சனி, 29 டிசம்பர், 2018

அடங்க மறு

அடங்க மறு
==========================================ருத்ரா
கருஞ்சிறுத்தை
உறுமல்களையெல்லாம்
கபாலியாக்கி
கல்லாப்பெட்டியை
ரொப்பிக்கொண்ட சூப்பர்ஸ்டாரைப்
பார்த்து
சூடு போட்டுக்கொண்ட‌
ஜெயம் ரவி
வழக்கமான போலீஸ் மசாலா
வில்லன் மோதல்களை
சினிமா ஆக்கியிருக்கிறார்.
அவருடைய ஃபார்முலா நடிப்பில்
வழக்கமான ஃப்ரேம்
பொருத்தப்பட்டு
நரம்பு துடிக்க நடித்திருக்கிறார்.
அடங்க மறு எனும்
சொற்றொடர் இப்படத்திற்கு
பொருந்தவில்லை.
கொசு அடிக்க‌
பீரங்கிகள் பயன்படுத்தப்படுவதில்லை.

சமுதாயச்சுரண்டல்
என்பதை மட்டுமே
வேதமாகக்கொண்ட‌
ஆண்டவன் எனும்
ஆளுபவனுக்கும்

வாய்மைக்குள்
பொய்மையை
பொந்து வைத்திருக்கும்
ஆண்டவன் எனும்
கற்பனைக்கும்
மனிதன் மண்டியிடவேண்டும்.

அறிவை உதறிவிட்டு
அவர்கள் ஆணவத்தில்
அடங்கிக்கிடக்க வேண்டும்.
சாதி மத சங்கிலிகளில்
பிணைக்கப்பட்டு
மண்டியிடவேண்டும்.

இதை எதிர்த்து முழங்கு.
என்று
இக்குரலின் நெருப்புப்பிழம்போடு
வெளிப்படுவதே
"அடங்க மறு" என்பது.
வில்லன்களை வைத்துக்கொண்டு
பொம்மைப்போர் செய்யவா
இச்சொல்லை பயன்படுத்துவது?

சாஞ்சா சாயிற பக்கம்
சாயிற செம்மறியாடுகள்
இந்த சினிமா ரசிகர்கள்
என்பதை மட்டுமே
கருத்தில் கொண்டு
உருவான இப்படத்தில்
ஆழமான அந்த சொற்கள்
ஆழமற்ற சல சலப்புகளை
மட்டுமே சத்தம் காட்டுகின்றன.
மானிட நேயமிக்க‌
சமுதாய உருவம் சமைக்க‌
எவருக்கும் இங்கு முனைப்பு இல்லை.
அண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை
பூச்சாண்டி காட்டி காதில்
பூ சுற்றியிருக்கிறார்கள் நிறைய.

பொழுதை நாம் போக்கமுடியாது.
பொழுதே போ என்று நாம் அதை
விரட்ட முடியாது.
அது நம்மை விரட்டி விரட்டி
ஓட வைப்பதைத் தான்
"பொழுது போக்கினோம்"
என்று சொல்லிக்கொள்கிறோம்.
அப்படி
பொழுது போக்க
பொருத்தமான படம் இது.
அரைத்த மாவையே அரைக்கும்
கதை என்றாலும்
அலுப்பு தட்டவிடவில்லை
ஜெயம் ரவி.
பெயருக்கு ஏற்ப அவர்
"ஜெயித்து"விட்டர்.

===================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக