அகழ்நானூறு 48
____________________________________________
சொற்கீரன்.
கடல் மண்டு காவிரியின் கழை மாய்ந்தன்ன
உடல் மண்டு உணர்வின் அவள் மாய்ந்த காலை
வறிய வெள்ளி நீள் ஆறு கடாஅத்து
இடறு வன்பரல் நெடிய நீந்தி பொருள்வயின்
வாழ்வில் சிவணிய இன்னெறி ஆண்டு
நெய்கனி நெடுவேல் எஃகிலை இமைக்கும்
பொழுதிலும் அவள் ஆங்கு நீட்டிய மைவிழி
மருங்கின் ஊர்ந்தான் உய்த்திட விரைந்தே.
முள்ளின் முருக்கம் செம்பூ விழிப்ப
அடர்சுரம் நுழைந்தான் அவள் இறை
நெகிழ்வளை கல்லென் காழ்த்த கவினொலி
தெறிப்ப ஆர்கலி ஆங்கு அலைப்ப தரூஉம்
முகன் நோக்கி துறை நோக்கும் கலம் அன்ன
கதழ்பரி காலின் கடுப்ப விரையும்.
கரைவருடும் மலரும் கரை இடறும் இறவும்
கடல் கலந்தன்ன கூர்த்த அவள்விழி
நாவாய் ஓட்டும் நனி சிறந்து முன்னே.
______________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக