சனி, 8 டிசம்பர், 2018

"தலித்"தா? "தனித்"தா?

"தலித்"தா?  "தனித்"தா?
=====================================ருத்ரா

மனிதநேயத்தை
காமிரா கண் வழியே காட்டி
உலக நோக்கர்களையே
திசை திருப்பிய‌
இளைய புயலாய் சீறும்
திரு.பா.ரஞ்சித் அவர்களே.
பட்டியல் மக்களை
ஒரு கூட்டணியாக‌
நீங்கள் திரட்டும்
உங்கள் முயற்சி
அநியாயங்களை எதிர்த்து
கொப்புளிக்கும்
மனித நீதியின் குரல் தான்.
அதில் ஐயமே இல்லை.
இதுவும்
ஒரு "நோட்டா" இயக்கம்
போன்றது தான்.
ஆனால்
மனுநீதிக்காரர்களின்
சீண்டலில்
இந்த ஜனநாயகம்
மனுநீதிக்காரர்களின்
ராட்சச வாயின் கோரப்பற்களிலேயே
இரையாகப்போய்விழும்
அபாயம் ஒன்று இருப்பதை
நீங்கள் உணர்ந்துகொள்ளவில்லையா?
ஏற்கனவே
பட்டியல்காரர்கள்
என்ற முத்திரையே
எங்களுக்கு அசிங்கம் என்று
ஒரு பிரிவை
பிரித்து ஆளும் தந்திரம் காட்டி
அந்த தலித் எனும்
சிறுத்தைக்கயிற்றை
அறுத்துக்காட்டுவதில்
முனைந்து விட்டனவே
அந்த மூர்க்க சக்திகள்!
உங்கள் மொழியில்
விடியல் என்றால்
காலாவும் கபாலியும் தானா?
ஜிகினாக்களின் "பஞ்ச்"களில்
அவை வெறும் சில்லறைச்சத்தங்களாக‌
தேய்ந்து மறைந்த பின்னும்
மீண்டும்
ரஜனியில்லாமல்
இந்த ஜனநாயகத்தைக் கதாநாயக‌னாக்கி
தேர்தல் கால்ஷீட் வாங்கி
ஒரு வினோத திரைப்படம்
ஓட்டலாம் என்று எண்ணிவிட்டீர்களா?
அனுமனையே
தலித் ஆக்கி
அந்த அடித்தட்டு மக்களின்
பக்தியையே நெருப்பாய் ஆக்கி
ஒரு "லங்கா தகனத்தை"
ஓட்டுப்பெட்டிக்குள்
ஒத்திகை பார்க்கும்
இவர்களின் "பாசிச"க்காட்டின்
அந்த பொறியில் விழவா
உங்கள் இந்த‌
கோபமும் ஆவேசமும்?
ரஜினிக்குள் இருக்கும்
காவி நாயகனை
காவிய நாயகன் ஆக்கிவிடும்
பாமர அலைகளை
எதிர்த்தா உங்கள் எதிர்நீச்சல்
வென்றுவிட முடியும் என்று நம்புகிறீர்கள்.
ரஜினியை
கபாலியின் நிழலாக இல்லாமல்
நிஜமான கபாலியாய் உலவச்செய்ய‌
உங்களால் முடியுமா?
சினிமாவை இயக்கி வைப்பது வேறு.
சித்தாந்தங்களை உயிர்க்க வைப்பது வேறு.
மானுட இயக்கத்தின்
இலட்சிய வீரன் அவர்களே!
திரு.பா.ரஞ்சித் அவர்களே!
காட்டாறு ஆகுவதை விட‌
நின்று நிகழ்த்தும் வரலாறே
வீரியமான ஆறு!

==========================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக