அகழ்நானூறு 34
______________________________________
சொற்கீரன்
எல்லை போகிய புல்லென் மாலை யென
பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த
பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி
களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு
சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.
காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும்
வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்
வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்
நோதல் செய்த நீர்மையில் அவனும்
புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல
பரி சால உகள காலிடை போழ்ந்தும்
நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை
தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக