ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

விடுதலை

 



விடுதலை

_____________________________________________‍

ருத்ரா



அந்த உடுக்குச்சத்தங்களிலிருந்தும்

அந்த  பாஞ்ச சன்ய சங்கு முழக்கங்களிலிருந்தும்

சோமக்கள் எப்படி காய்ச்சுவது

அதற்கு எப்படி தீ மூட்டுவது

அதில் எப்படி மாமிசங்களை வறுத்து தின்பது

அந்த போதை மண்டைக்குள் ஏறி

கிலுகிலுப்பை ஆட்டிச்சொல்வதையெல்லாம்

எப்படி வானத்தின் உளறல்கள் என்று கூறி

அதை தெய்வங்களாக்கி

மீண்டும் மீண்டும் நெய் ஊற்றி 

தீ வளர்த்து தீ வளர்த்து

புலம்பித்தீர்த்ததை எல்லாம்

வைத்து பூதம் காட்டி வேதம் காட்டி

அங்கு மண்ணின் மைந்தர்களுக்கு

வர்ண வர்ணமாய்

சங்கிலி மாட்டி விலங்கு பூட்டி

அதை இதிகாச புராணங்கள் ஆக்கி...

பயம் வளர்த்த தீயின் ஆரண்யங்களில்

அறியாமையின் இருட்டுக்கு

ஆயிரம் சித்திரங்கள் தீட்டி தீட்டி..

இன்னும்

அந்த சிக்கிமுக்கிக்கல்லில் 

சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்

விடுதலைப்பொறியின்

சிறகுகளை பறக்கவிடாமல்...

பாழ்பட்டுக்கிடக்கும் இந்த

தேசத்தில்

அறிவின் விடுதலை என்ற சொல்

ஒலிப்பதே மகா மகா பாவம்

என்று மண்ணொடு மண்ணாய் 

மக்கிக்கொண்டிப்பதற்குத்தான்

இங்கு மக்கள் என்று பெயரா?


________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக