வியாழன், 20 ஜூலை, 2023

அகழ்நானூறு 50"

 அகழ்நானூறு  50

.............................................................................

சொற்கீரன் 



கணைக்கால் நீடிக் கண்போல் பூத்த 

குவளை அலமரும் இலஞ்சி அஞ்சுனை 

நீருள் தீ விழித்தற்று நிழல் காட்டிய‌

நுதல் பிறையாள் நுடங்கு நுண் அலை

பரப்பிய பார்வையில் வீழ்ந்தனன் ஆங்கே

அடுக்கம் ஓங்கும் சிலம்பிய வெற்பன்.

முள்ளெயிற்று வாவல் நீள் சிறை ஆர்க்கும்

ஆரிடை தோய்ந்தோன் ஆறு இறந்த‌

அவிர்வெண் காட்சியும் அவளே சாலும்.

பஃறுளி படுத்த பரல் பொருது இறங்கும்

பளிக்கின் நீர் இழை அவள் விழியோரம்

இழிவது கண்டு இடி உமிழ் துன்பில்

இற்றவன் ஆங்கு சாய்ந்தே நொந்தான்.

ஒழி திரை வரித்த வெண் மணல் அன்ன‌

அவள் வெள்ளைச் சிரிப்பில் கோட்டு அத்தம்

குவியக் கடாஅத்து கடவுட் கல்முனை

எதிர் கலித்து வெல்லும் அவன் புல்லென் 

சொல்லின் உதிரா நின்ற‌ இறைச்சியில்

முதிரா நின்ற பொருளை உய்த்தவள்

காய்ந்தே காய்ந்தே நகுவாள் மன்.


____________________________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக