வியாழன், 6 டிசம்பர், 2018

ஒரு இசை வெளியீட்டு விழா

ஒரு இசை வெளியீட்டு விழா ==========================================ருத்ரா

உன் கால்களின் கீழ்
என்ன தட தட அதிர்வுகள்?
பாறைக்குழம்பு "புளிச்சென்று"
துப்பி விடப்போகிறதோ?
தீயின் லாவாக்கூந்தல்
வகிடு பிரித்துக்கொண்டு
ஓடி ஆழகு பார்க்கத்துடிக்கின்றதோ?
தெரியவில்லை.
சீஸ்மோகிராஃப் எனும்
"நடுங்கல் அளவைக்கருவி"
ரிக்டர் ஸ்கேல் ஆறோ ஏழோ என்று
வரைபடம் காட்ட ஆயத்தப்படுகிறது.
என்ன இந்த அதிர்ச்சி?
ஓ!
சூப்பர் ஸ்டார்
பாடும்  பாட்டில்
ஆடும் காளியாட்டமா இது?

"பேட்ட"
கோட்டை வரைக்கும்
போகுமா?
இல்லாட்டி
மேக் அப் கலைக்கும்
"கிரீன் ரூமோடு" சரியா?
அது "கிரீனா காவியா?"
அடுத்த இயக்குனர்
அவர் கண்ணில் படும் வரை தான்
இந்த பூகம்பம்.

===============================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக