வியாழன், 6 டிசம்பர், 2018

பிரம்மசூத்திரம் எனும் நாத்திக சூத்திரம் (3)

பிரம்மசூத்திரம்  எனும் நாத்திக சூத்திரம் (3)
===================================================ருத்ரா


பிரம்ம சூத்திரத்தில் மொத்தம் 555 சூத்திரங்கள் உள்ளன.இவற்றை "குறு வரிகள் " எனலாம்.ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் பிரம்மம் என்ற அது என்ன?
அதில் என்ன தான் இருக்கிறது.அதை எதைக்கொண்டு விவரிப்பது என்ற நுண்மையான ஒரு தவிப்பு தென்படுகிறது.உண்மையான ஞானம் பிரம்மம் பற்றியது மட்டும் தானா? ஞானத்தின் மூளித்தன்மையில் ஞானத்தின் முழுத்தன்மை எப்படி வெளிப்படும்.? பிரம்மம் என்றால் என்ன என்று முழுமையாக எவரும் ஞானம் எட்டியதில்லை என்ற ஒரு ஏக்கம் நிறைந்த தேடல் ஒவ்வொரு சூத்திரத்திலும் தளும்பி நிற்கிறது.

கீழே வரும் சூத்திரங்களைப் பாருங்கள்.

(1) அததோ  ப்ரஹ்மஜிஞ்ஞாஸா 


"வாருங்கள் பிரம்மம் பற்றி அறியலாம்" என்று தொடங்குகிறது.

அத  அதஹ என்பதே "அததோ "ஆகி இருக்கிறது .
"அதாவது அதாவது ..."என்று இழுப்பது போல் தான் துவங்குகிறது.
பிரம்மம் என்பது என்று ஆரம்பித்தால் "ஏற்கனவே" நாம் பிரம்மத்தை அறிந்திருக்கிறோம் என்றும் இதைப்பற்றி மேலும் நாம் அறிவோமா க  என்று தானே தொடங்க வேண்டும்."அறிவு என்பதற்கு முன்னரே "இங்கு பிரம்மம்"இல்லை.பிரம்மம் என்பதற்குப்பிறகு தான் அறிவு அறியாமை  என்பவையெல்லாம் தோன்றியது என்று வானொலி எனும் வேதம் சொல்லியிருக்கிறது.எனவே பிரம்மம் பற்றிய ஞானம் பெறுவோம் என்று சொல்லும்போது நாம் பெற்ற ஞானத்தைக்கொண்டு பிரம்மம் அறியலாம்
என்று அது அர்த்தம் ஆனால் அது அனர்த்தம் அல்லவா.எது முன்? எது பின்?
ஞானமா? பிரம்மமா? முரண்பாடு துவங்கி விட்டது.

மளிகைக்கடையில் இஞ்சி இருக்கிறதா என்று கேட்டால் மஞ்சள் இருக்கிறது என்பார்கள்.அது போல் தான் இந்த "ஆத்திக"வியாபாரமும்."அஸ்த் "என்ற சொல் தான் அதன் வேர். அது இருக்கிறது என்ற பொருள் மட்டுமே "ஆத்திகம்"
அது எது? என்பதற்கு லட்சக்கணக்காய் சுலோகங்கள் தேவைப்படுகின்றன.
ஏதோ ஒன்று பெரிய்ய்ய்ய்யதாய் பிரமிக்க வைப்பதாய் இருப்பதை "பிரம்மம்"என்று சொல்லி விட்டார்கள்.ஆனாலும் அது எது? என்ற கேள்விக்கு
உரிய விடை "இல்லை."ஆத்திகம் நாத்திகத்தில் போய் முடியும் விளையாட்டு
இதுவே. பிரம்ம சூத்திரத்தின் இந்த 555 சூத்திரங்களும் இப்படித்தான்

இஞ்சிக்கு பதில் மஞ்சள்
மஞ்சளுக்கு பதில் மிளகு
மிளகுக்குப் பதில் கடுகு
கடுகுக்குப் பதில் சுளகு
.........................................
சரி தான்
கடையைப்
பூட்டப்போகிறீர்களா?
சரி ..
சாவியை எடுங்கள்
சாவி இல்லை
பூட்டு இருக்கிறது.
...............

இப்படித்தான் (விஞ் ) ஞானம் எனும் சாவி இல்லாமலேயே பிரம்மம் எனும்
கனத்த பூட்டை காவல் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக