"பேட்ட" ரெண்டாவது இசை வெளியீட்டு விழா
============================================================ருத்ரா
வழக்கம்போல்
சன் டி.வி யின்
ஒளிவெள்ளமும்
இசை வெள்ளமும்
ரெண்டு சாரைப்பாம்புகள்
பின்னிக்கொண்டு
டான்ஸ் ஆடுமே
அப்படி இருந்தது.
இந்த விழாவில்
ரஜனியின்
ரெண்டு விசிலடிச்சான் குஞ்சுகளின்
ஆரவாரமான பேச்சுகள்
நன்றாய் இருந்தன.
அந்த குஞ்சுகள் வேறு யாருமில்லை
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜாவும்
இசை இயக்குனர் அநிருத்தும் தான்.
படம் எடுக்கப்பட்ட கதை கூட
இன்னொரு திரைப்படக்கதை ஆகலாம்
போலிருக்கிறது.
ரஜனி அவர்களின் பேச்சு அப்படி.
இன்னும் மூன்று நாளில்
அவரது பிறந்த நாள்.
அதற்கு வாழ்த்த
ஒரு விவிவிவிவிவி...ஐபி
அங்கு வந்து அமர்ந்திருந்திருந்த
இருக்கையை கவனித்தோம்.
யார் என்று தெரியவில்லை.
இருக்கை காலியாகவே இருந்தது.
புதிர் முடிச்சு போட்டவர்
விஜயசேதுபதி.
ரஜனி ஒரு மகா மகா கண்ணியமானவர்
என்று நிறுவிக்காட்டினார்.
விஜயசேதுபதி ஒரு மகாநடிகர்
என்று "சான்று உரை" மூலம்!
ரஜனியின் பேச்சு மிக இயற்கையாய்
எந்த வித கிரீன் ரூம் பூச்சும்
இல்லாமல் இருந்தது
ஒரு சிறப்பு.
ஆனால் விஜயசேதுபதி
சொல்லும்போது
கடவுள் வந்து இருந்தால்
இவர் நடிப்பை அவரே பாராட்டியிருப்பார்
என்று குறிப்பிட்டார்.
அந்த காலியான சேரில்
கண்ணுக்குத்தெரியாமலேயே
உட்கார்ந்திருந்த அந்த
விவிவிவிவி...ஐபி
இப்போது யார் என்று புரிந்திருக்கும்!
திடீரென்று
அந்த இருக்கையில்
ஒரு காகிதம் வைக்கப்பட்டு இருந்தது.
யாரும் இல்லை.
அப்படி அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?
"நான் ஒரு பிரபஞ்சத்துக்கு கண் சிமிட்டினால்
அது நூறு பிரபஞ்சத்து வெளிச்சம் தரும்.
நானே ஒரு சூப்பர்ஸ்டார் ..
இங்கே எப்படி இன்னொரு சூப்பர் ஸ்டார்?
சரி இருந்துட்டுப்போகட்டும்
வாழ்த்துக்கள்.
கடவுள் எல்லாம் கிடையாது.
அதனால தான் இந்த சேர்
இப்போது மட்டும் இல்ல
எப்போதும் காலியாத்தான் கிடக்கும்!
ஆன்மீகம்ங் கிறதும் ஒண்ணுமில்ல.
இவர் அதெல்லாம் சொல்றதுக்கு
காரணம்
சிக்மண்ட் பிராய்டு சொல்லிவிட்டார்.
அவருக்குள் இருக்கிற உள் முரண்பாடுகளே அது."
யாரோ கட கடவென்று ஓடி
எழுதியிருந்த காகிதத்தை
மேடையில் வாசிக்க கொடுத்தார்.
அவர் வாசித்தார்
"பாபா பாபா பாபா ...பாபா..."
விசில்கள் பறந்தன.
ஆம் இன்னும்
விசில்கள் பறந்துகொண்டே இருக்கின்றன.
=====================================================
(கொஞ்சம் கற்பனை சேர்த்தது)
============================================================ருத்ரா
வழக்கம்போல்
சன் டி.வி யின்
ஒளிவெள்ளமும்
இசை வெள்ளமும்
ரெண்டு சாரைப்பாம்புகள்
பின்னிக்கொண்டு
டான்ஸ் ஆடுமே
அப்படி இருந்தது.
இந்த விழாவில்
ரஜனியின்
ரெண்டு விசிலடிச்சான் குஞ்சுகளின்
ஆரவாரமான பேச்சுகள்
நன்றாய் இருந்தன.
அந்த குஞ்சுகள் வேறு யாருமில்லை
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜாவும்
இசை இயக்குனர் அநிருத்தும் தான்.
படம் எடுக்கப்பட்ட கதை கூட
இன்னொரு திரைப்படக்கதை ஆகலாம்
போலிருக்கிறது.
ரஜனி அவர்களின் பேச்சு அப்படி.
இன்னும் மூன்று நாளில்
அவரது பிறந்த நாள்.
அதற்கு வாழ்த்த
ஒரு விவிவிவிவிவி...ஐபி
அங்கு வந்து அமர்ந்திருந்திருந்த
இருக்கையை கவனித்தோம்.
யார் என்று தெரியவில்லை.
இருக்கை காலியாகவே இருந்தது.
புதிர் முடிச்சு போட்டவர்
விஜயசேதுபதி.
ரஜனி ஒரு மகா மகா கண்ணியமானவர்
என்று நிறுவிக்காட்டினார்.
விஜயசேதுபதி ஒரு மகாநடிகர்
என்று "சான்று உரை" மூலம்!
ரஜனியின் பேச்சு மிக இயற்கையாய்
எந்த வித கிரீன் ரூம் பூச்சும்
இல்லாமல் இருந்தது
ஒரு சிறப்பு.
ஆனால் விஜயசேதுபதி
சொல்லும்போது
கடவுள் வந்து இருந்தால்
இவர் நடிப்பை அவரே பாராட்டியிருப்பார்
என்று குறிப்பிட்டார்.
அந்த காலியான சேரில்
கண்ணுக்குத்தெரியாமலேயே
உட்கார்ந்திருந்த அந்த
விவிவிவிவி...ஐபி
இப்போது யார் என்று புரிந்திருக்கும்!
திடீரென்று
அந்த இருக்கையில்
ஒரு காகிதம் வைக்கப்பட்டு இருந்தது.
யாரும் இல்லை.
அப்படி அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?
"நான் ஒரு பிரபஞ்சத்துக்கு கண் சிமிட்டினால்
அது நூறு பிரபஞ்சத்து வெளிச்சம் தரும்.
நானே ஒரு சூப்பர்ஸ்டார் ..
இங்கே எப்படி இன்னொரு சூப்பர் ஸ்டார்?
சரி இருந்துட்டுப்போகட்டும்
வாழ்த்துக்கள்.
கடவுள் எல்லாம் கிடையாது.
அதனால தான் இந்த சேர்
இப்போது மட்டும் இல்ல
எப்போதும் காலியாத்தான் கிடக்கும்!
ஆன்மீகம்ங் கிறதும் ஒண்ணுமில்ல.
இவர் அதெல்லாம் சொல்றதுக்கு
காரணம்
சிக்மண்ட் பிராய்டு சொல்லிவிட்டார்.
அவருக்குள் இருக்கிற உள் முரண்பாடுகளே அது."
யாரோ கட கடவென்று ஓடி
எழுதியிருந்த காகிதத்தை
மேடையில் வாசிக்க கொடுத்தார்.
அவர் வாசித்தார்
"பாபா பாபா பாபா ...பாபா..."
விசில்கள் பறந்தன.
ஆம் இன்னும்
விசில்கள் பறந்துகொண்டே இருக்கின்றன.
=====================================================
(கொஞ்சம் கற்பனை சேர்த்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக