"குன்றியனார்"எனும் பெரும்புலவர் எழுதிய நற்றிணைப்பாடல் 239 ல் "அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்"
என்ற மிக மிக அழகும் இயற்கைவனப்பும் மிக்க வரியை எழுதியிருக்கிறார்."நண்டுகள் அந்த கடற்கரை மணல் மேட்டில் அந்த நீர் அலைகளுக்கே உரிய இயற்கை நாற்றத்துடன் ஆடி ஆடி வரும் அழகை ஒரு ஓவியமாக்கியிருக்கிறார். அதையே முதல் வரியாய்க் கொண்டு இந்த அகழ்நானூறு 35 ஐ எழுதியிருக்கிறேன்,
_________________________________சொற்கீரன்.
அகழ்நானூறு 35
_____________________________________________________
சொற்கீரன்.
"அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்"
ஞான்ற பழத்து தீக்குரல் அன்ன
ஞாயிறு தூங்கு குடதிசைக் கூந்தல்
அவள் விழி ஒப்ப கனன்று நோக்கும்.
ஆறு சுரத்த நெடுங்காடு இறந்தோன்
பொருள்வயின் அன்றொரு கற்றைத்திங்கள்
அவளொடு தழீஇய ஒல்லா ஊழின்
அஞ்சுவரு இன்பில் முள்ளின் மூசு
காழ்த்த மரத்திடை ஞாழல் நறுவீ
புல்லிடை ஊரும் பூதங்காற்றில்
கல்லிடை எல்வீழ் கவின் மலி காட்சி
கவிழ்ந்து இமைகள் அவிழ்க்கும்
விழியாள் கீற்றென மின்னல் எறிந்தாள்
அவன் ஒருதனி நீளிடை மறித்து.
__________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக