மூங்கில் காடு
____________________________________
சேயோன்.
வண்டுகளுக்காக காத்திருக்கின்றன.
வண்டுகளும் காத்திருக்கின்றன.
துளைகள் வழியே
பிரபஞ்சம் வழியும் நாட்களுக்காக.
மௌனம் சதை பிய்ந்து தோலுரிந்து
தேன் மழையை கொட்டுவதற்காக.
காதலில் காமம் தீப்பற்றும்
இடைவெளியில்
அந்த பட்டாம்பூச்சிகள்
பொசுங்கி விடாமல்
பொலிவு காட்ட
கண்ணுக்கு மறைவாய் நின்று
தூரிகையோடு காத்திருக்கும்
பிக்காஸோக்களின் உயிர்ப்பூச்சுகள்
அங்கே உலவிக் கொண்டிருக்கின்றன.
கிருஷ்ணனை அங்கே புன்னகைக்க
விடுபவர்களே!
அந்த மரங்களில் கிளைகளில் பூக்களில்
அவற்றின் மகரந்த மூச்சுகளில்
ஏதேனும் உண்டா நான்கு வர்ணம்?
அப்புறமும் அந்த புல்லாங்குழல்கள்
ஏன் பிளவுகளை சங்கீதங்கள் ஆக்குகின்றன?
_________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக