டிங்கரிங்க்
________________________________________
ஒரு சிறுகதை
ஏதோ ஒரு நிகழ்வு
புளிச்சென்று
துப்பி விட்டது போல் தான்.
போங்கடா
நீங்களும் உங்கள் வாழ்க்கையும்
என்று தான்
நம் முகத்தில் அது கரி பூசும்.
அது கரியல்ல.
நம் கண்கள் எப்போதும்
பூட்டிய சன்னல்களாக
பார்வைகள் செத்த ஒரு சவப்பெட்டியை
வைத்து சிமிட்டிக்கொண்டிருக்கும்
ஒரு மரணத்தூக்கத்தை
மறுவிழிப்புக்கு
அடித்து நொறுக்கும்
எழுத்துக்களின் ஆதங்கமும் ஆவேசமும் தான்
அது.
புதுமைப்பித்தனும்
ஜெயகாந்தனும்
ஒன்றுக்கும் உதவாத அந்த
தகரடப்பா பிரம்மத்தை
டிங்கரிங்க் செய்ய வந்தவர்களே.
இப்போதாவது உங்கள்
முகம் தெரிகிறதா பாருங்கள்!
____________________________________________________
சேயோன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக