ஞாயிறு, 30 ஜூலை, 2023

சஹஸ்ராக்ஷம் சஹஸ்ரசீர்ஷம்

 பிரம்மத்தை தரிசிக்கவேண்டுமா?

இல்லை

நீ பிரம்மமாகவே ஆக வேண்டுமா?

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்

நான் 

பிராமணனாக ஆக வேண்டும்.

அதற்கு

மனித பிறப்பு இறப்புக்கு

அப்பாற்பட்டவனாக 

நீ இருக்கவேண்டும்.

அந்த அகர உகர மகர‌

நிலையைத்தாண்டி

நான்காவதான துரியப்பாய்ச்சல்

நிகழ்த்தவேண்டும்.

அவர்ணன் ஆக வேண்டும்.

அமதம் மேற்கொள்ளவேண்டும்.

பிரம்மம் அற்ற அபிரம்ம நிலை

எய்தவேண்டும்.

உன் பசியை நீக்க‌

நீ முயற்சிக்ககூடாது.

உனக்கு யாராவது பிக்ஷை அளித்தால் தான்

நீ சாப்பிடவேண்டும்.

நீ எதையும் அறியக்கூடாது.

நீ எதையும் அறியமுற்பட்டாலே

பிரம்மம் என்பது ஆபாசம் ஆகி விடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக‌

சஹஸ்ராக்ஷம் சஹஸ்ரசீர்ஷம்

உடையவனாகவே 

நீ பரிணமித்துக்கொள்ளவேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக