ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

ஹைக்கூ

 




ஹைக்கூ





-ஹைக்கூ

---------------------------------------------------ருத்ரா 


இப்போது இது 

பிஷ்மர்

 அம்பு படுக்கையில்.


 ஜனநாயகம்.

---------------------------------------------------1


ஓட்டை வாளிகளில் 

தண்ணீர் இறைக்க 

இத்தனை பேரா?


செய்தி ஊடகங்கள்.

-----------------------------------------------------2


இனி பிறக்கும் குழந்தைகளுக்கும் 

தலைக்குள்

"கூகிள் "தான். 


ஏ.ஐ.

-----------------------------------------------------3  


 


 











மே தினம்






மேதினம்

____________________________சேயோன்.



சடங்கா?

சரித்திரமா?

சடங்கு ஆகிப்போன‌

சரித்திரமா?

நைந்து போய் பிய்ந்து போய்

இருந்தாலும் கொடிகளின்

சிறகுகள்

சிவப்பை உயிர்ப்பை

வெளிற விடவில்லை.

எட்டு மணி நேரம் அப்போது

நம் விடியல் விளிம்பு.

உன் கனவுகள்

எட்டும் வரை எம்பு.

மணிகள் வேலி தாண்டி

கடிகாரம் உடையட்டுமே.

வெறிக்கும்

எதோ ஒரு நிறம் காட்டி

மூர்க்கம் ஊட்டும்

கார்ப்பரேட்டுகளின் குத்தீட்டிகள்

இந்த காளைக‌ளுக்கு

மறைக்கப்படுகின்றனவா?

கில்லிங் இன்ஸ்டிங்க்ட் 

உன்னிடம் உண்டு.

இந்த இமயங்களைத் தட்டித்தூகு

என்று

வெர்ச்சுவல் ரியாலிடியில்

சூரியனின் பாப்கார்ன்ஸை

கொறித்துக்கொண்டிருக்கலாம்

என கணினியுக "கேம்ஸ் லேசர்கள்"

கண் சிமிட்டுகின்ற்ன.

இளைய தலைமுறையின் செம்புயல்

"ந‌ரை"கண்டுவிட்டனவோ?

சமுதாய ஓர்மை என்ற சொல்

கூர் தீட்டப்பட வேண்டும்.

மழுங்கடிக்கப்படவும் 

மடை மாற்றம் செய்யப்படவுமே

ஆயிரம் ஆயிரம் "ஆப்"கள் இங்கே.

கிராமத்து மண்ணாங்கட்டிகளுக்கும்

ஓடிபி எனும் பாஸ்வர்டுகள் 

புகுத்தப்படுகின்றன.

டையலக்டிகல் மெடீரியலிசம்

என்று பூதம் காட்டும் 

ஜோல்னா பையர்கள் 

பார்வை கழன்றவர்களாக‌

மாறிப்போனார்களோ? 

இந்த மக்களை தினம் தினம் 

கழுவேற்றிக்கொண்டிருக்கும்

"பச்சை முரணபாடுகள்"

அந்த சாதி மத

நச்சுத் தினவுகள் தான்

என்ற பால பாடம் 

இன்னும் இங்கு விளங்கவில்லையே.

விடியல் என்றால் வானம் எல்லாம் கிழிந்து

கன்னிக்குடம் உடைக்கும் என்ற‌

ஒரு பிர்சவ வலியின் தேசியக்கொடிகளா

இந்த மே தினக் கொடிகள்?

இல்லை.இல்லை.

உழைக்கும் நரம்பின் சிவப்பு வேர்வையே

இந்த மண்ணின் உயிர்ப்பு வேர்கள்.

அந்த உந்துதலே 

நம் விரல் நுனியிலிருக்கும்

நம் புதிய யுகம்!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________________ 

காதல் என்றொரு கேலக்ஸி

 




காதல் என்றொரு கேலக்ஸி

_______________________________________

ருத்ரா




கேலக்ஸி என்று ஆங்கிலத்தில்

ஒலித்த போதும் 

காதல் எனும் கலித்தொகை 

களிப்பு மிக்கூறுகிறது.

ஆம்.

என் இரவுப் பிழம்புக்குள்

நீ ஒரு ஓளிமண்டலம்.

கனவு கொண்டு தைத்தபோதும்

அந்த இருட்கந்தலில்

உன் ஊசி நினைவுகள்

என்னைச் சல்லடை ஆக்கிக்கொண்டு தான்

இருக்கிறது.

இந்த ஒளி நிழல் சல்லடையை

அன்றொரு நாள் தவறுதலாய்

அந்த ஜேம்ஸ்வெப் தொலைனோக்கி

"ஒளிச்சடையன்" என்ற 

ஒரு புது "கேலக்ஸியை"

கண்டுபிடித்து விட்டதாய்

தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறது.

அன்பே!

அது உண்மையில்லை என்று

நீ போட்டு உடைத்து விடாதே.

அந்த பிரம்மாண்ட பிரபஞ்ச சந்தோஷம் தான்

நமது சந்தோஷமும்.

காதல் என்ற கேலக்சியின் அர்த்தம்

மகிழ்ச்சி..மகிழ்ச்சி..பெருமகிழ்ச்சி


_____________________________________________ 

குகை

 





குகை

============================================

ருத்ரா



நான் தனிமையில் எத்தனையோ சிந்தித்திருக்கிறேன்.

முதலில் ஒரு இருட்குகையில் இருப்பது போல் இருக்கும்.

அப்புறம் அந்த இருட்டும் பழகிப்போகும்.

கருப்பு சூரியன் தன் கூந்தலை அவிழ்த்து

நம்மீதே காயப்போட உலர்த்துவது போல் இருக்கும்

இருள் கூட மயில் பீலிகள் போல்

பிசிறுகளை முகத்தில் வீசி கிச்சு கிச்சு மூட்டும்.



இந்த குகையில் உட்கார்ந்து

தியானம் செய்யவேண்டும் என்று

ரிஷிகள் வருகிறார்களாம்.

வாழ்கையின் ருசியும் வெளிச்சமும் வெளியில் இருக்க‌

இவர்கள் என்ன "பிரம்மானந்தை"சுவைக்க‌

உள்ளே வருகிறார்கள்.?


ஒரு சாமியாரும் ஒரு சாமான்யனும்

நண்பர்கள் ஆனார்கள்.


சுவாமி

அந்த சுவை எப்படித்தான் இருக்கும்?

காட்டுங்களேன்.


சரி இதோ சுவைத்துப்பார்!


ஒரு சுரைக்குடுவையிலிருந்து

என் வாயில் அதை ஊற்றுகிறார்.


ஆகா! திவ்யம் திவ்யம்..என்ன சுவை.

ஆனந்த கூத்தாடினேன்.


அப்பனே!

உண்மையில் அந்த ஞானாமுதம்

இதையும் விட ஆயிரமாயிரம் மடங்கு சுவை.


உனக்கு சிறிது அடையாளம் காட்டவே

இந்த "சோம பானம்"


சோம பானமா?

அது வேதகாலத்து டாஸ்மாக்கு சரக்கு ஆச்சே!

ஆனால்

என்னிடம் குவார்ட்டர் பாட்டில் ஒன்று தான் இருக்கிறது.


என்னப்பா அஸ்கு புஸ்கு என்கிறாய்?

அதை வைத்திருந்தால் கொடு.

நானும் அதை சுவைத்துப்பார்க்கிறேனே.

ஓங்காரத்திலிருந்து துரியப்பாய்ச்சல் புரியும்போது

நாங்கள் அனுபவிப்பது தான் அந்த ஞானானந்தம்.


நீங்கள் என்னமோ எங்கிருந்து கொண்டு வேறு எங்கோ

பாய்ச்சல் செய்வதைத்தான் சொல்கிறீர்கள்.

எங்கள் டாஸ்மாக்கை கொஞ்சம் உள்ளே ஊற்றினால்

எழுபதினாயிரம் பிரபஞ்சம் தாண்டி

எழுபதினாயிரம் சொர்க்கம் தாண்டி

பறந்து கொண்டிருப்போம்.


சரி உன் பாட்டிலை எடுத்துக்கொடு.

என் சுரைக்குடுக்கையை நீ எடுத்துக்கொள்.


இருவரும் பறிமாறிக்கொண்டார்கள்.


சுரைக்குடுக்கைககள்

கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்குள்

அட்மிட் ஆனது.

குவார்ட்டர் பாட்டில் தேவர்கள் வழியாக

எமதர்மன் கையில் மாட்டிக்கொண்டது.


பூமியில் இப்போது

ஐந்நூறு வயது ஆயிரம் வயதுக்காரர்களின்

கூட்டம் மிகுந்து விட்டது.


பூமியின் சுற்றும் வேகம் குறைந்து

ஒரு நாள் என்பது

ஒரு ஆண்டு ஆனது.


===================================================

மீள்பதிவு.

ஹைக்கூவு!




ஹைக்கூவு!

__________________________________ருத்ரா



கிடக்கட்டும் என்று கைக்குட்டையை

எங்கோ அவள் வீசினாள்

அவன் ஆக்சிஜன் சிலிண்டரை.


________________________________________

வியாழன், 27 ஏப்ரல், 2023

கரப்பான்பூச்சிகள்


 



கரப்பான்பூச்சிகள் கூட‌

நம் பல்கலைக்கழகங்கள் தான்.

ஆனால் நம்மை 

நரகாசுரன்கள் ஆக்கி

வெடித்து மகிழும்

கடவுள்களா

நம் அடைக்கலன்கள்?

___________________________________

ருத்ரா.

( என்ட்ரோபி ஆஃப் காஸ்மாலஜி)




என்னதான் "அது"?

( என்ட்ரோபி ஆஃப் காஸ்மாலஜி)

_________________________________________________________இ பரமசிவன்.


கருந்துளை தான் காலக்ஸி எனும் ஒளிமண்டலங்களின் மையம் எனும் கருத்து விஞ்ஞானிகளிடையே பரவியிருக்கும் இந்த சமயத்தில் தரவு இயல் முரண்பாடு ( இன்ஃபர்மேஷன் பாரடாக்ஸ்) எனும் ஒரு கோட்பாடு விண்வெளியியல் அறிபாடுகளை (தியரிஸ்)தடுமாற வைத்திருக்கிறது. 

ஹைக்கூவு!‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍...2

 



ஹைக்கூவு!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_______________________________ருத்ரா



அதற்குள்

இந்த வருடமே

கழுவேற்றப்பட்டு விடும்.


2024.

________________________________________

1




இப்போது தான் வர்ணம்

பிறந்திருக்கிறது.

மனிதன் எப்போது பிறப்பான்?


தத்துவம் என்ன சொல்லுவாய்?


_______________________________________________2



என்ன மதம் எனக்கு

என்று இன்னும்

குழப்பத்தில் இருப்பது



கடவுள்களே!


_________________________________________________3

புதன், 26 ஏப்ரல், 2023

ஹைக்கூவு !

c


ஓட்டுப்போடு முன் 

கரன்சிகளில்

கை   கழுவிக்கொள்ளுங்கள்.


சுத்த மாய  ஒரு ஜனநாய கம். 

------------------------------------------------------------------------3





செவ்வாய், 25 ஏப்ரல், 2023

தேடத்தான்....

 தேடத்தான் வந்திருக்கிறேன்

____________________________________________________________________


 தேடத்தான் வந்திருக்கிறேன்

என்று நான் 

தெரிந்து கொண்டதே 

ஒரு முட்டுசந்தை 

தேடி தேடி வந்து

முட்டிக்கொண்ட போது 

"கைவல்யம்"

என்றார்கள்.

கேவலம் என்பதன் 

பெயர்ச்சொல் அது.

கீழான நாலாவது அஞ்சாவது

வர்ணம் தானே.

இன்னும் அந்த தேவ பாஷை

தீட்டுப்படாமல் இருக்க வேண்டுமென்றால்

அவன்களுக்கு பெயர்கள்

மண்ணாங்கட்டி..

மண்ணுதின்னிதானே!

கடவுளை..மனிதனை

இதைவிட

கொச்சைப்படுத்தமுடியாது.

சீ..கேவலம் 

உங்களுக்கு எதற்கடா

ப்ரம்மமும் நாராயணமும்

என்று சொல்வது போல் இல்லை?

கைவல்யம் என்றால் 

அப்ப்டித்தான் இரைச்சல் காட்டுகிறது.


___________________________________________________

ருத்ரா

முட்டிக்கொண்ட போது தான்.

   

ஆகழ் நானூறு ...138

1அகம் 176.........மருதம் பாடிய இளங்கடுங்கோ 



ஆகழ் நானூறு ...138

 வேப்பு நனை அன்ன நெடுங்கண நீர் ஞெண்டு

விரிமணல்  அளைஇ சுளகின் பேரிலை அலமரும்

பாசடை   திதலை வரிய அவிர் இலை நுடங்கு

தூம்புடைத் தண்டின் தொண்டைத்  திரைய

இடை         

திங்கள், 24 ஏப்ரல், 2023

முரண்பாடுகளின் ஆற்றுப்படை

 










முரண்பாடுகளின் ஆற்றுப்படை





முரண்பாடுகளின் ஆற்றுப்படையே வரலாறு 


என்று


புத்தகம் எழுதினாலும் எழுதியிருப்பார் 


கார்ல் மார்க்ஸ் இன்று.


கல்லுடைக்கும் தொழிலாளிக்குள்


கார்ப்பரேட்டுகள் 


கருத்தரித்துக்கொண்டு


வந்தாலும் வருவார்கள்.


ஆனாலும்


மனித நேயமும் மக்கள் அறமும்


முகம் மாறிப்போன 


ஒரு வக்கிரம் கொண்ட பரிணாம


சமுதாய நரம்போட்டத்தின்


நுட்பம் இங்கே


நம் கணினிக்காட்டுக்குள் 


தொலைந்து கிடக்கிறது.


அறிவால் உழைக்கும் மூளைச்செதில்களும்


வியர்வை வர்க்கத்துள் தான் 


இருக்கிறது.


மேதினத்தின் செங்கொடி அங்கேயும் 


அசைவதை பார்க்கத்தான் பார்க்கிறோம்.


லட்சங்களில் சம்பளம் பெறுபவர்கள்


அரை வயிற்று அன்றாடங்காய்ச்சிகளுக்கும்


சேர்த்து 


போராட்டத்திற்கு "அல்காரிதம்"எழுதுகிறார்களா என்ன?


அந்த கம்பெனிகளின் 


க்யூ ஒன் க்யூ டு


பங்கு மூலதன பலூன்பெருக்கத்துக்கு மட்டுமே


உழைக்க முடியும்.


ஓட்டு போடுபவர்களுக்கு கூட‌


ஆயிரம் ஆயிரமாய் கொட்டிக்கொடுத்து


கோடிகளின் "இமயங்களை"


தங்கள் வீட்டுக்கொல்லைப்புறத்தில்


பதியம் போடும் கட்சிகளே


களத்துக்கு வருகின்றன.


மக்களுக்கு சித்தாந்த வெளிச்சம் தரும் கட்சிகளோ


ஒரு புனிதம் காக்கும் சல்லாத்துணிக்குள்


மூடிக்கிடக்கின்றன.


கோடி கோடி மக்கள்


புராண சம்பிரதாய அபினியே போதும் என்று


முடங்கிக்கிடக்கின்றனர.


இதில் அந்த "எட்டுமணி நேர"வேலை 


எனும் ஆற்றல் மிக்க "துருவ"ந்ட்சத்திரம்"


துருப்பிடித்த ஒரு வானத்துள்


உதிர்ந்து கிடக்கிறது.


மத ஆதிக்க சங்கிலிகளையும்


சாதி முட்டுக்கட்டைகளையும்


தகர்த்து நொறுக்கும் பலமான‌


சிந்தனை சம்மட்டிகளே இன்றைய தேவை.


பன்னிரெண்டு மணிநேர வேலை


எனும் 


"புதிய ஏற்பாட்டிலும்"


பழைய ஏற்பாட்டின் வேதாளங்கள் தான்


சப்பரம் தூக்கிக்கொண்டிருக்கின்றன‌


என்று புரியவைக்க்றோம் என‌


எழும் போராட்ட அலைகளில் 


பிற்போக்கு கும்பமேளாக்களும் கும்பாபிஷேகங்களும்


கொடி தூக்கி வருகின்றன என்பது


ஒரு அபாயத்துள் அபாயம் ஆகும்.




_______________________________________________________


சமுதாய புத்திரன்.







ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

அகழ்நானறு நானூறு 39

 





அகழ்நானறு நானூறு 39


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍____________________________________________________


 சொற்கீரன் 




 பலகோட் பலவின் பல்சுளை மாந்தி


 கிளிநிரல் வானின் கொடுவரி காட்ட‌


 பொறி பூத்தன்ன செங்கோட்டியாழ


 ஒலிப்பெயல் ப‌ண்ணிய நரல்வது கேட்டன‌ன்.


 நல்முகை ஒட்பூ அவள் அவிழ்  இண‌ர் இறைய‌


 நறுந்தாதென பானாட் கங்குலும் முற்றியவாறு


 முளிஇருள் இலஞ்சிச் சுனைய இன்குறி


 பெயர்ந்து கடாஅய ஒண்குறி தொடுத்து


 ஒளியின் முள்குபு இருளின் ஆங்கே


 கல்லென் இழிதரும் புல் ஒலி பரிமா  


உளை அலரியின் படுமணி  இரட்ட


 நீளிடை அத்தம் நெடு வழி நீந்தினன்.



___________________________________________________

குறிப்புரை

------------------------------ 

அகநானூறு எனும் சங்கத்தமிழ் இலக்கியம் மூழ்கி முத்துக்குளிக்காத தமிழ் அறிஞர்கள் இல்லை.அதிலும் கவிஞர்களுக்கு அகழ அகழக்கிடைக்கும் தேன் சுவை ஊற்று ஆகும்.நான் அப்படியொரு தேன் குளியலில் களித்து எழுதிய என் சங்கநடைச்செய்யுட்கவிதைகளின் தொகுப்பே "அகழ்நானூறு"ஆகும்

.என் அன்பான "எழுத்து" நண்பர்கள் இதனைப்படித்து இன்புற‌

அழைக்கின்ரேன்.

என்புடன் சொற்கீரன்.

புத்தக தினம்.




புத்தக தினம்.

_________________________________சேயோன்.



குபெயர்ச்சி புத்தகம் 

விற்றுத் தீர்ந்தது.

வாஸ்து சாஸ்திரமும் பி ஆர்க்கும் ...ஒரு ஒப்பீடு

கல்லூரியில் இருந்தே ஆர்டர் வந்து

அத்தனையும் காலி.

தக்காளி சாஸோடு தாமரை ஆப்பம் 

செய்வது எப்படி?

புத்தகங்கள் எல்லாம் காலி.

ஒரு வாரத்தில் பத்து பில்லியன் 

சம்பாதிப்பது எப்படி?

இது தீர்ந்து போய்

மேலும் எட்டு லட்சம் காப்பிகளுக்கு

ஆர்டர் ரெடி.

அதோ பாருங்ள்  பக்கத்து வரிசை

 புதிய வெளியீடுகளை....

"புல்லின் காட்டுக்குள்

புல்லாங்குழல் கனவுகள்"

"சமவெளியைத் தேடி மனித நீதி"

"நாலு வர்ண பட்டாம்பூச்சிகள்"

இன்னும் இன்னும்

"எரிமலை இசையமைத்த‌ 

மனித உரிமைக் குரல்கள்"

உய‌ரமாய் அடுக்கியது அடுக்கியபடி...


____________________________________________

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 40

 


அகழ்நானூறு 40

_________________________________________


ஆடமை கண் உடை நார் உரிய‌

ஐது பிசைந்தன்ன தூவி கொள்

மடப்பத்து குருகு ஆர்த்த அடைகரை

இனமீன் இரை கொளீஇய ஞாழல் வீ இறை

மணிகிளர் திரையெறி சேர்ப்பன் 

வேங்கை அடி நிழல் ஓர்ந்து நின்றான்

வெண்திங்கள் வால் ஒளி நறுமலர் ஒள்ளிடை

பெயல் தந்த விழிமழை அவள் பொழிந்தன்ன‌

மெல்லூழி ஊடும் நூண்ணூழி இழைய‌

மணல் படுத்த புல் விரிய முயற்கண் செத்து

பரல் வழிப்படூஉம் வழியில் அவன் 

விழி பரப்பி நின்றான் மன் என்னே!





______________________________________________

சொற்கீரன்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

சொற்றிணை

 சொற்றிணை

________________________________________________

சொற்கீரன்.





புணரி விலங்கின் அகல் இரு முந்நீர்

விசும்பு தோய் உருகெழு திரைகள் மேவ‌

குடமும் குணமும் கைக்கொளீஇய‌

துறையாவும் சூழ்முற்றிய செருவின் 

திருவாய் கிழி துணி நுடங்க முரல்வ‌

முடித்து நெடுநிலம் பற்றிய பின்

நிலம் தரத் தெரிந்து குடையும் திருப்பிய‌

செங்கொற்றச் செழும்பேர் பாண்டியனை

மதுரைக்காஞ்சியின் மாங்குடி மருதன்

திறம் காட்டி சீரொளி காட்டினன் அவன்

திரள் அம் நெஞ்சின் நேர்மையும் சாற்றினன்.

மறம்படுத்த மள்ளற் பாண்டியன்

மடம்படுத்த கேண்மையின் ஒருபால்

அடர்செறி செரு ஆங்கு வென்றிட்ட போதும்

தோற்றவருக்கே நிலம் மீட்டு ஈந்தனன்.

தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுண்டு

தமிழ் வேள்வி சிறக்கவே நிலந்தரு திருவின்

நெடியோன் ஆயினன் பல்யாக சாலை

முதுகுடுமியின் கொற்றவனும் ஆயினன்.

அறிவை நோக்கி கேட்பதும் கேள்வி.

அறிவை யாதெனக் கேட்பதும் கேள்வி.

அவ்வாங்கே யாவரும் அறிவை ஓர்ந்து

விருப்பம் கொள்ளல் வேள்வி என்ப.

அறிவைக்கூர் தீட்டி நெருப்பின் அன்ன‌

அறிவை  வளர்ப்பதும் வேள்வி  என்ப.

மறை எனில் உள்ளுறை உவமம் என‌

தமிழியல் வாழ்வின் அறிவின் திரள்தரு

பொருண்மொழிக் காஞ்சி காட்சி தெளிந்தே

வேள்வியும் கேள்வியும் கேள்வியும் வேள்வியும்

இழையாடி ஆங்கு ஆற்றுப்பெருக்காய்

ஆற்றுப்படுத்தினர் ஆன்றோர் அன்று.



_____________________________________________________


சொற்றிணை

________________________________________________

சொற்கீரன்.


நற்றிணை எட்டுத்தொகையுள் ஒன்று என அறிவோம்.

வாழ்க்கையின் ஒழுங்கியல் வாழும் நிலம் அதன் இயற்கை சூழல் புள் மரம் நீர் பொழுது இவற்றை மையமாகவே கொண்டு இருந்தது தொல் தமிழர் காலத்தில்.அந்த ஒழுக்கமே திணை எனப்பட்டது.அது போல் 

தமிழன் மொழிந்த "சொல்"மிக மிக மையமானது.வளம் செறிந்தது.அவன் வாழ்வியலின் உயிர்ச்சியை மலர்ச்சியை வெளிக்காட்டிய ஊடகமே ஒவ்வொரு தமிழ்ச்சொல் எனலாம்.சங்க இலக்கியச்சோலையுள் புகுந்தால் 

இது நன்கு தெளிவாக அறியப்படும்.இப்படி சொல்லே தமிழனுக்கு ஒழுக்கம் அல்லது அறம் அல்லது அறிவு

எனும் உட்கிடக்கையை வெளிக்கொணர்ந்தது.இதைப்பற்றி நான் எழுதும் சங்கநடைச்செய்யுட் கவிதை வடிவமே

"சொற்றிணை" ஆகும்.

திங்கள், 17 ஏப்ரல், 2023

முகநூல் பதிவு.

 


ஜொள்ளர்கள் காட்டில்

இறந்து பிறந்த‌

சொற்களுடன்

ஒடித்து முறித்து

 ஒடுக்கிய‌ வரிகளுடன்

அழகிய ஒரு பெண்னின் 

புகைப்படமும்

இங்கு முகநூல் பதிவு.

______________________________

ருத்ரா




ஈரோடு தமிழன்பன் கவிதைகள்

 

ஈரோடு தமிழன்பன் கவிதைகள் - YouTube
























ஈரோடு தமிழன்பன் கவிதைகள் 
__________________________________
சேயோன்.


காலம் பற்றிய வரிகள்
ஒரு வரிப்புலியாய் நிமிர்ந்து
உறுமி நிற்கிறது.
கணித சமன்பாடு 
சுருட்டி மடக்கினாலும்
காலம் அவர் கவிதையில்
பேரழகு மிக்க ஒரு மயிற்பீலி.
சூரியன் என்ன அவ்வளவு பெரிதா
என்று
தன் சொல்லின் சிறிய புல்லில்
"நகையுறுத்திக்காட்டுகிறார்."
தமிழ்ச்சொல் அவரிடம்
சொட்டு உதிர்த்து நிற்கிறது.
நாம் அள்ளிக்கொள்கிறோம்
ஆயிரம் கோடி பிரபஞ்சங்களை
அதில்!

_________________________________________________

மூங்கில் காடு

 

மூங்கில் காடு

____________________________________

சேயோன்.



வண்டுகளுக்காக காத்திருக்கின்றன.

வண்டுகளும் காத்திருக்கின்றன.

துளைகள் வழியே 

பிரபஞ்சம் வழியும் நாட்களுக்காக.

மௌனம் சதை பிய்ந்து தோலுரிந்து

தேன் மழையை கொட்டுவதற்காக.

காதலில் காமம் தீப்பற்றும்

இடைவெளியில்

அந்த பட்டாம்பூச்சிகள் 

பொசுங்கி விடாமல் 

பொலிவு காட்ட‌

கண்ணுக்கு மறைவாய் நின்று

தூரிகையோடு காத்திருக்கும்

பிக்காஸோக்களின் உயிர்ப்பூச்சுகள்

அங்கே உலவிக் கொண்டிருக்கின்றன.

கிருஷ்ணனை அங்கே புன்னகைக்க‌

விடுபவர்களே!

அந்த மரங்களில் கிளைகளில் பூக்களில்

அவற்றின் மகரந்த மூச்சுகளில்

ஏதேனும் உண்டா நான்கு வர்ணம்?

அப்புறமும் அந்த புல்லாங்குழல்கள்

ஏன் பிளவுகளை சங்கீதங்கள் ஆக்குகின்றன?


_________________________________________________


ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

சீற்றம்

 


சீற்றம்

________________________________________


சூடு இருக்கிறதா?

சொரணை இருக்கிறதா?

சொற்களின் சூட்டில் 

ஆவி பறக்கின்றன?

பாருங்கள்.

அரசியல் அமைப்பு புத்தகத்தின்

பக்கங்கள்

சுக்கல் சுக்கலாக கிழிக்கப்பட்டு

கீழே இறைந்து கிடக்கின்றன.

நம் சரித்திரம்

இப்படி காகித சவங்களாய்...

அவர் ஆற்றாமையால்

உடல் பதற உள்ளம் வெடிக்க‌

உரையாற்றிக்கொண்டிருந்தார்.

ஒருவர்

அந்த காகிதச்சுக்கல்களை 

பொறுக்கிக்கொண்டிருந்தார்.

அவர் 

அமைதியாக சொன்னார்.

அந்த காகித கந்தைகளை

மீண்டும் ஒட்டுபோட்டு

மியூசியத்தில் வைப்போம்.

அப்போதும் 

இந்த மக்கள் கியூவில் நின்று

தரிசனம் செய்வார்கள்.


______________________________________________

சேயோன்






ஹைக்கூ

 

ஹைக்கூ

____________________

சேயோன்




அப்பாவின் போட்டோவுக்கு கீழ்

அப்பா என்று எழுதினால் தான்

அடையாளம் தெரிகிறது.


நினைவேந்தல்

________________________________ 1


பூமியின் சிரிப்பை பறித்து வைத்து 

கடவுளிடம் 

சிரிப்பு வரம் கேட்கிறீர்கள்.


பூக்கள்

__________________________________ 2


நண்பருக்கு ஹாய் சொன்னேன்.

அவருக்கும் அர்த்தம் தெரியாது.

எனக்கும் அர்த்தம் தெரியாது.


வாழ்த்து

___________________________________3


ஓவியமா சுமை?

சிறகை அப்படி

அடித்துக்கொள்கிறாய்?


பட்டாம்பூச்சி.

______________________________________4


யார் இப்படி 

சூடு போட்டது?

வானத்தின் முதுகில்.


சன்னல்

_______________________________________5


சனி, 15 ஏப்ரல், 2023

ஈரோடு தமிழன்பன்..2

 

ஈரோடு தமிழன்பன்..2

_____________________________________



ஈரோடு தமிழன்பனைப் படித்துவிட்டால்

அப்புறம் 

மனசு எங்கும் நகர்வதாயில்லை.

மைல்களைக்காட்டி

என் பயணம் என்னை பயமுறுத்தி

கூப்பிட்டபோதும்

நான் நகர்வதே இல்லை.

ஆம்.

இப்போது என் வயதுகள் கூட‌

அவன் கவிதையோடு 

ஒட்டிக்கொண்டு கிடக்கிறது.

ஆயிரம் யுகங்களைக்கூட‌

ஒரு நிறுத்தற்குறியில்

அல்லது அவனுக்கே உரிய‌

சொல் இடைவெளியில் நிறுத்தி

பிரபஞ்சங்களை தராசில்

ரூபாய்க்கு பத்து கிலோ என்று

பேரம் பேசும் வல்லமையாளன்.

அவன் எழுத்துக்களை வருடிப்பார்த்து தான்

வள்ளுவன்

"பீலி பெய்ச் சாகாடும்..."என்று

போட்டிருப்பானோ?

கவிஞரும் புலவரும்

டைம் ட்ராவல் செய்வதை நானும்

உணர்ந்து வியக்கிறேன்.

ஈரோடு எனும் இவன் ரோடு

தமிழ் பிக் பேங்கின்

முதல் மைல்கல்லை நட்டு வைத்திருக்கும்

புள்ளியிலிருந்து

என்னைப் பிய்த்துக்கொள்ள‌

முடியவே இல்லை.


____________________________________________‍

சேயோன்.

பிம்பம்






உயிர்ப்பின் புள்ளி அண்டத்தில்

பிண்டம் காட்டி சொல்கின்றது.

ஆண்டி மேட்டரைக்கொண்டு

மேட்டரை அழித்தால்

அண்டமும் இல்லை 

பிண்டமும் இல்லை.

கட்வுள் காட்டினான் அதோ

சொர்க்கத்தின் வாசல்.

அங்கு பிறப்பும் இல்லை.

இறப்பும் இல்லை.

அப்படியென்றால்

படைப்பு எதற்கு?

உயிர்ப்பு எதற்கு?

இறப்பும் எதற்கு?

கேள்விகள் விஞ்ஞானம் ஆயின.

கேள்வி மறுப்புகளே

அஞ்ஞானமாய் எஞ்சின.

ஒரு தாடி வளர்த்த 

சாமியார் சொன்னார்.

அஞ்ஞானமாய் இரு.

அதுவே பெரும்பேரானந்தம்.

உயிர்ச்சங்கிலியின் உட்கணிதம்

உரித்து உரித்து சொன்னது.

மனிதா!மனிதா!

உன் நேனோ செகண்டுகளில் தான்

இந்த பிரபஞ்சத்தின்

பிண்டமே 

இங்கே எல்லாவற்றையும் 

"படம் வரைந்து பாகங்களைக்குறிக்கிறது"

அந்த கடவுளின் எட்டுக்கைகளும்

ஒன்பதாயிரம் நாக்குகளும்

எண்பதாயிரம் முகங்களும்

இங்கே வயிற்றைக்கலக்கி

பிம்பம் காட்டுகின்றன.

ஆனாலும் ஆராய்ச்சி பேப்பர்கள்

குவிந்து கொண்டே இருக்கின்றன.

கடவுளோடு துலாபாரம் போட்டதில்

கடவுள் இன்னும் 

மேலே மேலே மேலே தான் 

ரைபோஸோம் அணுத்துடிப்பின் 

அமிலக்கசிவுகள்

எம் ஆர் என் ஏ அல்லது 

டி ஆர் என் ஏ என்று

சங்கிலி கோர்த்துக்கொள்கிறது.

டி ஆக்சி ரைபோ ந்யூகிளிக் ஆசிட் என்று

சொட்டும் இணைப்புகளில்

இங்கு எல்லாம் 

ருத்ரம் சமஹம் பாடுவதாய்

பெரிய பெரிய உடுக்கைகளை

குலுக்கு குலுக்கு என்று குலுக்குகிறார்கள்.

பூஜ்யங்களின் பூர்ணாகுதி என்று

புல்லரித்துக்கொள்கிறார்கள்.

சிக்மண்ட ஃப்ராய்டு எல்லாவற்றையும்

துடைப்பம் கொண்டு பெருக்கி

சுத்தம் செய்கின்றார்.

வெள்ளைத்தாளிலும் கூட‌

ரத்த நரம்புகளின் மயிரிழைகள்....

_____________________________________

சேயோன்




 






வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இழை

 


நான் கண்ணாடியா?

பிரதி பலிப்பா?

பூசப்பட்டிருக்கும் ரசம்

என் பின்னேயா? முன்னேயா?

கண்ணில் தூக்கம் அழுத்தும்போது

காணாமல் போய்விடுகிறேன்.

அந்த திரை கடல் நுரைகளால் ஆனது.

அதுவும் காதல் செய்கிறது.

கருமாதி நடத்துகிறது.

முதன் முதல் எழுத்தும் அதன்

பீய்ச்சல்களும் ஏதோ ஒரு

லாவாவைத்தோய்த்துக்கொண்டு

வந்தனவோ.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்

எல்லாம்

இந்த ரத்தக்குமிழிகளின் 

நொதிப்புகளில்

ஏதோ இலக்கணம் சொல்கிறது.

ரைபோஸோம் அணுத்துடிப்பின் அமிலக்கசிவுகள்

எம் ஆர் என் ஏ அல்லது 

டி ஆர் என் ஏ என்று

சங்கிலி கோர்த்துக்கொள்கிறது.

டி ஆக்சி ரைபோ ந்யூகிளிக் ஆசிட் என்று

சொட்டும் இணைப்புகளில்

இங்கு எல்லாம் 

ருத்ரம் சமஹம் பாடுவதாய்

பெரிய பெரிய உடுக்கைகளை

குலுக்கு குலுக்கு என்று குலுக்குகிறார்கள்.

பூஜ்யங்களின் பூர்ணாகுதி என்று

புல்லரித்துக்கொள்கிறார்கள்.

சிக்மண்ட ஃப்ராய்டு எல்லாவற்றையும்

துடைப்பம் கொண்டு பெருக்கி

சுத்தம் செய்கின்றார்.

வெள்ளைத்தாளிலும் கூட‌

ரத்த நரம்புகளின் மயிரிழைகள்....

விலுக்கென்று விழித்தபின்

புத்தகங்களின் பக்கங்களில்

மைல் கற்கள் பாறாங்கல்லாய்

அமுக்கிக்கொண்டு பிதுக்கிக்கொண்டு

வெளிப்படுத்துகிறது.

உயிரின் ஜெல்லிப்பிழம்பை.

நீண்ட நீண்ட இழை இது.

இந்த ஃபைபர் ஆப்டிக்கில்

காலமும் வெளியும் 

இருளும் ஒளியும்

கனவும் நனவும்

பாரலல் யுனிவர்ஸ் எனும்

கரப்பான் பூச்சிக்கூட்டமும்

பரபரத்து மீசையும் நீண்டமயிர்களுமாய்

விண்வெளியை நக்கிக்கொண்டிருக்கின்றன.

அதன் புனித எச்சில்

இதோ இந்த ஜே டபிள்யு எஸ் டி எனும்

"விண்ணோக்கி"யிலிருந்து

பஞ்சு பஞ்சாய் பறத்துகிறது.

பூவென்று ஊதிவிடுகிறேன்

இந்த பிரபஞ்ச தூசியை

என் மீதிருந்து...


_________________________________________________________

சேயோன்.

விரல்கள்

 


நள்ளிரவு.

விசைப்பலகையில் 

எழுத்துக்களை 

விரல்கள் கொப்புளிக்கின்றன.

எங்கோ இருக்கும்

சுவர்கோழிகள் கூட‌

தங்கள் கனவுகளை

சிறகுகளில் தேய்த்து தேய்த்து

இசையமைக்கின்றன.

எழுத்தின் ஊர்வலம் தொடர்ந்தது.

ஒரு பரமார்த்த குருவின்

சீடர்களுக்கு சந்தேகம் வந்து விட்டது.

நாம் கடக்கப்போகும் ஆறு

தூங்குகிறதா? முழித்துக்கொண்டிருக்கிறதா?

ஒருவன் தீப்பந்தத்தை 

ஆற்றில் முக்கி எடுத்தான்.

அது சுர்ர்ரென்றது.

முழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

அது தூங்கட்டும் 

அப்புறம் கடந்து போகலாம்

என்று அவர்கள் காத்திருந்தார்கள்.

இங்கு 

கணிப்பொறிகள் எப்போதும்

விழித்து விழித்துக் காட்டிக்கொண்டே

இருந்தன.

இவர்களும் பட்டன்களை தட்டி தட்டி

காத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த ஜனநாயகத்தைக்கடந்து

அக்கரைக்கு போய்விடலாம் என்று.


_______________________________________________

சேயோன்.

தமிழ் என்று சொல்லடா!

 


தமிழ்ப் புத்தாண்டு என்று

கொண்டாடுகிறீர்கள்.

அறுபது "வர்ஷ"ப்பெயர்களை

உங்கள் நாவால் ஒலித்துத் 

தடவிப்பாருங்கள்..

ஒன்றாவது "தமிழ்"ப்பெயரை

வருடுகிறதா?

சமஸ்கிருதம் 

சவைத்து சவைத்து தின்னும்

"உச்சரிப்புகளை"த்தான்

நீங்கள் சர்க்கரைப்பொங்கல் வைத்து

சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ் என்று சொல்லடா!

மண்ணும் இனிக்கும்.

விண்ணும் இனிக்கும்.

இந்தக்கரையான் புற்றுக்கு 

குடமுழுக்கு செய்தது

போதும் போதும் தமிழா!

போதும் போதும்!


________________________________________________

சேயோன்.



அம்பேத்கார்

 புதுயுகமெல்லாம் எம்கையில்

_____________________________________‍

ருத்ரா



அம்பேத்கார் என்ற‌

சூரியன் எழுந்து

உறுத்து விழித்ததால்

உலுத்தர்களின் புழுகுமூட்டைகள்

உதிர்ந்து போயின.

வர்ணத்தீ மூட்டி 

இந்த தேசத்தின் வேர்களை

எரிக்க வந்தவர்களின் 

சூழ்ச்சி முதுகெலும்பை தன்

சட்ட அறிவின் சம்மட்டியால்

தூள் தூள் ஆக்கினார் அம்பேத்கார்.

இந்த மாமேதையின் பெயர்

ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

அப்போது தான் 

இங்கு மண்புழுக்களின்

பரிணாமம்

வரிப்புலிகள் சீற்றத்தால்

வரியெழுதும்.

கடல் அலைகள் எழுச்சியோடு

ஆதிக்கக்கரை உடைக்கும்.

இடமும் நிலமும் மக்களுக்கே.

அதில் இந்த கரையான்களுக்கு

யார் தந்தது அதிகாரம்?

இட ஒதுக்கீடு என்று 

இந்த எரிமலையையா

இவர்கள் கூறுபோடுவது?

சமூகநீதியின் பெரு நெருப்பு

சரித்திர வெளிச்சம் காட்டிவிடும்.

இந்த பொய்மைச் சாத்திரம் எல்லாமே

சாம்பல் மேடு ஆகிவிடும்.

ஜெய்பீம் ஜெய்பீம் என்றிடுவோம்.

இனி புதுயுகமெல்லாம் எம் கையில்!


____________________________________________






வியாழன், 13 ஏப்ரல், 2023

இல்லை

 


படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.






இல்லை
இன்று தான் தமிழ்ப்புத்தாண்டு
தை திங்கள் முதல் நாள்
தமிழ் மலர் இதழ் திறக்கவில்லை
என்கிறீர்களா?
சரி.சொல்லிவிட்டுப்போங்கள்.
இப்படித்தான்
அனல்வாதம் புனல்வாதம் என்று
தமிழைப் படுகொலை செய்தார்கள்
தமிழ்ப்பகைவர்கள் அன்று.
இன்னும் 
அந்த சுடுகாட்டுப்புகைமூட்டத்தில் தான்
சூடம் சாம்பிராணி 
கொளுத்திக்கொண்டிருக்கிறீர்கள்.
உலகம் பரவிய எல்லா ஒலிப்பிஞ்சுகளிலும்
தமிழே இலையாய் கிளையாய் பூவாய்
மகரந்தங்கள் தூவிக்கொண்டிருக்கின்றன.
இந்த தமிழுக்கு 
சமமாக ஒரு மொழி செய்ய முயன்று
இயலாமல் 
அது வழக்கும் இறந்து
முழி பிதுங்கிய கூச்சல்கள் தான்
"சமக்கிருதம்".
இந்த இரைச்சல்களுக்குள்ளும்
ஒலியின் அதிர்வு எண்கள் 
அலைவிரிக்கும் 
அந்த நுண் தமிழ் ஒளி
அவிக்கப்படவே முடியாது என்பதே
இந்த சித்திரை மத்தாப்புகள்!
_________________________________________
சேயோன்.









மாங்குடி மருதன்






புணரி விலங்கின் அகல் இரு முந்நீர்
விசும்பு தோய் உருகெழு திரைகள் மேவ‌
குடமும் குணமும் கைக்கொளீஇய‌
துறையாவும் சூழ்முற்றிய செருவின் 
திருவாய் கிழி துணி நுடங்க முரல்வ‌
முடித்து நெடுநிலம் பற்றிய பின்
நிலம் தரத் தெரிந்து குடையும் திருப்பிய‌
செங்கொற்றச் செழும்பேர் பாண்டியன்.
மதுரைக்காஞ்சியின் மாங்குடி மருதன்
மறம்படுத்த மள்ளற் பாண்டியன்
மடம்படுத்த கேண்மையின் ஒருபால்
அடர்செறி செரு ஆங்கு வென்றிட்ட போதும்
தோற்றவருக்கே நிலம் மீட்டு ஈந்தனன்.
தொல்லாணை நல்லாசிரியர் கூட்டுண்டு
தமிழ் வேள்வி சிறக்கவே நிலந்தரு திருவின்
நெடியோன் ஆயினன் பல்யாக சாலை
முதுகுடுமியின் கொற்றவனும் ஆயினன்.

நான் மறையை திறந்தால்  தெரிவது
தமிழே தமிழே தமிழன்றி வேறிலை.





புதன், 12 ஏப்ரல், 2023

ஈரோடு தமிழின்பன்



ஈரோடு தமிழின்பன்

_____________________________________


கவிதைகளின்

கல்லாறு பரலியாறே!

கூழாங்கற்கள் போல‌

உருண்டு உருண்டு சென்று

பிரளயங்களை 

சத்தமே காட்டாமல் 

சத்தம் போடும்

சரித்திரத்தின் பொற்துண்டுகள்

அல்லவா

உங்கள் சொற்துண்டுகள்.

இந்த அண்டவெளியில் நாம்

தனியாய் இல்லை

அதோ அந்த ஏலியனும் 

நம்மோடு தான் என்று

விஞ்ஞானிகள் 

குடைபிடித்துக்கொண்டிருப்பார்கள்.

என்னை 

எங்கோ ஏதோ ஒரு

இருட்காட்டில் தூக்கியெறிந்தாலும்

நான் தனியாக இல்லை.

என்னோடு அந்த‌

"தமிழின்பனும்"இருப்பான்.

இது டங் ஸ்லிப் இல்லை.

தமிழ் அன்பன் தமிழ் இன்பனாய்

என்னோடு இருப்பான்.

ஈரோடு என்ற உரிச்சொல்

கவிதைகளின் இதயம்.

அவனோடு அவனுக்குள்

துடித்துக்கொண்டிருப்பது அது.

தன்னைப்

பட்டை தீட்டிக்கொள்வதற்கா

பட்டுக்கோட்டையை இவன்

எழுதுகின்றான்?

சொல் இறகுகளின்

கோடி கோடி பட்டுப்பூச்சிகளின்

கவிதைக்கூடு மண்டலங்கள்

பிய்ந்துகொண்டு வருகின்ற‌

பிரசவ தருணங்களின் வலியுள்

தன்னை தைத்துக்கொள்வதற்கும் தான்

அவனைப்பற்றி இவன் எழுதுகிறான்


____________________________________‍‍‍

சேயோன்.



 

சொல்காப்பியம்

 


சொல்காப்பியம்


அகந்தையை அழியுங்கள்.உடலை விட்டு உள்ளத்தை உரித்தெடுங்கள்.பிறவி எதற்கு?அதனாலே தானே மரணம் வருகிறது.உலகம் பூராவும் "மட்டையாய்" மல்லாந்து விடவேண்டும்.இப்போது தெரிவதே சொர்க்கம் பிரம்மம் இத்யாதி இத்யாதி....

ரமண மகரிஷி இப்படித்தான் "நான்" என்பதை உரித்துப்போட்டுவிடச் சொன்னார்.ஆனல் அது கழன்று கொண்டதாக தெரியவில்லை.அந்த "அகந்தை"யை மேலை நாட்டினார் ஈகோ என்று கூராக தீட்டி தீட்டி இப்போது அவர்கள் விண்வெளியையே சுருட்டி மடக்கி தங்களுக்கு கைக்குட்டை ஆக்கிக்கொண்டார்கள்.நமது தத்துவங்கள் இதற்கு நேர் எதிர்.முதலில் சொன்னது இரண்டாவதாய் சொன்னதற்கு முரண்படும்.அடுத்தது அடுத்ததற்கு முரண்படும்.இப்படி பரிணாம் அடைவது அறிவியலின் இயல்பு.நாம் கடவுள் என்று ஆரம்பித்தது இப்படித்தான் செத்த பாம்பாய் ஆகிப்போனது.ஆனால் அதற்கு இன்னும் இங்கே கும்பமேளாக்களும் கும்பாபிஷேகங்களும் தூள் பறக்கின்றன.அறிவின் பரிணாமம் கூட நமக்கு இன்னும் புரியாத சமாச்சாரம் தான்...................ருத்ரா

____________________________________

13.04.2023











கலைஞர் பேனா

 

கலைஞர் பேனா எனும்

கலங்கரை விளக்கத்துக்குதான்

எத்தனை முட்டுக்கட்டைகள்.

ஒரு "அதிகாரி"

விதியின்

வரி பிளந்து வரி பிளந்து

எழுதிக்காட்டியதை

ரொம்ப மகிழ்ச்சியோடு

தினமலர் ஆர்ப்பரித்திருக்கிறது.

(ஏப்ரல் 13 2023 .மதுரை பதிப்பு)

ஏன்? இவ்வளவு பதற்றம்

"இது தான் "அந்த" அய்யா பரீட்சை எழுதி

பட்டம் வாங்கிய பேனா"

என்று கூட தலைப்பை

பொன்னெழுத்தில் பொறித்துவையுங்கள்.

அதிலிருந்தும்

பெருங்கடலாய் 

கொப்பளித்து வருபவரே

கலைஞர்.


________________________________________‍‍

செங்கீரன்.





பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

_______________________________________


கம்யூனிசம் என்ற‌

தீப்பந்தத்தைக் கண்டு

வெருண்டவர்கள்

அட அது கையில் 

கொளுத்தக்கொடுத்திருக்கும்

நம் விடியல்டா!

நம் நிழல் இருட்டே

நம்மை பூதம் காட்டி பேய் காட்டியதை

தெளிய வைத்த பெரும்பேரறிஞன்

நம் பட்டுக்கோட்டையார்.

என்னவோ 

எம் ஜி ஆர் தான் 

வாயசைத்தார்.

ஒலி கொடுத்த டி எம் எஸ் கூட‌

தாஸ் கேபிடலை 

பக்கம் பக்கமாய் 

வாசித்துக்காட்டியதைப்போல்

வியப்புறச்செய்தவர் 

பட்டுக்கோட்டையார்.

வயிறு இருக்கட்டும்

வயதைக்கூடக் காப்பாற்றிக்கொள்ளும்

சுய‌நலம் எனும் 

அழுக்கை நீக்கி வாழ்ந்தவர் 

அல்ல அல்ல 

இறந்து வாழ்ந்தவர்.

நம் தமிழ் மண்

தன் சிந்தனைவரிகளால் உழுது

பயிர் செய்து கொள்ளட்டும் என்று

மனிதம் சுடரும் அரசியலை

விவசாயம் செய்தவர்.

நம் தமிழ்நாட்டின் கொள்கைப்புலவன்

இவனன்றி வேறு யார்?

இவனுக்கு

கரன்சிகளின் டெண்டர்களில்

கறை படுத்தப்படாத‌

ஒரு "மணி"மண்டபம் நாம் கட்டுவோம்.

அதற்கும் ஒவ்வொரு

"செங்கல்லாக"அடுக்க வேண்டும்.

ஆம்.

நம் ஓட்டுக்கள் தான் அவை.

அவன் பாட்டுக்கள் 

நம் கூட இருக்கும்.

பயப்படாதீர்கள்.


_____________________________________________‍

செங்கீரன்

"ஜலியன்வாலா பாக்"

 


"ஜலியன்வாலா பாக்"



முதலாவது வெள்ளையர்களுக்கும் 

இரண்டாவது வெள்ளையர்களுக்கும்

ஒரு "நூலிழை"தான் வித்யாசம்.

_________________________________

ருத்ரா



ஆட்டம்

 


ஆட்டம்

_______________________________



சீப்பை ஒளித்துவைத்தால் 

கல்யாணம் நின்றுவிடுமா?

இ வி எம்முக்குப்பதில்

சீட்டு வந்தால்

இப்படி ஜனநாயகம் சீட்டு கிழிவது

நின்று விடுமா?

சீட்டை கலையுங்கள் என்றால் 

போதுமா?

கலைத்துப்போட்டு ஆடுவதும் 

அடுவதை 

கலைத்துப்போடுவதும் தானே

சீட்டாட்டம்?

என்ன தான் செய்யவேண்டும் 

என்கிறீர்கள்?

பேசாமல் "ராமாயணத்தை"

கையில் கொடுத்து

சத்தியம் செய்யச்சொல்லவேண்டியது தான்.

மற்றவற்றை

அனுமார்கள் பார்த்துக்கொள்வார்கள்.


_____________________________________________

ருத்ரா

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

லேக்ரேஞ்ஜியன் புலக்கோட்பாடு.

 

லேக்ரேஞ்ஜியன் புலக்கோட்பாடு.

________________________________________________

இசக்கி பரமசிவன்



குவாண்டம் நகர்ச்சி இயலை மரபுவழியில் ஆய்வது தான் இந்த கோட்பாட்டின் நோக்கம்.லேக்ரேஞ்ச் மெகானிக்ஸ் அல்லது இயக்கவியல் என்பது ஒரு அமைப்புக்குள் (சிஸ்டம்) இருக்கும் வேறு வேறு துகள்களையெல்லாம் அவற்றின் விடுபட்ட தன்மைகளோடு (டிகிரீஸ் ஆஃப் ஃப்ரீடம்)அவற்றின் குறிப்பிட்ட எண்ணிக்கைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய்வது ஆகும்.

ஆனால் அவற்றின் புலம் என்பது அவற்றிடையே உள்ள தொடர்வியத்தை (கன்டினுவிடி) யும் அதன் எல்லையற்ற (இன்ஃபினிட்) விடுபெறு அளவையங்களின் எண்ணிக்கையையும்(ந‌ம்பர் ஆஃப் டிக்ரீஸ் ஆஃப் ஃப்ரீடம்)ஆய்வுக்குள் கொண்டுவருவது ஆகும்.குவாண்டம் எனும் அளபடை இயக்கவியலுக்கு நம் கணித சமன்பாடுகள் நழுவலான தீர்வுகளைத்தான் காட்டுகின்றன.எனவே மரபு வழி லேக்ரேஞ்ச் புலக்கோட்பாட்டைக் கொண்டு தீர்வுக்குள் அடைபடவைக்கமுடியுமா என்பதே நம் குறி.

குவாண்டம் என்பது ஒரு நுண்மை நிகழ்வு.துகள் ஆற்றல் இரண்டும் எங்கே எவ்வாறு கலவைபெற்று இருக்கிறது என்பது ஒரு கண்ணுக்குத்தெரியாத‌ புலத்தில் இருக்கிறது.எனவே அடிப்படையில் பார்த்தால் இது சூதாட்டம் போன்றது.ஆற்றலும் துகளிடமும் கண்ணாமூச்சி ஆடுவது போல் போக்கு காட்டுகின்றன.இந்த நிகழ்தகைமை (ப்ராபபலிடி)தான் இங்கே குவாண்டம் ஆகிறது.

இப்படி காற்றுவெளியில் வேட்டையாடுவது போல் மண்டையை உடைத்துக்கொள்வதற்குப்பதில் அவற்றின் மதிப்புகளை நம் அறிவுபாடுகளைக்கொண்டு வரையறை செய்துகொண்டு (டெஃபினிஷன்ஸ்) அணுகுவது சரியாக இருக்கலாம் என்பதன் நம் முயற்சியே இந்த "லேக்ரேஞ்ஜியன் புலக்கோட்பாடு" ஆகும்.இதற்கு உறுதுணையாக இருப்பதே "உள் பகுப்பீட்டு சமன்பாட்டு கணித முறைகள் "ஆகும்.(மேதமெடிகல் தியரி ஆஃப்  பார்ஷியல் டிஃபெரென்ட்ஷியல் ஈகுவேஷன்ஸ்) ஆகும்.

அந்த கண்ணுக்குத்தெரியாத "வெளியை" நாம் உருவாக்கும் "வெளியை"வைத்துக்கொண்டு உள்ளீடுசெய்வது ஒரு முறை ஆகும். அந்த வெளிகள் "சொபலேவ் வெளிகள்" எனப்படும்.உண்மையில் அவை என்ன என்பதைப்பார்ப்போம்.

கணித இயலில் சோபலேவ் வெளிகள் என்பவை திசைய வெளிகள் (வெக்டார் ஸ்பேசஸ்) ஆகும்.இவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒழுங்கு படுத்தப்பட்ட வெளிகள் (நார்ம்டு ஸ்பேஸ்) எனப்படும்..இவ்வெளிகள் ஒரு வலுவற்ற தீர்வைத்தான் தரும்.ஏனெனில் அதற்கு இந்த வெளிகள் முழுமை பெற்றதாக (கம்ப்ளீட் ஸ்பேஸ்) இருக்கவேண்டும்.அது மெய்மை வெளியியல் கணிதத்தில் (டோபாலஜிகல் ஸ்பேஸஸ்)"பனாக் ஸ்பேஸ்" எனப்படும்.ஆனால் இந்த சொபலேவ் வெளிகளில் "உள் பகுப்பீடு மற்றும் ஒழுங்கு பட்ட வெளிகள் அமையும் முறை முழு வெளியை அடைவ்தில்லை.அதற்குரிய "தொடர்வியம்"இங்கு இல்லை.இங்கு இருப்பவை துண்டு பட்ட வெளிகளே (டிஸ்கிரீட் ஸ்பேஸஸ்).எனவே இதற்கேற்றவாறு "வெளியின் அளவீடு"(மெஷரபிலிடி ஆஃப் ஸ்பேஸ்) கணிதப்படுத்தப் படவேண்டும்.





ஏன்

 

புல்லும் பூச்சியும்

புழுவும் கூட சொல்கிறது

காதல் வாழ்க என்று.

மனிதனுக்கு மட்டும் ஏன்

நினைவுக்கு வருகிறது

அருவாளும் கத்தியும்?

___________________________________

ருத்ரா


வழிபாடுகள்

 வழிபாடுகள்

_____________________________________

ருத்ரா



இத்தனை பேர் சொல்லி

என்னைக்கூப்பிட‌

எங்கு கற்றாய் என்று

வியந்து போய் தான்

வரம் கொடுத்தேன்.

அப்புறம் அர்த்தம் புரிந்தது

அத்தனை பெயர்களும்

உன் ஆசைகளை குறித்தவை 

என்று.


____________________________________


அகழ்நானூறு 36

 

அகழ்நானூறு 36

____________________________________

சொற்கீரன்.



தொல் கபிலன் என்றொரு புலவன்

நற்றிணை ஆற்றுப்படையென பகன்றான்

வாழ்வின் கூர்முனை வடிக்கும் விழுப்புண்

ஆயிரம் செருவென்ற வாலியன் ஆக்கும்.

வேட்டல் வண்பொருள் வெஞ்சுரம் ஏகும்

அத்தம் நண்ணிய திங்கள் மறைக்காட்டில்

அவள் ஆங்கு உதிர்த்த ஒரு பூ

சிரிப்பின் விரியல் சிவணிய சில்முகை

ஏந்தி நீந்தினான் பாழின் நீண்ட 

கல் பொரி மடல் வறள் நெடும் ஆறே.

கோடு ஏந்திய பெரு மாகளிற்றினை

உழுவை தொலைச்சிய பின்றை

களிறு பச்சூண் தின்றபின் எஞ்சிய‌

வள்ளுகிர் முணக்கிய நுண்பரல் எக்கர்

வீ சொரிந்தன்ன புள்ளி நீழல் வறுகண்

வடக்கிருந்த முற்றிய முதுவீழ் சான்றோர் 

தொல்லிய ஊழுடன் தெள்ளிய காலை

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு" அன்ன‌

கறங்கு வெள்ளருவி நுண்டுளி போழ்ந்து

கணம் தொரு கணம் தொரு உடையுபு

இன்னுயிர் நீட்டிய நுண்வரி எழுதி

நுழைபடுத்தாங்கு நுவலிய சொல்லி

கொல்லறம் ஓப்பி நல்லறம் வேட்ப‌

உள்ளிய திண்ணியர் மாண்பின் ஓர்ந்த‌

நற்றமிழ் அருஞ்சொல் ஆள்தல் ஓர்மின்.


___________________________________________________










தொல் கபிலர்.

 நற்றிணை 114

தொல் கபிலர்.

............

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்"

......


அகழ்நானூறு 36

____________________________________

சொற்கீரன்.


கோடு ஏந்திய பெரு மாகளிற்றினை

உழுவை தொலைச்சிய பின்றை

களிறு பச்சூண் தின்றபின் எஞ்சிய‌

வள்ளுகிர் முணக்கிய நுண்பரல் எக்கர்

வீ சொரிந்தன்ன புள்ளி நீழல் வறுகண்

வடக்கிருந்த முற்றிய முதுவீழ் சான்றோர் 

தொல்லிய ஊழுடன் தெள்ளிய காலை

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு "அன்ன‌

கறங்கு வெள்ளருவி நுண்டுளி போழ்ந்து

கணம் தொரு கணம் தொரு உடையுபு

இன்னுயிர் நீட்டிய நுண்வரி எழுதி

நுழைபடுத்தாங்கு நுவலிய சொல்லி

கொல்லறம் ஓப்பி நல்லறம் வேட்ப‌

உள்ளிய திண்ணியர் மாண்பின் ஓர்ந்த‌

நற்றமிழ் அருஞ்சொல்  ஆள்தல் ஓர்மின்.


___________________________________________________



நற்றிணை 114

தொல் கபிலர்.

............

"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு..."

...........

நம் சங்கத்தமிழ்ப்பெரும்புலவர் கபிலர் பற்றி அறிவோம்.அவர் புலமை வியக்கத்தக்கது.கபிலர் என்ற பெயருடைய பல புலவர்கள் இருந்திருக்கிறார்கள்."தொல் கபிலர்" என்று ஒரு புலவர் நற்றிணையில் (பாடல் 114) இயற்றியிருக்கிறார். பெயரை வைத்துப்பார்த்தால் இவர் தான் தொன்மைக்கபிலரோ என எண்ணதோன்றுகிறது.ஆனால் அவர் ஒரு அழகிய ஆற்றங்கரையை "தொல் கரை"என்று அழகு பட எழுதுகிறார்.அதற்கு அவர்கண்ட இயற்கைக்காட்சி எத்துணை நுட்பமானது என்று நீங்களே அவர் வரிகளைப்படித்துப்பாருங்கள்.


"துளிபெயல் பொறித்த புள்ளித் தொல்கரைப்

பொருதிரை நிவப்பின் வரும் யாறு..."


தூரல் மழை ஒரு தூரிகையாகி ஒரு இயற்கை ஓவியம் தீட்டுகிறது.தூரல் "பொறி" போல் பெய்து அந்த ஆற்றங்கரை முழுவதும் புள்ளிக்கோலம் போட்டுவிட்டது.அதற்கு முன் "பழங்கரையாய்" இருந்தது அந்த சாரல் மழைக்குப்பின் அது புது பொலிவு பெற்று விட்டது.இந்த நிகழ்வு நான் எங்கள் ஊர் தாமிரபரணிக்கரையில்

ஏற்படுவதை வெகு அழகோடு உற்றுப்பார்த்திருக்கிறேன்.ஆற்றில் குளிக்க வரு முன் அப்போது தான் அந்த 

பட்டுமணற்கரையில் தூரல் போட்டு ஓய்ந்திருக்கும்.அப்பொது தான் அந்த மணல்விரிப்பில் மழைத்துளிகள்

பொட்டு பொட்டாய் விழுந்து ஒரு பேரழகுக்காட்சியை உருவாக்கியிருப்பதை கண்டு வியந்து களிப்படைந்திருக்கிறேன்.இதே இயற்கையின் அழகை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே கண்டு எழுதிய 

அந்த "தொல் கபிலர்"தன் சொல் திறம்  எனும் யாழ்மீட்டி இன்று வரை நம் நெஞ்சை வருடுகின்றார்.அப்பப்ப!

தமிழின் நுண்மையும்  இனிமையும் ஈடு இணையற்றது.


yet to be edited.


















திங்கள், 10 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 35

 "குன்றியனார்"எனும் பெரும்புலவர் எழுதிய நற்றிணைப்பாடல் 239 ல் "அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்"

என்ற மிக மிக அழகும் இயற்கைவனப்பும் மிக்க வரியை எழுதியிருக்கிறார்."நண்டுகள் அந்த கடற்கரை மணல் மேட்டில் அந்த நீர் அலைகளுக்கே உரிய இயற்கை நாற்றத்துடன் ஆடி ஆடி வரும் அழகை ஒரு ஓவியமாக்கியிருக்கிறார். அதையே முதல் வரியாய்க் கொண்டு இந்த அகழ்நானூறு 35 ஐ எழுதியிருக்கிறேன்,

_________________________________சொற்கீரன்.





அகழ்நானூறு 35


_____________________________________________________


சொற்கீரன்.




"அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்"


ஞான்ற பழத்து தீக்குரல் அன்ன 


ஞாயிறு தூங்கு குடதிசைக் கூந்தல்


அவள் விழி ஒப்ப கனன்று நோக்கும்.


ஆறு சுரத்த நெடுங்காடு இறந்தோன்


பொருள்வயின் அன்றொரு கற்றைத்திங்கள்


அவளொடு தழீஇய ஒல்லா ஊழின் 


அஞ்சுவரு இன்பில் முள்ளின் மூசு


காழ்த்த மரத்திடை ஞாழல் நறுவீ


புல்லிடை ஊரும் பூதங்காற்றில் 


கல்லிடை எல்வீழ் கவின் மலி காட்சி


கவிழ்ந்து இமைகள் அவிழ்க்கும்


விழியாள் கீற்றென மின்னல் எறிந்தாள்


அவன் ஒருதனி நீளிடை  மறித்து.


__________________________________________________________







ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

ஒரு கல்யாணவீடு.

 



2 பேர் மற்றும் நபர்கள் புன்னகைகின்றனர் இன் படமாக இருக்கக்கூடும்


















ஒரு கல்யாணவீடு.

புன்னகை பூங்கொத்துக்கள்

வீடியோக்களின் உதடுகளில்

விரிந்து கொண்டே இருக்கும்

ஒரு "லால்பாக்" நந்தவனம் இது.

அன்பின் இரண்டு நல் உள்ளங்கள்

மௌன நூலேணி ஏறி

வானத்தின் மத்தாப்பூக்களை

மனம் நிறைய அள்ளிக்கொண்டிருந்ததை










ஒரு கல்யாணவீடு.

புன்னகை பூங்கொத்துக்கள்

வீடியோக்களின் உதடுகளில்

விரிந்து கொண்டே இருக்கும்

ஒரு "லால்பாக்" நந்தவனம் இது.

அன்பின் இரண்டு நல் உள்ளங்கள்

மௌன நூலேணி ஏறி

வானத்தின் மத்தாப்பூக்களை

மனம் நிறைய அள்ளிக்கொண்டிருந்ததை

நான் 

பார்த்துக்கொண்டிருந்தேன்.

அன்பும் அறனும்...

திருக்குறள் இன்னும் தேய்ந்து போகாமல்

இங்கே எல்லோருக்கும் 

உயிர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது.

சுடச்சுட சுவையான இலைத்தொகையாய்

உணவு காத்திருந்த போதும்

காட்சிக்களிப்புகளின் 

கலித்தொகையும் குறுந்தொகையும்

கட்டிப்போட்டு வைத்திருக்கின்றன.

என் மூக்குக்கண்ணாடியின் பிம்பத்து அந்த 

ஒளிப்புள்ளிகள் எல்லாம்

என் அருகே தூவப்பட்ட நட்சத்திரத்தின்

உயிரெழுத்து மெய்யெழுத்துக்களாய்

என் பேனாவை நீர் ஊற வைக்கின்றன‌

எதையாவது கிறுக்கு என்று.


__________________________________________________‍

சேயோன். 

சேயோன் கவிதைகள்

 


சேயோன் கவிதைகள்

_________________________________‍



மண்புழுக்களாகத்தான் 

நெளியவிட்டான் 

எப்படி எழுந்தன தீக்கொளுந்துகள்?


எழுத்தாளன்.

______________________________________1


நிகழ்வுகள் தோலுரிந்து தான்

இதயத்தைத் 

தொட்டுப்பார்த்தது.


வரலாறு

________________________________________2


ரத்த ஆறுகள் எல்லாம்

அதன் அர்த்தத்தை அழித்துவிட்டன.

இன்னும் புரியவில்லை.


விடுதலை

______________________________________________3


எழுத்துக்களைக்கொண்டு நடந்தன

குடை ராட்டினமும் 

ரங்க ராட்டினமும்.


புத்தகக் கண்காட்சிகள்.

______________________________________________4

சனி, 8 ஏப்ரல், 2023

டிங்கரிங்க்

 

டிங்கரிங்க்

________________________________________‍


ஒரு சிறுகதை

ஏதோ ஒரு நிகழ்வு

புளிச்சென்று 

துப்பி விட்டது போல் தான்.

போங்கடா

நீங்களும் உங்கள் வாழ்க்கையும்

என்று தான்

நம் முகத்தில் அது கரி பூசும்.

அது கரியல்ல.

நம் கண்கள் எப்போதும் 

பூட்டிய சன்னல்களாக‌

பார்வைகள் செத்த ஒரு சவப்பெட்டியை

வைத்து சிமிட்டிக்கொண்டிருக்கும்

ஒரு மரணத்தூக்கத்தை

மறுவிழிப்புக்கு

அடித்து நொறுக்கும்

எழுத்துக்களின் ஆதங்கமும் ஆவேசமும் தான்

அது.

புதுமைப்பித்தனும் 

ஜெயகாந்தனும்

ஒன்றுக்கும் உதவாத அந்த‌

தகரடப்பா பிரம்மத்தை

டிங்கரிங்க் செய்ய வந்தவர்களே.

இப்போதாவது உங்கள்

முகம் தெரிகிறதா பாருங்கள்!

____________________________________________________

சேயோன்.








அகழ்நானூறு 35 (வரைவு)

 



ஞான்ற ஞாயிறு குடமலை மறைய,

மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்

இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி,

அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்

காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், 5

ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல்

புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும்

மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு

அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை

வார் கோல் எல் வளை உடைய வாங்கி, 10

முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர்

எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே?  



மேலைத் திசையிலே சாய்ந்து விழுகின்ற ஆதித்த மண்டிலம் ஆங்குள்ள அத்தமனக் குன்றின்வாய் மறையாநிற்ப; மயங்கிய மாலைக் காலத்தில் கட்குடித்து மகிழ்ச்சியுற்ற பரதவ மாக்கள்; தாம்¢ வருந்தாது பெற்ற பெரிய மீனை எளிதாக விற்று; ஞெண்டு விளையாடிய புலவு நாற்றத்தையுடைய மணல் பரந்த முன்றிலையுடைய நோக்குவார்க்கு விருப்பம்¢ வருகின்ற சிறுகுடியின்கண்ணே; செல்லலுற்ற ஒழுங்குபட்ட வழியின் அழகிய நீலமணியின் குவியலை விரித்துப் பரப்பினாற்போல; நெய்தலின் புறவிதழான் மூடப்பட்ட மலரைக் கெட மிதித்துச் செல்லாநின்ற; வளப்பத்தையுடைய கரிய கழி பொருந்திய நிரம்பிய கடல்நீரையுடைய நெய்தனிலத்தலைவனுக்கு; யாம் மனமொத்து இதுகாறும் அவனிட்ட தொழிலைக் கேட்டு அதன்படி நடந்தோமேயில்லை; அங்ஙனமாக என்னை நோக்கி "நின் முன் கையில் அணிந்த நெடிய கோற்றொழில் அமைந்த ஒளி பொருந்திய வளைகள் உடையும்படி அச்சேர்ப்பனை அழைத்து அணைத்து முயங்குவாயாக!" என்று கூறி; புலம்பியழுத இவ்வூர்தான்; யாம் இனி அவனுக்கு அமைய நடக்கவல்ல வேறொரு காரியத்தைச் செய்துவிட்டால் என்ன பாடுபடுமோ?


தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது. - குன்றியனார்

பாடல் 239. நற்றிணை


அகழ்நானூறு 35

_____________________________________________________

சொற்கீரன்.


அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்

ஞான்ற பழத்து தீக்குரல் அன்ன 

ஞாயிறு தூங்கு குடதிசைக் கூந்தல்

அவள் விழி ஒப்ப கனன்று நோக்கும்.

ஆறு சுரத்த நெடுங்காடு இறந்தோன்

பொருள்வயின் அன்றொரு கற்றைத்திங்கள்

அவளொடு தழீஇய ஒல்லா ஊழின் 

அஞ்சுவரு இன்பில் முள்ளின் மூசு

காழ்த்த மரத்திடை ஞாழல் நறுவீ

புல்லிடை ஊரும் பூதங்காற்றில் 

கல்லிடை எல்வீழ் கவின் மலி காட்சி

கவிழ்ந்து இமைகள் அவிழ்க்கும்

விழியாள் கீற்றென மின்னல் எறிந்தாள்

அவன் ஒருதனி நீளிடை  மறித்து.

ஒப்பீடுகள்

 

ஒப்பீடுகள்

___________________________________________________



லோகேஷ் கனகராஜும் 

மணிகண்டனும்

கமல்ஹாசனை தங்கள்

கேமிராவின்

கலைடோஸ்கோப்பில் 

திருப்பி திருப்பி பார்த்து

உடைந்து நொறுங்கி குலுங்கி குலுங்கி

வண்ணம் காட்டும் 

அந்த நடிப்பின் தருணங்கள்

மிக மிக அற்புதமானவை என்பதில்

யாருக்கும் இரண்டாம் கருத்தே இல்லை.

40 50 களில்

50 60 களில்

70 களில்

இப்படித்தான்

எம் கே டியும் பி யு சின்னப்பாவும்

சிவாஜியும் எம் ஜி ஆரும்

அவரவர் இமயங்களில் கொடி நாட்டினார்கள்.

ரஜனிகாந்தின் அந்த அட்டை இமயத்தின் சிகரம்

மிக மிக உயரத்தில் தான் இருக்கிறது.

இப்போது விஜயும் அஜித்தும்

ரசிகர்களுக்கு மிக மிக ருசியான‌

பாப்கார்ன் பொட்டலங்கள் தான்.

இருப்பினும் இன்றுவரை

சர்வ தேச விருதுகளின் கிட்டங்கிகளை

வியப்பால் இமை விரிய வைத்துக்கொண்டே இருக்கும்

திரைக்கதைகளை

உயிரோட்டமாகத்தந்த‌

சத்யஜித் ரேய் அடூர் கோபாலகிருஷ்ணன்

மற்றும் கிரிஷ் கர்னாட்

போன்ற திரை ஆளுமைகள்

தந்த‌

அந்த மூழ்கடிக்கமுடியாத ஆழங்களின்

சமுதாயத்தினவுகளையும் தீர்வுகளையும்

நாம் இன்னும் தரிசிக்கவில்லை

என்பதே

ஒரு உறுத்தல்காடுகளில் 

உலவிக்கொண்டிருக்கும் 

அந்த நிழல் ரோஜா!

இந்த ரோஜாவிலிருந்தும் 

தெறித்திருக்கின்றன சில ஒளிமகரந்தங்கள்.

வெற்றிமாறனுக்கு 

வெறும் தூசியும் துரும்பும் போதும்

சமுதாயவலியின் ரத்தம் வடியச்செய்ய.

ஆனால்

சூரியை வைத்து அந்த போலீஸ் லத்தியில்

சொட்டு சொட்டாய் உதிர்ந்த‌

ஒரு சூரியபிழியலை

மக்களின் வலியாய் வடித்திருக்கிறார்.

விடுதலைக்கு இப்படியொரு 

புதிய பரிணாமமா?

இருப்பினும் இந்த 

ஒப்பீடுகள் இன்று வரை

எழுதவும் படிக்கவும்

மிக மிக சுகமே.


____________________________________________________

சேயோன்





பேனா?

 யாருக்காக அழுதான்?

___________________________________


ஜெயகாந்தன் வீசிய 

இந்த கேள்வித்தீ

எந்த திரியிலிருந்து 

பற்ற வைக்கப்பட்டது

என்று இன்னும் எவரும் 

புரிந்திருக்க முடியாது.

வெறும் நரம்புமண்டல மனிதனுக்கும்

சமுதாய மனிதனுக்கும்

இடையே உள்ள அந்த பள்ளத்தாக்கு

அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கு அல்ல.

மனிதப்பிறப்பு

கடவுளின் வரம் என்று

கொண்டாடும்போது

அதன் அழுகையின் 

மொழி பெயர்ப்பில்

தத்துவத்தின் சிலந்திவலகள் 

ஆயிரம் ஆயிரம்.

யாருக்காக அழவேண்டும்?

யாருக்காக சிரிக்க வேன்டும்?

என்று திசைகள் புரியாத‌

ஒரு சூன்யப்பிழம்பு தான்

கர்ப்பத்தில் கரு பிடிக்கிறது.

உதைத்துக்கொண்டு பிறக்கிறதே!

பிறப்பதே போராட்டமாகி

போராட்டமே பிறப்பு ஆகும்

இந்த புதிர் தான்

அழுகையாயும் சிரிப்பாயும்

இந்த சமுதாயக்கண்ணாடியில்

முகம் பார்க்க வருகிறது.

அது தானே எல்லா மதங்களுக்கும் மதம்.

எல்லா கடவுளுக்கும் கடவுள்.

அவன் சிரிக்கிறானா? அழுகிறானா?

பேனா ஒன்று தான்.

அது விறைத்து நின்று

சோம்பல் முறித்துக்கொண்டதில்

பழமைவாத எலும்புகள் நொறுங்கிப்போகின்றன.

யார் அந்த பேனா?

ஜெயகாந்தனா? கலைஞரா?

அது பிரதிபலிக்கும் கடலே

இங்கு சமுதாய எழுச்சி!


_______________________________________________________

சேயோன்.

வியாழன், 6 ஏப்ரல், 2023

ஒரு ரோஜாவை கையில் ஏந்தி

 


ஒரு ரோஜாவை கையில் ஏந்தி

சுழற்றி சுழற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.

அதன் அடுக்கு அடுக்கான 

இதழ் வண்ணமும் அழகும்

என் மௌனத்தையே மகரந்தங்களாய்

சிதறடித்து என்னுள்

சொற்சிற்பங்கள் செதுக்கின கவிதை என்று.

நேரம் செல்ல செல்ல 

நான் எங்கோ எதிலோ கரைந்து போனேன்.

அது உருமாற்றமா?

தருணங்களின் கரு மாற்றமா?

எப்படியோ தாவிவிட்டேன்.

காலத்தின் கோடி கோடி அடுக்குகள்

ஒரு புள்ளியாய்

என் மூக்கு நுனி பட்டாம்பூச்சி போல்

சிறகுகளில் "சாமரம்"வீசியது.

திடீரென 

பால்வெளி மண்டலங்கள் ஆயிரம் ஆயிரமாய்

உருண்டு திரண்டு

சிவப்பாய் செம்பிழம்பாய்

சுழன்றது.

அதுவும் ஒரு உயிர்ப்பின் நெருப்பா?

அப்பாடா!

காலவெளிப்பயணத்தின் புழுக்கூடு

என்னை துப்பி விட்டது.

மீண்டும் புல்வெளியில் விழுந்தேன்.

கைவிரல்கள் ரோஜாவின் இதழ்களை

இழந்து போயிருந்தன.

அந்த பூவின் காம்பைப்பிடித்திருந்த 

இடத்தின் நுனியில்

அந்த முள்

ரத்தக்கசிவோடு

கடு கடுத்தது!

என் அருமை ரோஜாவே!

உன் அழகை இப்படியும்

ஒரு ரத்தக்கசிவில் 

மொழிபெயர்த்து முத்தமாக்கி

அண்டம் விட்டு அண்டம்

பெயர்த்து விடமுடியுமா என்ன?


___________________________________________________‍

சேயோன்.

புதன், 5 ஏப்ரல், 2023

நம் "தம்மிழ்".

 நம் "தம்மிழ்".

___________________________________________

சொற்கீரன்.



வரலாறு என்றால்

மீனும் பன்றியும் சிங்கமும்

வந்து மறுபடியும் 

மனிதனை வெறும் விலங்கு தான்

என்று சொல்வதா?

வானத்திலிருந்து வேதம் வந்தது

என்று சொல்வதெல்லாம்

சோமக்கள் காய்ச்சும்போது

வந்த நொதிப்பு தானே.

பாரசீகத்து அவெஸ்தா மொழிப்பாடல்கள்

ரீங்காரம் செய்தது தானே 

ரிக் வேதம்.

வேய்தம் எனும் அந்த 

தர்ப்பைப்புல் கூரையின்

ஒவ்வொரு கீற்றும்

இரவல் இரைச்சல்களே.

சிந்து ஆறு என்பதே

தமிழ் ஆறு தான்.

மண்ணில் வேர்பிடித்த தமிழ்

உலகம் எல்லாம் பரவி ஒலிக்கும்

நாவு ஆனது.

நாவின் அசைவே லேங்குவேஜ் ஆனது.

பேசு என்பதே பாஷை ஆனது.

தமிழ் தந்த உலக ஒலிப்புகளே

செயற்கையாய் செய்த சமஸ்கிருதம் ஆனது.

ஒரு ஒலிக்கு ஒரு எழுத்தே போதும்

என்று உலக ஒலிப்புகளை 

கோர்த்த தமிழ் 

இடத்துக்கு இடம் என்று 

பல ஒலிப்புகளை வகைபிரித்தது.

ஆனால் வேர் மொழி தமிழ்

அந்த நான்கு வகை ஒலிப்புகளையும்

ஒன்றாய் தன்னுள்

கிளைத்து செழித்து அடர்ந்து அகன்று

ஒலி பரப்பிக்கொண்டிருக்கிறது.

வேர் மறைந்து தானே உயிர்த்துக்கொண்டே இருக்கும்.

இந்த கிளைகளும் இலைகளுமே

பல் ஒலிகளை சல சலப்பு செய்து கொண்டிருக்கும்.

இந்த உயிர் மூச்சை 

தம் பிடித்து கொண்டிருப்பதே

நம் "தம்மிழ்".


_____________________________________________________________


அகழ்நானூறு 34

 அகழ்நானூறு 34

______________________________________

சொற்கீரன்



எல்லை போகிய புல்லென் மாலை யென‌

பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த 

பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி 

களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு

சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.

காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும் 

வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்

வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்

நோதல் செய்த நீர்மையில் அவனும் 

புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல‌

பரி சால‌ உகள காலிடை போழ்ந்தும்

நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை

தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.


_____________________________________________________


(அகழ்நானூறு 34)

 


கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை,

நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின்,

நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப்

புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய,

வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5

பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப,

கால் என மருள, ஏறி, நூல் இயல்

கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர்

வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந!

ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை 10

ஏறு புணர் உவகைய ஊறு இல உகள,

அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி

முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத,

எல்லை போகிய புல்லென் மாலை,

புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், 15

கழி படர் உழந்த பனி வார் உண்கண்

நல் நிறம் பரந்த பசலையள்

மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே.  



தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயனார்

அகம் 234

__________________________________________________



அகழ்நானூறு 34

______________________________________

சொற்கீரன்


எல்லை போகிய புல்லென் மாலை யென‌

பேயன் வரித்த அகநானூற்று அகம் அகழ்ந்த 

பாடல் கயத்து பண்ணுடை இலஞ்சி 

களித்தனன் யான் அதை கவித்தனன் ஈண்டு

சொற்குடை ஏந்தி சொல்லலும் புகுந்தேன்.

காதலி ஐம்பால் கதுப்பின் தொகுப்பும் 

வால் திரைக்கீற்றின் சில்லெனும் பகுப்பும்

வான் மறைத்து மேவிய நகை வெண் திங்களாய்

நோதல் செய்த நீர்மையில் அவனும் 

புல் உளைக்கலிமா கொய்சுவல் ஆல‌

பரி சால‌ உகள காலிடை போழ்ந்தும்

நுண்வரி எழுதி அவிழ்சிறை முல்லை

தாது நிரவியத் தகையவன் விரைந்தான்.


_____________________________________________________


திங்கள், 3 ஏப்ரல், 2023

குகைவழியே ஒரு குவாண்டம்

 அலைக்குள்ளே ஒரு பல்கலைக்கழகம்.

(வேவ் மெகானிக்ஸ்)

_______________________________________________________

இ பரமசிவன்


விசையியல் அல்லது நகர்ச்சியியல் என்பது மெகானிக்ஸ் என அழைக்கப்படுகிறது.நமக்கு கண்கண்ட விதத்தில் புறப்பொருள்கள் உண்டாக்கும் நகச்சியியல் என்பது மரபுமுறை நகர்ச்சியல் ஆகும்.(க்ளாசிகல் மெகானிக்ஸ்) அணுவிசை மற்றும் அணுக்கருத்துகளான எலக்ட்ரான் ப்ரோடான் நியூட்ரான் இவற்றின் நகர்ச்சியியலை நாம் கண்ணாலேயே பார்க்க முடியாது. இவை நுண்ணியல் நகர்ச்சியியல் ஆகும்.(மைக்ரோஸ்கோபிக் மெகானிக்ஸ்). இப்போது சிக்கல் உருவாகிறது.நேருக்கு நேர் கண்ட பொருள்களின் நகர்ச்சியியலை நாம் அளவு படுத்திக்கொள்ள சில கணித சூத்திரங்கள் வைத்திருக்கிறோம்.ஆனால் அந்த கண்ணுக்குத்தெரியாத எலக்ட்ரான் போன்ற மின்னணு நகர்ச்சியை அளவுக்குள் கொண்டுவருவது என்பது இயலாத காரியம்.ஆனாலும் அதை ஒரு "அளபடைக்குள்"(குவாண்டம்) கொண்டுவந்தே ஆகவேண்டும்.அப்போது தான் நகர்ச்சியியல் பற்றிய முழுமையான அறிவு நமக்கு புலப்படும்.இந்த நுண்மை அளபடை நகர்ச்சியியலே குவாண்டம் மெகானிக்ஸ் எனப்படுகிறது. இதை "திறந்திடு சீசேம்" என்று

ஒரு அரபுக்கதை போல இதற்கு ஒரு அருமையான சமன்பாட்டை 1926ல் கண்டுபிடித்தார் ஆஸ்டிரிய நாட்டைச்சேர்ந்த "எர்வின் ஸ்க்ரோடிங்கர்" எனபவர்.அந்த குகை வழி குவாண்டம் இயல் பற்றி அறிய நாமும்

அந்த சூத்திரத்துள் நுழைவோம்.


ஜிகினா கூட்டில்....

 


இந்தி ஜிகினா கூட்டில்

கடைசியாக 

சிறகடித்தாலும்

அந்த மயிலு மயிலு தான்.

குயிலு குயிலு தான்.

குழையும் தமிழின் 

அந்த‌ குமிழ்சிரிப்பில் 

கொட்டிக்கிடக்கிறது 

எத்தனையோ பிரபஞ்சங்கள்.

_________________________________________

ருத்ரா

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

அகழ்நானூறு 33

 அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்

பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்

அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்

சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;

நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் 5

ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்

நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய

வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் 10

சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று

அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,

பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,



அகழ்நானூறு

____________________________________________________

சொற்கீரன்.


பிறைமருள வாங்கு வெண்கோட்டு வேழம்

வேங்கை வெள்வீ அடர்சொரி மூழ்க‌

அறைபறை பரற்கண் வெள்ளிய ஊர் 

அத்த நீளிடை முள் தூங்கு இலையின் 

இலவம் திரித்த நச்சின் அரவம் 

வெரீஇயத் தந்த வெள்நள் ஆறு

கவலை உறுத்தும் ஊசிநுண்மணல்

உழந்தும் உலையா வாங்கமை வெற்பன்

தும்பி ஊது தூம்பின் நுண்கால் நறவென‌

அவள் நகை கொள்ளை இன்புறுவான்மன்

மற்று எவன் செயும் தீ ஊழ் நீடு இப்பாழாறு.


____________________________________________



குறிப்புரை

______________________________________

மாமூலனார் எனும் நம் ஒப்பற்ற சங்கப்புலவர் பாடிய அகநானூற்றுப்பாடலில் (115)

"பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை," என்று தலைவன் பொருள்தேடி செல்லும் 

வழியில் நிலாப்பிறை போன்ற வளைந்த் கொம்பு உடைய யானை இடைமறித்து அச்சம் காட்டுவதாகவும் 





சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி

இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, 15

நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,

நம் நீத்து உறையும் பொருட்பிணிக்

கூடாமையின், நீடியோரே.



பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மாமூலனார்

அகம்...115

விடுதலை

 



விடுதலை

_____________________________________________‍

ருத்ரா



அந்த உடுக்குச்சத்தங்களிலிருந்தும்

அந்த  பாஞ்ச சன்ய சங்கு முழக்கங்களிலிருந்தும்

சோமக்கள் எப்படி காய்ச்சுவது

அதற்கு எப்படி தீ மூட்டுவது

அதில் எப்படி மாமிசங்களை வறுத்து தின்பது

அந்த போதை மண்டைக்குள் ஏறி

கிலுகிலுப்பை ஆட்டிச்சொல்வதையெல்லாம்

எப்படி வானத்தின் உளறல்கள் என்று கூறி

அதை தெய்வங்களாக்கி

மீண்டும் மீண்டும் நெய் ஊற்றி 

தீ வளர்த்து தீ வளர்த்து

புலம்பித்தீர்த்ததை எல்லாம்

வைத்து பூதம் காட்டி வேதம் காட்டி

அங்கு மண்ணின் மைந்தர்களுக்கு

வர்ண வர்ணமாய்

சங்கிலி மாட்டி விலங்கு பூட்டி

அதை இதிகாச புராணங்கள் ஆக்கி...

பயம் வளர்த்த தீயின் ஆரண்யங்களில்

அறியாமையின் இருட்டுக்கு

ஆயிரம் சித்திரங்கள் தீட்டி தீட்டி..

இன்னும்

அந்த சிக்கிமுக்கிக்கல்லில் 

சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும்

விடுதலைப்பொறியின்

சிறகுகளை பறக்கவிடாமல்...

பாழ்பட்டுக்கிடக்கும் இந்த

தேசத்தில்

அறிவின் விடுதலை என்ற சொல்

ஒலிப்பதே மகா மகா பாவம்

என்று மண்ணொடு மண்ணாய் 

மக்கிக்கொண்டிப்பதற்குத்தான்

இங்கு மக்கள் என்று பெயரா?


________________________________________________

மெய் எண் கணிதம்


மெய் எண் கணிதம்

______________________


அறிவின் நுழைவாசல் இது.

ஒன்று இரண்டு மூன்று என்று

உன் விரல்கள் உன் முன் 

மெய்ப்படவே நீளும்.

மனதுக்குள் விரல்களை

முளைக்க வைத்தும் நீ

எண்ணிக்கையை தொடரலாம்.

அப்போதும் அது மனதுக்குள்

மெய்ப்பட்டு நிற்கிறது என்று நீ

உணர்கிறாய். 

சனி, 1 ஏப்ரல், 2023

சூரி

 சூரி

_____________________________________________

ருத்ரா





இருபத்தி அஞ்சு பூரி

ஒரே வாயில் தின்று விட்டு

இன்னொரு இருபத்தி அஞ்சை

"தட்டில் போடுய்யா"

என்று அசுர சாதனை செய்த

காமெடி கிங்க்

நம் நெஞ்சையெல்லாம் 

பிழிந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்.

வெற்றிமாறனின் கெமிஸ்ட்ரியில்

இந்த படைப்பு உலகமே

ஒரு எரிமலையை வெற்றிலை போட்டு

குதப்பிக்கொண்டு

கொப்புளிக்கத்தயாராக இருக்கிறது.

நாப்பது அம்பதுகளில்

இந்தியாவின் சுதந்திர மூச்சு

நசுக்கப்பட்டுக்கொண்டே தான்

வெள்ளைக்காரனின் பந்தாவுக்கு

மூவர்ணம் காட்டிக்கொண்டிருந்தது.

அதற்குள்ளேயே இருந்த நான்குவர்ணம் கூட‌

பின்னணியில் நாகப்பாம்பின் நச்சுவை

பீறிட்டுக்கொண்டிருந்தது.

அப்பாடா!

கம்யூனிசத்தைக்கூட‌

இந்த ஜெயமோகன் வந்து படம் காட்டும்

அளவுக்கு ராமராஜ்யம் வந்து

கவரி வீசும் கதையா?

இல்லை..இல்லை இல்லவே இல்லை.

பொய்மான்களை புரியவைத்துவிட்டார்

இயக்குநர்.

ராமனின் அம்பு எல்லாம் யாருக்காக என்றும்

புரியவைத்துவிட்டார்.

அது சீதா பிராட்டியாரின் நெஞ்சை 

அல்லவா துளைத்தது.

அது ராவணனுக்காக‌  இல்லை என்பதும்

புரிந்து போயிற்று.

மக்கள் சபை முடக்கம் என்பதும்

புரியாத மாதிரி புரியும் வசிஷ்ட சூத்திரம் தான்.

சூரி என்றால் 

வெறும் பூரி இல்லை

என்று

வெற்றிமாறன் ஒரு புது சிகரம் தொட்டுக்

காட்டி நிற்கிறார்.

ஒரு படைப்பாளி

ஆயிரம் போராளிகளின் பாசறை

என்று 

நிமிர்ந்து நிற்கிறார்.


________________________________________________________