புதன், 5 ஏப்ரல், 2023

நம் "தம்மிழ்".

 நம் "தம்மிழ்".

___________________________________________

சொற்கீரன்.



வரலாறு என்றால்

மீனும் பன்றியும் சிங்கமும்

வந்து மறுபடியும் 

மனிதனை வெறும் விலங்கு தான்

என்று சொல்வதா?

வானத்திலிருந்து வேதம் வந்தது

என்று சொல்வதெல்லாம்

சோமக்கள் காய்ச்சும்போது

வந்த நொதிப்பு தானே.

பாரசீகத்து அவெஸ்தா மொழிப்பாடல்கள்

ரீங்காரம் செய்தது தானே 

ரிக் வேதம்.

வேய்தம் எனும் அந்த 

தர்ப்பைப்புல் கூரையின்

ஒவ்வொரு கீற்றும்

இரவல் இரைச்சல்களே.

சிந்து ஆறு என்பதே

தமிழ் ஆறு தான்.

மண்ணில் வேர்பிடித்த தமிழ்

உலகம் எல்லாம் பரவி ஒலிக்கும்

நாவு ஆனது.

நாவின் அசைவே லேங்குவேஜ் ஆனது.

பேசு என்பதே பாஷை ஆனது.

தமிழ் தந்த உலக ஒலிப்புகளே

செயற்கையாய் செய்த சமஸ்கிருதம் ஆனது.

ஒரு ஒலிக்கு ஒரு எழுத்தே போதும்

என்று உலக ஒலிப்புகளை 

கோர்த்த தமிழ் 

இடத்துக்கு இடம் என்று 

பல ஒலிப்புகளை வகைபிரித்தது.

ஆனால் வேர் மொழி தமிழ்

அந்த நான்கு வகை ஒலிப்புகளையும்

ஒன்றாய் தன்னுள்

கிளைத்து செழித்து அடர்ந்து அகன்று

ஒலி பரப்பிக்கொண்டிருக்கிறது.

வேர் மறைந்து தானே உயிர்த்துக்கொண்டே இருக்கும்.

இந்த கிளைகளும் இலைகளுமே

பல் ஒலிகளை சல சலப்பு செய்து கொண்டிருக்கும்.

இந்த உயிர் மூச்சை 

தம் பிடித்து கொண்டிருப்பதே

நம் "தம்மிழ்".


_____________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக