ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஊசியிலைக்காடுகள் (2)

ஊசியிலைக்காடுகள் (2)
=======================================ருத்ரா.


உயரமான சிலையில் இருந்தும்
பொறாமைப்படுகிறார் படேல்
தமிழனாக பிறக்கவில்லையெ என்று
கலைஞர் சிலையைப்பார்த்து.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____‍‍‍‍‍______________________________

இப்போது மோடிஜிக்கு
ரிசர்வ வங்கியே கோமாதா !~
ஓட்டுகளை அங்கிருந்து தான்
"கறக்க "வேண்டியிருக்கிறது.

___________________________________


தராசு தட்டுகள்
தள்ளாடுவது ஏன்
ம.நீதி மய்யத்துக்கு?


_____________________________________


தானும் ஒரு கலைஞராக வந்து
கலைஞர் சிலை திறப்புவிழாவுக்கு
கண்ணியம் காட்டினார் ரஜினி.


_____________________________________


சேக்கிழார் போகட்டும்.
எட்டுத்தொகை பற்றி கேட்டால்
எட்டுவழிச்சாலை என்கிறார்.
"தமிழுக்கு அமுது என்று பேரா?"
என்றால் "டாஸ்மாக்"என்கிறார்.

_______________________________________


குப்தர்களின் காலம் பொற்காலம்
என்கிறது வரலாறு.
படித்து படித்து புளித்து விட்டது.
இப்போது சொல்லுங்கள்
"குட்காக்களின்" காலம் பொற்காலம்.

________________________________________


இவ்வளவு நாள் கழித்து
ஸ்டெர்லைட்டுக்கு
ஆயுத பூஜை கொண்டாடுகிறார்கள்.
"கோடரியை" வைத்து.

________________________________________


கணீர் கணீர் என்று
தமிழிசை தமிழில் பேசினாலும்
சமஸ்கிருதம் தான் கேட்கிறது.


---------------------------------------------------------------

வளர்ச்சி வளர்சசி என்கிறார்கள்.
சாமியார்கள் சந்தோஷித்தார்கள்.
"நம் தாடி வளர்வதற்குத்தான்
இத்தனை நிதித்திட்டங்களா இங்கு?"

------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக