அகழ்நானூறு 49
______________________________
சொற்கீரன்
நெய்தல் இருங்கழி வெண்மணல் வரிய
அலவன் கீறிய கல்லாடமும் கலித்த
சொல்லுள் அளைஇ அயரும்
அந்துறைச்சேர்ப்பன் அவள் ஒள் இறை
ஊரும் வளையென மணல் மடுத்து உரறும்
சூர்வளித் தடத்துக் கொய்சுவல் மூட்டம்
மாலையில் மாயும் மணிஒலி முறுவல்
அவள் வாலெயிற்றின் வான்வில் கோடல்
கண்டவன் ஆங்கு அம்பும் வீழ்த்தும்
திரிமருப்பு மாவென ஆற்றுக்கவலை
நீள்வரு வெண்ணிப் பறந்தலை
நெடியக் கடாஅமும் நெறி எதிர நின்றான்.
______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக