பிரம்ம சூத்திரம் எனும் நாத்திக சூத்திரம் (2)
====================================================ருத்ரா
பிரம்மம் என்பது கடவுளைக் குறிக்கிறதா? இல்லையா? என்பதை பிரம்ம சூத்திரம் கடைசிவரை சொல்லவே இல்லை.
அது இல்லை
இது இல்லை
அவன் இல்லை
அவள் இல்லை
இது இல்லை
இவன் இல்லை
இவள் இல்லை
எதுவும் இல்லை
எவனும் இல்லை
எவளும் இல்லை
பிறப்பு இல்லை
இறப்பு இல்லை
வர்ணம் இல்லை.
நாமம் இல்லை.
எல்லையில்லை
.............................
............................
இந்த "இல்லைகளை " சூத்திரங்களின் மாலையாக தொடுத்திருக்கிறார்
"பாதராயணர் "எனும் வியாசர்.உபநிஷதங்கள் சொல்லும் வரிகளே இந்த மாலையின் நாராக இருக்கிறது.வேதங்கள் என்பவை "வானொலிகள்".அந்த ஒலிகள் சுருதி எனப்படும்.மீண்டும் அவை சொல்லப்பட்டுள்ளபோது அவை
மனித நாக்குகள் செவிகள் மற்றும் நினைவுக்குள் தொடப்பட்டு உருவாக்கப் படுவதால் அவை "ஸ்ம்ருதிகள்"எனப்படும்.
பிரம்மம் எதுவென தெரியாது .உடல் தாங்கி உயிர் இருக்கும் விலங்கு அல்லது மனிதன் மட்டுமே நமக்குத் தெரியும்.இவற்றை இயக்குவது எது என்பதும் தெரியாது.ஆனால் பிரம்மம் எனும் வெளிப்பொருளை (பரம்பொருளை ) அடையாளம் காணவேண்டும் என்றால் இந்த மனிதன் விலங்கு பூமி வானம் காற்று நீர் சூரியன் இவற்றைக்கொண்டு தான் உணரவேண்டும்.ஆகவே எல்லாவற்றையும் சேர்த்து ஒரு உடல் (சரீரம்) போல இருப்பதை நாம் உணர வேண்டும்.அறிய வேண்டும் என்கிறது பிரம்ம சூத்திரம்.அதனால் இதற்கு
"சரீரகா சூத்திரம்"என்றே பெயர்.இதன் அடிப்படையில் வெளிப்பொருள்
(பராமாத்மா) உட்பொருள் (ஜீவாத்மா) இரண்டும் ஒன்றாய் நிரவி நிற்பதை
விளக்க முற்படும்போது பல முரண்கள் தோன்றுவதால் அவையெல்லாம்
வெறும் தோற்றம் அல்லது மறைப்பின் தன்மை (மாயா) என்று சொல்லப்படுகிறது.பிரம்மமும் ஆத்மாவும் ஒன்று என்று நிறுவ முயல்கிறது
பிரம்ம சூத்திரம்.அப்போதும் முரண்பாடுகள் முழுவதுமாய் விளக்கப்பட
இயலவில்லை.
அடுத்தக்காக "காரண காரிய"ங்களில் தெரியும் முரண்பாடுகள்.பிரம்மம் எல்லாம் படைத்தது என்றால் பிரம்மத்தைப்படைத்தது யார்? அல்லது எது?
இது "அறிவியல் ஒழுகலாறு"(லாஜிக்) பற்றிய சிக்கல் ஆகும்.விஞ்ஞானத்தில் "குவாண்டம் என்டேங்கில்மென்ட் " இதற்கு தீர்வு சொல்கிறது.ஆனால் இந்த
ஆத்மீக சூத்திரங்கள் "கல்பிதங்களை" (கற்பனைகள்)க்கொண்டு முட்டுக்கொடுக்கிறது. எப்படி என பார்ப்போம்.?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக