பிரம்ம சூத்திரம் எனும் ஒரு நாத்திக சூத்திரம்
===========================================
ருத்ரா இ பரமசிவன்
வேதம் என்பது ஒலிகள்.இதை சுருதி என்பார்கள்.முதன் முதலாய்
யார் செவியில் விழுந்ததோ அதைப்பற்றிய விவரம் சரியாக தெரியவில்லை.முதன் முதலில் யார் நாவு அதை ஒலித்ததோ அதுவும் சரியாக சொல்லப்படவில்லை.ஏனெனில் வேதம் மனித நாவினால்
ஒலிக்கப்படவில்லை.அப்படி ஒலிக்கப்பட்டால் அது எச்சில் ஆகி விடும்.
அது தீட்டு ஆகிவிடும்.அதனால் வேதங்கள் வானத்திலிருந்து ஒலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே வேத அபிமானிகளின் கருத்து.
வேதம் என்பது அறிவு.அறிவு என்றால் எல்லோராலும் அறியப்பட வேண்டியது என்று தானே பொருள்.அறிதல் என்பது கேள்வி அதாவது
"ஒலிப்புகளை" கேட்டல் என்றும் எதையும் ஏன் எப்படி என்று வினாக்கள் தொடுத்தல் என்றும் பொருள்.தமிழில் அறிவு என்பது இத்தகைய கேள்வி தான்.இந்த முறையில் மனிதன் தன்னையும்
தன் சூழலை (இயற்கை)யும் அறிகிறான்."கேள்,கல்" என்ற இரு
"பகுதி"(உறுப்பிலக்கணத்தின் படி)ச் சொற்களைக் குறிப்பதாகும்.
இப்படி "அறிவு" கேள்வி கல்வி (கேள் கல் எனும் வினைகளின்)
எனும் பெயர்ச்சொற்களாகி தமிழில் வழங்கப்படுவது ஒரு சிறப்பியல் கூறு ஆகும்.ஆனால் வேதம் என்பது தமிழில் "மறை" அதாவது "சொல்லாமல் மறைத்துக்கொள்"என்று பொருள் படும்படி தான்
வழக்கில் உள்ளது.இது ஏன்?
நான்கு வேதங்கள் எனும் நான்கு வகை அறிவுப்பாடுகள் ஏன்
"மறைபாடுகள்" ஆகி நான்மறை என அழைக்கப்படுகிறது.?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக