வெள்ளி, 14 ஏப்ரல், 2023

விரல்கள்

 


நள்ளிரவு.

விசைப்பலகையில் 

எழுத்துக்களை 

விரல்கள் கொப்புளிக்கின்றன.

எங்கோ இருக்கும்

சுவர்கோழிகள் கூட‌

தங்கள் கனவுகளை

சிறகுகளில் தேய்த்து தேய்த்து

இசையமைக்கின்றன.

எழுத்தின் ஊர்வலம் தொடர்ந்தது.

ஒரு பரமார்த்த குருவின்

சீடர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது.

நாம் கடக்கப்போகும் ஆறு

தூங்குகிறதா? முழித்துக்கொண்டிருக்கிறதா?

ஒருவன் தீப்பந்தத்தை 

ஆற்றில் முக்கி எடுத்தான்.

அது சுர்ர்ரென்றது.

முழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அது தூங்கட்டும் 

அப்புறம் கடந்து போகலாம்

என்று அவர்கள் காத்திருந்தார்கள்.

இங்கு 

கணிப்பொறிகள் எப்போதும்

விழித்து விழித்துக் காட்டிக்கொண்டே

இருந்தன.

இவர்களும் பட்டன்களை தட்டி தட்டி

காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த ஜனநாயகத்தைக்கடந்து

அக்கரைக்கு போய்விடலாம் என்று.


_______________________________________________

சேயோன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக