ஈரோடு தமிழின்பன்
_____________________________________
கவிதைகளின்
கல்லாறு பரலியாறே!
கூழாங்கற்கள் போல
உருண்டு உருண்டு சென்று
பிரளயங்களை
சத்தமே காட்டாமல்
சத்தம் போடும்
சரித்திரத்தின் பொற்துண்டுகள்
அல்லவா
உங்கள் சொற்துண்டுகள்.
இந்த அண்டவெளியில் நாம்
தனியாய் இல்லை
அதோ அந்த ஏலியனும்
நம்மோடு தான் என்று
விஞ்ஞானிகள்
குடைபிடித்துக்கொண்டிருப்பார்கள்.
என்னை
எங்கோ ஏதோ ஒரு
இருட்காட்டில் தூக்கியெறிந்தாலும்
நான் தனியாக இல்லை.
என்னோடு அந்த
"தமிழின்பனும்"இருப்பான்.
இது டங் ஸ்லிப் இல்லை.
தமிழ் அன்பன் தமிழ் இன்பனாய்
என்னோடு இருப்பான்.
ஈரோடு என்ற உரிச்சொல்
கவிதைகளின் இதயம்.
அவனோடு அவனுக்குள்
துடித்துக்கொண்டிருப்பது அது.
தன்னைப்
பட்டை தீட்டிக்கொள்வதற்கா
பட்டுக்கோட்டையை இவன்
எழுதுகின்றான்?
சொல் இறகுகளின்
கோடி கோடி பட்டுப்பூச்சிகளின்
கவிதைக்கூடு மண்டலங்கள்
பிய்ந்துகொண்டு வருகின்ற
பிரசவ தருணங்களின் வலியுள்
தன்னை தைத்துக்கொள்வதற்கும் தான்
அவனைப்பற்றி இவன் எழுதுகிறான்
____________________________________
சேயோன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக