அகழ்நானூறு 36
____________________________________
சொற்கீரன்.
தொல் கபிலன் என்றொரு புலவன்
நற்றிணை ஆற்றுப்படையென பகன்றான்
வாழ்வின் கூர்முனை வடிக்கும் விழுப்புண்
ஆயிரம் செருவென்ற வாலியன் ஆக்கும்.
வேட்டல் வண்பொருள் வெஞ்சுரம் ஏகும்
அத்தம் நண்ணிய திங்கள் மறைக்காட்டில்
அவள் ஆங்கு உதிர்த்த ஒரு பூ
சிரிப்பின் விரியல் சிவணிய சில்முகை
ஏந்தி நீந்தினான் பாழின் நீண்ட
கல் பொரி மடல் வறள் நெடும் ஆறே.
கோடு ஏந்திய பெரு மாகளிற்றினை
உழுவை தொலைச்சிய பின்றை
களிறு பச்சூண் தின்றபின் எஞ்சிய
வள்ளுகிர் முணக்கிய நுண்பரல் எக்கர்
வீ சொரிந்தன்ன புள்ளி நீழல் வறுகண்
வடக்கிருந்த முற்றிய முதுவீழ் சான்றோர்
தொல்லிய ஊழுடன் தெள்ளிய காலை
"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்
பொருதிரை நிவப்பின் வரும் யாறு" அன்ன
கறங்கு வெள்ளருவி நுண்டுளி போழ்ந்து
கணம் தொரு கணம் தொரு உடையுபு
இன்னுயிர் நீட்டிய நுண்வரி எழுதி
நுழைபடுத்தாங்கு நுவலிய சொல்லி
கொல்லறம் ஓப்பி நல்லறம் வேட்ப
உள்ளிய திண்ணியர் மாண்பின் ஓர்ந்த
நற்றமிழ் அருஞ்சொல் ஆள்தல் ஓர்மின்.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக