்கூர்மையான நடிப்பின் உளி
நிச்சயம் வேண்டும்.
ஒரு பார்வை மூலம்
ஒரு குருட்சேத்திரத்தையே
காட்டிவிடும் நடிப்பு
உங்களிடம் கனல் வீசுகிறது.
தயாரிப்பு உலகில் நீங்கள்
நுழைந்தது
அதில் இருக்கும் உங்கள்
நல் முனைப்பையும் காட்டுகிறீர்கள்.
உள்ளுக்குள் ஒரு
"சத்யஜித் ரே"யின் நரம்புத்துடிப்பின்
கலை அதிர்வை வைத்துக்கொண்டு
இப்படி
கச்சா முச்சா குத்தாட்டங்களில்
காணாமல் போய்விடாதீர்கள்.
உணர்சசி பொங்கும் நடிப்பில்
நீங்கள் ஒரு ஏழு ஞாயிறு.
அதனால் இந்த "ஞாயிறு"களுக்கு
விடுமுறை விட்டுவிட்டு
கல்லாப்பெட்டியின் கலக்கல்களுக்குள்
கலந்து கலைந்து போய்விடாதீர்கள்.
உங்கள்
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
=============================================
========================================ருத்ரா
தனுஷ் அவர்களே !
உங்கள் நடிப்பின் பரிமாணம்
ஒன்று இரண்டு ...என
எண்களைக்கொண்டா
மலர்ச்சி கொள்வது?
மாரி 2 என்பது
ஒரு புதிய புயல் தான்.
ஆனால்
கடல் ஒன்று தான்!
காற்று ஒன்று தான்!
அலை ஒன்று தான்!
உங்கள் முத்திரை
வெறும் தபால் தலைக்கு
அச்சடிக்கும்
ஸ்டீரியோ முத்திரை அல்ல.
தேதி மாறுவது மட்டும் வளர்ச்சியல்ல
மலர்ச்சியல்ல !
சமுதாய முரண்களை களைகிறேன்
என்று தான் இன்று
எல்லாப்படங்களும்
புதிய புதிய சமுதாயக்களைகளை
பதியம் போடுகின்றன.
ரோஜாவாய் இருக்கும் காதல்
வெறும் சப்பாத்திக்கள்ளி
என்று பூதம் காட்டுகின்றன.
தசை கிழியும் அடியும் குத்தும் நம்
திசை மாற்றும் என்று
நம்புகிறீர்களா தனுஷ் அவர்களே?
மானிடத்துவத்தின்
மெல்லிய ரேகைகள் மீது
ஆதிக்கத்தின் ரோடு ரோலர்கள்
அந்த விடியல் குரல்களை
நொறுக்கி கூழாக்குவதும் உண்மை.
அதை "பட"ப்படுத்த
மிகக்கூர்மையான நடிப்பின் உளி
நிச்சயம் வேண்டும்.
ஒரு பார்வை மூலம்
ஒரு குருட்சேத்திரத்தையே
காட்டிவிடும் நடிப்பு
உங்களிடம் கனல் வீசுகிறது.
தயாரிப்பு உலகில் நீங்கள்
நுழைந்தது
அதில் இருக்கும் உங்கள்
நல் முனைப்பையும் காட்டுகிறீர்கள்.
உள்ளுக்குள் ஒரு
"சத்யஜித் ரே"யின் நரம்புத்துடிப்பின்
கலை அதிர்வை வைத்துக்கொண்டு
இப்படி
கச்சா முச்சா குத்தாட்டங்களில்
காணாமல் போய்விடாதீர்கள்.
உணர்சசி பொங்கும் நடிப்பில்
நீங்கள் ஒரு ஏழு ஞாயிறு.
அதனால் இந்த "ஞாயிறு"களுக்கு
விடுமுறை விட்டுவிட்டு
கல்லாப்பெட்டியின் கலக்கல்களுக்குள்
கலந்து கலைந்து போய்விடாதீர்கள்.
உங்கள்
வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக