புணரி விலங்கின் அகல் இரு முந்நீர்
விசும்பு தோய் உருகெழு திரைகள் மேவ
குடமும் குணமும் கைக்கொளீஇய
துறையாவும் சூழ்முற்றிய செருவின்
திருவாய் கிழி துணி நுடங்க முரல்வ
முடித்து நெடுநிலம் பற்றிய பின்
நிலம் தரத் தெரிந்து குடையும் திருப்பிய
செங்கொற்றச் செழும்பேர் பாண்டியன்.
மதுரைக்காஞ்சியின் மாங்குடி மருதன்
மறம்படுத்த மள்ளற் பாண்டியன்
மடம்படுத்த கேண்மையின் ஒருபால்
அடர்செறி செரு ஆங்கு வென்றிட்ட போதும்
தோற்றவருக்கே நிலம் மீட்டு ஈந்தனன்.
தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுண்டு
தமிழ் வேள்வி சிறக்கவே நிலந்தரு திருவின்
நெடியோன் ஆயினன் பல்யாக சாலை
முதுகுடுமியின் கொற்றவனும் ஆயினன்.
நான் மறையை திறந்தால் தெரிவது
தமிழே தமிழே தமிழன்றி வேறிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக