சனி, 1 ஏப்ரல், 2023

சூரி

 சூரி

_____________________________________________

ருத்ரா





இருபத்தி அஞ்சு பூரி

ஒரே வாயில் தின்று விட்டு

இன்னொரு இருபத்தி அஞ்சை

"தட்டில் போடுய்யா"

என்று அசுர சாதனை செய்த

காமெடி கிங்க்

நம் நெஞ்சையெல்லாம் 

பிழிந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்.

வெற்றிமாறனின் கெமிஸ்ட்ரியில்

இந்த படைப்பு உலகமே

ஒரு எரிமலையை வெற்றிலை போட்டு

குதப்பிக்கொண்டு

கொப்புளிக்கத்தயாராக இருக்கிறது.

நாப்பது அம்பதுகளில்

இந்தியாவின் சுதந்திர மூச்சு

நசுக்கப்பட்டுக்கொண்டே தான்

வெள்ளைக்காரனின் பந்தாவுக்கு

மூவர்ணம் காட்டிக்கொண்டிருந்தது.

அதற்குள்ளேயே இருந்த நான்குவர்ணம் கூட‌

பின்னணியில் நாகப்பாம்பின் நச்சுவை

பீறிட்டுக்கொண்டிருந்தது.

அப்பாடா!

கம்யூனிசத்தைக்கூட‌

இந்த ஜெயமோகன் வந்து படம் காட்டும்

அளவுக்கு ராமராஜ்யம் வந்து

கவரி வீசும் கதையா?

இல்லை..இல்லை இல்லவே இல்லை.

பொய்மான்களை புரியவைத்துவிட்டார்

இயக்குநர்.

ராமனின் அம்பு எல்லாம் யாருக்காக என்றும்

புரியவைத்துவிட்டார்.

அது சீதா பிராட்டியாரின் நெஞ்சை 

அல்லவா துளைத்தது.

அது ராவணனுக்காக‌  இல்லை என்பதும்

புரிந்து போயிற்று.

மக்கள் சபை முடக்கம் என்பதும்

புரியாத மாதிரி புரியும் வசிஷ்ட சூத்திரம் தான்.

சூரி என்றால் 

வெறும் பூரி இல்லை

என்று

வெற்றிமாறன் ஒரு புது சிகரம் தொட்டுக்

காட்டி நிற்கிறார்.

ஒரு படைப்பாளி

ஆயிரம் போராளிகளின் பாசறை

என்று 

நிமிர்ந்து நிற்கிறார்.


________________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக