சனி, 8 ஏப்ரல், 2023

பேனா?

 யாருக்காக அழுதான்?

___________________________________


ஜெயகாந்தன் வீசிய 

இந்த கேள்வித்தீ

எந்த திரியிலிருந்து 

பற்ற வைக்கப்பட்டது

என்று இன்னும் எவரும் 

புரிந்திருக்க முடியாது.

வெறும் நரம்புமண்டல மனிதனுக்கும்

சமுதாய மனிதனுக்கும்

இடையே உள்ள அந்த பள்ளத்தாக்கு

அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு அல்ல.

மனிதப்பிறப்பு

கடவுளின் வரம் என்று

கொண்டாடும்போது

அதன் அழுகையின் 

மொழி பெயர்ப்பில்

தத்துவத்தின் சிலந்திவலகள் 

ஆயிரம் ஆயிரம்.

யாருக்காக அழவேண்டும்?

யாருக்காக சிரிக்க வேன்டும்?

என்று திசைகள் புரியாத‌

ஒரு சூன்யப்பிழம்பு தான்

கர்ப்பத்தில் கரு பிடிக்கிறது.

உதைத்துக்கொண்டு பிறக்கிறதே!

பிறப்பதே போராட்டமாகி

போராட்டமே பிறப்பு ஆகும்

இந்த புதிர் தான்

அழுகையாயும் சிரிப்பாயும்

இந்த சமுதாயக்கண்ணாடியில்

முகம் பார்க்க வருகிறது.

அது தானே எல்லா மதங்களுக்கும் மதம்.

எல்லா கடவுளுக்கும் கடவுள்.

அவன் சிரிக்கிறானா? அழுகிறானா?

பேனா ஒன்று தான்.

அது விறைத்து நின்று

சோம்பல் முறித்துக்கொண்டதில்

பழமைவாத எலும்புகள் நொறுங்கிப்போகின்றன.

யார் அந்த பேனா?

ஜெயகாந்தனா? கலைஞரா?

அது பிரதிபலிக்கும் கடலே

இங்கு சமுதாய எழுச்சி!


_______________________________________________________

சேயோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக