வெள்ளி, 28 ஜூலை, 2023

இளைய யுகமே!


இளைய யுகமே!

_____________________________________________‍

ருத்ரா



"நம்பிக்கை கொள் மனமே.

முன்னேறிச்செல்

வெற்றி இதோ

உன்  தோள்மீது

பஞ்சவர்ணக்கிளிகளாய் 

அமர்ந்திருக்கின்றன.

கனவு காண்.

அதுவும் கலர் கலராய் 

கனவு காண்..."

இது ஒரு பொய்மான் கரடா?

இல்லை

வாழ்க்கையின் வக்கணையான‌

வேத புத்தகமா?

என்னருமை இளைஞர் பெருமக்களே!

உங்களைச்சுற்றி

சுழலும் ஒரு பஞ்சுமிட்டாய் எந்திரம்

அந்த இனிப்பின் பஞ்சு இழைகளை

உங்கள் மீது போர்த்தி

ஒரு கோக்கூன் எனும் 

புழுக்கூட்டு மண்டலத்தை

சுற்றிக்கொண்டிருக்கிறது.

கணினியுகம் சுற்றும் குடைராட்டினத்தில்

உங்கள் 

திசைகள் தவறிப்போய்க்கொண்டிருக்கின்றன.

கைபேசியின் நுட்ப காமிராக்கள்

உங்கள் இதயத்தின் தசைநார்களுக்குள் எல்லாம்

வெறும் குத்தாட்டங்களை 

குமிழிகளாக்கி அதையே

ஏ ஐ களில்

"பார்பெக்யூ" பண்ணி

வதக்கிச்சுட்டுத் தின்று கொண்டிருக்கின்றன.

கில்லிங் வேட்கையோடு

விளையாடு வெறியாடு என்று

பூதம் காட்டுகின்றன.

அழகிய பச்சைப் புல்வரிசை கூட‌

மெஷின் லேர்னிங்கில் 

ஒரு கார்ப்பரேட் புகை உலகத்தையே

உருட்டித் தருகின்றன.

மனிதநேயப்பொருளாதாரம்

குப்பையில் வீசப்பட்டு

பங்கு மூலதான பலூன் வீக்கத்தில்

கம்பெனிகளின்

க்யூ 1 க்யூ2 என்று

போட்டி வியூகங்களின் 

மைல் கற்கள் தான் தலைதெறித்து

ஓடுகின்றன.

"வெல்ஃபேர் எகனாமிக்ஸ்"என்ற

அந்த அரைகுறை சமுதாய நலம் கூட‌

நம் கணிப்பொறி அல்காரிதங்களுக்குள்

வருவதே இல்லை.

எட்டுமணி நேர வேலை என்பதில்

ஒரு சமுதாய எழுச்சியின் உள்ளடக்கம்

இருக்கிறது.

எட்டு மணி நேரத்துக்குள்ளும்

எண்பதாயிரமணி நேரங்களை

சுருட்டிக்கொடுத்து

அந்த "க்யூபிட்டுக்குள்"

உங்கள் பூட்டி வைத்துக்கொள்ளவா

இந்த கணினி மிருகங்கள்

உருவெடுத்திருக்கின்றன.

அந்த டாய்லெட்டுக்கு எப்படி 

நான் போகவேன்டும் '

என்பதற்குமா

சாட்போட் களை ஸ்விட்ச் ஆன் செய்யவேண்டும்?

இளைய செல்வங்களே!

யுகங்களை நீங்கள் பந்தாடவேண்டும்.

லாபம் குவிக்கும் இந்த எந்திரங்களா

உங்களை தீனியாக்கித் தின்று கொண்டிருப்பது?

உங்கள் போக்கின் இயல்பான 

மூளையின் சிந்தனையில் 

இந்த சமுதாயங்கள் தன்

வெளிச்சங்களை ஆட்சி செய்யட்டும்.

இளைய யுகமே

அயர்வு கொள்ளாதே

அதிர்வு கொள்!


__________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக