புதன், 12 ஜூலை, 2023

கவிதைச்சிற்பி நா.முத்துக்குமார்

 


1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்



கவிதைச்சிற்பி நா.முத்துக்குமார்
_________________________________________
ருத்ரா



சினிமா எனும் 
திரை போட்டுக்கொண்டு இவர்
திறந்து காட்டிய சொற்கடல்
அம்மம்ம!
இசை அலைகளுடன் நம்
இதயங்களையெல்லாம்
அள்ளிச்சென்றது.
"தங்க மீன்கள்" ஒன்று போதுமே.
புதுக்கவிதைகள்
அவரோடு பல்லாங்குழி ஆடியது.
அவரோடு பட்டங்கள் விட்டது.
கவிதைக்குள் ஒளி பாய்ச்சிய‌
கவிப்பேரரசு வைரமுத்து கூட‌
சினிமாப்பாடல்களுக்குள்
புதுக்கவிதை நாற்றுகளை
அப்படியே நட்டதில்லை.
நா.முத்துக்குமார் எழுதிய 
சினிமாப்பாடல்கள்
தம்மையே புதுக்கவிதைகளாய்
செதுக்கிக்கொண்டன.
அவர் எழுத்துக்குள் பாய்மரக்கப்பல்கள்
விட்டவர்.
அவர் கவிதையின் சுவாசமே
அழகிய கடற்காற்றாய்
வானத்தின் உச்சி வரை சென்று
தமிழ் ஊற்றுகள் தோண்டின.
வயதுகளோடு அவர் விளையாடிய‌
சோழி விளையாட்டில்
காலக்கொடூரன் சூழ்ச்சி செய்துவிட்டான்.
மருத்துவம் செய்திருந்தால்
அவர் மீண்டிருப்பாரோ!
கல்லீரலோடு கூட‌
ஏதோ கவிதையாய்
மௌன விளையாட்டு செய்துவிட்டு
மறைந்து விட்டானே
அந்த மாபெரும் கவிஞன்.
அவன் வேண்டுமானால் சோகம் கூட‌
கவிதைதான்
என்று காகிதத்தில்
தன் இதய நரம்புகளை 
இழைய விட்டுவிட்டு போய்விடலாம்.
அந்த அரிய கவிஞனின்
வரிகள் இன்னும் நம்  மீது
பிழிந்து பிழிந்து 
ஊற்றுகிறதே.

_________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக