சனி, 15 ஜூலை, 2023

ஜேம்ஸ்வெப் பூதம்

 (27) Scientists Reveal That Our Universe Is 27 Billion Years Old, Not 13.8 Billion! Here’s How - YouTube


(27) BIG BREAKING: James Webb Telescope Just Detected A Star Older than The Universe - YouTube



ஜேம்ஸ்வெப் பூதம்

__________________________________________________

கல்லிடைக்குறிச்சி இ பரமசிவன்



இப்ப நம் பிரபஞ்சத்துக்கு ரெண்டு கழுத வயசு ஆயிரிச்சாம்.இது வரை 13 அல்லது 14 பில்லியன் ஆண்டு வயசுன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க.இப்போ இந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி விண்வெளிக்குள்ளே நுழஞ்சு சும்மா அதிரடி காட்டிக்கிட்டு இருக்குங்க.

பழைய தொலைதொலை நோக்கிகள் பொருள்மீது படுகிற சாதாவெளிச்சத்தையும் அதன் ஒளி அடர்த்தியையும் வச்சுக்கிட்டு தான் பார்த்துக்க்கொண்டிருந்தன.இதுவோ நம் பூமியிலிருந்து பல லட்சம் தொலைவுக்கு சென்று நிண்ணுகிட்டு பார்த்தது மட்டும் இல்லாம அகச்சிவப்பு கதிர் அலைகளை வச்சு துருவி துருவி துல்லியமாக பாக்க ஆரம்பிச்சுட்டுது. அதனால மங்கலவெளிச்ச தூரமான 14 பில்லியன் ஆண்டு தூரத்தையும் கடந்து இருக்கிற ஒளி மண்டலங்களையும் பாக்க ஆரம்பிச்சுட்டுது.அதனால்  பிக் பேங்க் என்னும் கோட்பாட்டையும் இப்போ வேற மாதிரி

பாக்கத்துவங்கி இருக்கு.தூரம் (வெளி) காலம் இரண்டும் ஒன்றை வைத்து இன்னொன்றை கணக்கிடுற மாதிரி தான் ஐன்ஸ்டீன் காலவெளியை வைத்து இந்த‌

பொது சார்பு பற்றி சமன்பாடு எழுதினாரு.அதுவும் கிட்டத்தட்ட சுழியத்தை தொட்டுவிட்ட "பிளாங்க்" நிலை பிரபஞ்சத்துல உள்ள ஒரு ஒருங்கியம் அல்லது ஒற்றையம் (சிங்குலாரிடி) பற்றி சமன்பாடு எழுதும் நுண்ணிய கணிதத்துல வந்து

இப்ப ஆராய்ச்சி நிக்குது.இப்போ என்ன சொல்றாங்கன்னா கருந்துளைன்னு சொல்லுற‌

அந்த புள்ளி தான் இப்போ நம்ம பிரபஞ்சமாம்.அதாவது நம்ம பிரபஞ்சம் பூராவும் ஒரு கருந்துளைக்குள்ளே தான் இருக்குதாம். அருகாமை அகச்சிவப்புக்கதிர் (நியர் இன்ஃப்ராரெட்) பாய்ச்சல் மூலம் ஒளி துல்லியம் அடைந்து நம் பிரபஞ்ச வயதையும் 

ஒரு 27 பில்லியன் ஆண்டுகள் வரைக்கும் நீட்டிகிட்டே போய்ட்டாங்களாம்.இதுக்கு இன்னொரு காரணியும் உண்டு.அது தான்  ஈர்ப்பு பூதக்கண்ணாடி.(கிராவிடேஷனல் லென்ஸ்).அது தான் தொலைவில் இருக்கிற ஒளித்திரட்சிகளை அருகாமையில் காட்டுகிறது.ஏற்கனவே கருந்துளைக்குள் பிரபஞ்சம் போய் அடைந்து கொண்டு விட்டது

என்று பார்த்தோம்.கருந்துளை என்பது என்ன? ஈர்ப்பின் (நிறையின்) வரம்புகள் எல்லாம் உடைந்து போய் விட்ட மிகப்பெரும் பெரும் ..பெரும் எலையின்மையே அது.

இதனால் அந்த ஒளிமண்டலங்கள் ஈர்ப்பின் பூதக்கண்ணாடி விளைவால் அருகே தோன்றியிர்ப்பதால் தான் 14 பில்லியன் ஆண்டுகள் என்று நமக்குத்தோற்றம் தருகிறது.

ஆனால் உண்மையான அந்த ஒளியாண்டு தூரம் அதை விட ஏன் இரு மடங்காக இருக்கக்கூடாது?

நாளைக்கு இதே ஜேமஸ்வெப் தொலைநோக்கி எல்லா பிரபஞ்சத்தையும் நம் பாக்கெட்டுக்குள் கொண்டு வந்து திணித்தாலும் திணித்து விடும்.பாசிடிவ் எல்லையின்மையின் (மகா பிராம்மாண்டம்) அந்த முனையில் இருப்பது போல் "ஒரு ப்ளூ ஷிஃப்ட் டெக்னிக்கில் "எல்லையின்மை இந்த முனை (நெகடிவ்)யில் அதாவது 

நேனோ நேனோ ..முனையில் இந்த பிரபஞ்சம் உட்கார்ந்து இருக்கிறது பாருங்கள்

என்று ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் போல் ஒரு ஜேம்ஸ்வெப் மைக்ராஸ்கோப் வந்து நம்மை அதிரவைத்தாலும் வைக்கலாம்.அங்கு கூட ஏலியன்கள் கொரோனா வைரஸ் மாதிரி வந்து நம்மை தாக்கலாம்.இப்போது கூட அந்த தாக்கலின் தாக்கம் இருப்பதாக‌

ஒரு சைஃபை படம் எடுத்து ஓடிடியில் நாம் பார்த்து திகிலை ரசிக்கலாம்.


_________________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக