வியாழன், 27 டிசம்பர், 2018

விடியல்

விடியல்
=================================ருத்ரா இ.பரமசிவன்


மாற்றன் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அதனால்
என் வீட்டுத்தோட்டத்தின்
முல்லை கருகுவதைப்பற்றிக்
கவலையில்லை.
இதனால் தான்
தமிழனால்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று பாட முடிந்தது.
எல்லா மொழிகளையும்
அவன் தமிழ் மொழியாகவே பார்த்தான்.
இந்த"உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" தான்
அவனை
"யாதானும் ஊராமால் நாடாமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு?"
என்று
கேள்வி கேட்க வைத்தது.
தமிழன் அல்லாதவன் என்று
எவருமே இல்லை
தமிழனுக்கு!
நாளைக்கே
ஒரு " ஹன்சிகா மோத்வானி "யின்
மகன்
(ஹன்சிகா அவர்களே மன்னித்துக்கொள்ளுங்கள்)
எப்படியோ
ஒரு சினிமாப் படத்தில் வெற்றிபெற்று
"நானே ஆள்போறேன் பாரு"
என்று
கோட்டைக்குள்ளும் வந்து
கோலோச்சலாம்!
அவனைப்பொறுத்த வரை
சிந்து வெளித்தமிழனே
இந்தியாவில் மட்டும் அல்ல‌
உலகத்திலேயே
பெருஞ்சுடராய் வலம் வரமுடியும்.
இந்த மொட்டைச்சிந்தனைகள் எல்லாம்
காக்கைகள் போல் கலைந்து விடும்.
விடுங்கள்.
அதோ பாருங்கள்!
"பேட்ட"
அதன் மூன்றாம் தவணை டீஸர்
கலக்கு கலக்கு என்று
கலக்கப்போகிறது.
இப்போ அந்த உச்சி நட்சத்திரம்
அமெரிக்காவில்.
நாளை "பேட்ட"
நாளை மறுநாள் "கோட்டை"
(ஸாரி ..அதுவும்
"கோட்ட"ங்கிற அடுத்தப்படம் தான்.
எப்போதுமே நீ தாண்டா
"மொட்ட"
என்றும் அடுத்தடுத்து படம் வரலாம்.
ஓட்டுகள் எல்லாம்
கஞ்சாப்பொட்டலங்களாய்
இந்த போதையை மடித்து சுருட்டி
வைக்கப்பட்டிருக்கும் வரை
மிகவும் மோசமான அர்த்தங்கெட்ட‌
வார்த்தை
நம்மிடம் இருக்குமென்றால்
அதன் பேர்
"விடியல்"

==================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக