ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

அகழ்நானறு நானூறு 39

 





அகழ்நானறு நானூறு 39


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________________


 சொற்கீரன் 




 பலகோட் பலவின் பல்சுளை மாந்தி


 கிளிநிரல் வானின் கொடுவரி காட்ட‌


 பொறி பூத்தன்ன செங்கோட்டியாழ


 ஒலிப்பெயல் ப‌ண்ணிய நரல்வது கேட்டன‌ன்.


 நல்முகை ஒட்பூ அவள் அவிழ்  இண‌ர் இறைய‌


 நறுந்தாதென பானாட் கங்குலும் முற்றியவாறு


 முளிஇருள் இலஞ்சிச் சுனைய இன்குறி


 பெயர்ந்து கடாஅய ஒண்குறி தொடுத்து


 ஒளியின் முள்குபு இருளின் ஆங்கே


 கல்லென் இழிதரும் புல் ஒலி பரிமா  


உளை அலரியின் படுமணி  இரட்ட


 நீளிடை அத்தம் நெடு வழி நீந்தினன்.



___________________________________________________

குறிப்புரை

------------------------------ 

அகநானூறு எனும் சங்கத்தமிழ் இலக்கியம் மூழ்கி முத்துக்குளிக்காத தமிழ் அறிஞர்கள் இல்லை.அதிலும் கவிஞர்களுக்கு அகழ அகழக்கிடைக்கும் தேன் சுவை ஊற்று ஆகும்.நான் அப்படியொரு தேன் குளியலில் களித்து எழுதிய என் சங்கநடைச்செய்யுட்கவிதைகளின் தொகுப்பே "அகழ்நானூறு"ஆகும்

.என் அன்பான "எழுத்து" நண்பர்கள் இதனைப்படித்து இன்புற‌

அழைக்கின்ரேன்.

என்புடன் சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக