உயிர்ப்பின் புள்ளி அண்டத்தில்
பிண்டம் காட்டி சொல்கின்றது.
ஆண்டி மேட்டரைக்கொண்டு
மேட்டரை அழித்தால்
அண்டமும் இல்லை
பிண்டமும் இல்லை.
கட்வுள் காட்டினான் அதோ
சொர்க்கத்தின் வாசல்.
அங்கு பிறப்பும் இல்லை.
இறப்பும் இல்லை.
அப்படியென்றால்
படைப்பு எதற்கு?
உயிர்ப்பு எதற்கு?
இறப்பும் எதற்கு?
கேள்விகள் விஞ்ஞானம் ஆயின.
கேள்வி மறுப்புகளே
அஞ்ஞானமாய் எஞ்சின.
ஒரு தாடி வளர்த்த
சாமியார் சொன்னார்.
அஞ்ஞானமாய் இரு.
அதுவே பெரும்பேரானந்தம்.
உயிர்ச்சங்கிலியின் உட்கணிதம்
உரித்து உரித்து சொன்னது.
மனிதா!மனிதா!
உன் நேனோ செகண்டுகளில் தான்
இந்த பிரபஞ்சத்தின்
பிண்டமே
இங்கே எல்லாவற்றையும்
"படம் வரைந்து பாகங்களைக்குறிக்கிறது"
அந்த கடவுளின் எட்டுக்கைகளும்
ஒன்பதாயிரம் நாக்குகளும்
எண்பதாயிரம் முகங்களும்
இங்கே வயிற்றைக்கலக்கி
பிம்பம் காட்டுகின்றன.
ஆனாலும் ஆராய்ச்சி பேப்பர்கள்
குவிந்து கொண்டே இருக்கின்றன.
கடவுளோடு துலாபாரம் போட்டதில்
கடவுள் இன்னும்
மேலே மேலே மேலே தான்
ரைபோஸோம் அணுத்துடிப்பின்
அமிலக்கசிவுகள்
எம் ஆர் என் ஏ அல்லது
டி ஆர் என் ஏ என்று
சங்கிலி கோர்த்துக்கொள்கிறது.
டி ஆக்சி ரைபோ ந்யூகிளிக் ஆசிட் என்று
சொட்டும் இணைப்புகளில்
இங்கு எல்லாம்
ருத்ரம் சமஹம் பாடுவதாய்
பெரிய பெரிய உடுக்கைகளை
குலுக்கு குலுக்கு என்று குலுக்குகிறார்கள்.
பூஜ்யங்களின் பூர்ணாகுதி என்று
புல்லரித்துக்கொள்கிறார்கள்.
சிக்மண்ட ஃப்ராய்டு எல்லாவற்றையும்
துடைப்பம் கொண்டு பெருக்கி
சுத்தம் செய்கின்றார்.
வெள்ளைத்தாளிலும் கூட
ரத்த நரம்புகளின் மயிரிழைகள்....
_____________________________________
சேயோன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக