புதன், 5 ஏப்ரல், 2023

(அகழ்நானூறு 34)

 


கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,

நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,

நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்

புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,

வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5

பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,

கால் என மருள, ஏறி, நூல் இயல்

கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்

வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!

ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை 10

ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,

அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி

முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,

எல்லை போகிய புல்லென் மாலை,

புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், 15

கழி படர் உழந்த பனி வார் உண்கண்

நல் நிறம் பரந்த பசலையள்

மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.  



தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்

அகம் 234

__________________________________________________



அகழ்நானூறு 34

______________________________________

சொற்கீரன்


எல்லை போகிய புல்லென் மாலை யென‌

பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த 

பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி 

களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு

சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.

காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும் 

வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்

வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்

நோதல் செய்த நீர்மையில் அவனும் 

புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல‌

பரி சால‌ உகள காலிடை போழ்ந்தும்

நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை

தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.


_____________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக