
(திரு.சண்முகம் பெருமாள் பதிவிட்ட இந்த படத்துக்கு நன்றி.)
ஓங்கி உலகளந்த....
____________________________________
ருத்ரா
ஓங்கி உலகளந்த ஓலைத்தமிழா!
ஓலைச்சுவடிகளை
எங்கோ மூலையில் எறிந்தாய்.
நீரில் விட்டாய்.
தீயில் எரித்தாய்.
இதற்கு பண்டமாற்றாக
மந்திர எச்சில்களை உண்டு
செறித்தாய்.
உன் வரலாற்று வெளிச்சம்
விண்வெளிக்கும் கூட
சூரியன்களை தூவி நிற்கும்போது
பொய்மைப்புராணங்களிலும்
சாதித்தீமைகளிலும்
சோறு பொங்கித்தின்கிறாய்.
தமிழை பொங்க விட்டு
புயல் போல் சீறியெழ மறந்தாய்.
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
என்று
எத்தனையோ எழுதியிருந்தாலும்
அந்த ஓலைதுடிப்புகள்
நீ அறிவாயா தமிழா?
தமிழின் முதல் ஒலி இந்த
மண்ணுக்குள்
கடலுக்குள் கூட
குமிழியாகி "கார்பன் டேட்டிங்"கணக்குக்குள்
கிடப்பதன் ஓர்மையுண்டோ
தமிழா உனக்கு?
கூறு.
இது பகட்டுக்கீதையின்
விஸ்வரூபம் அல்ல.
மனிதனை மண்ணுக்குள் புதை.
அறிவை அழித்து சாம்பலாக்கு.
கடவுள் இல்லை என்பது நமக்குத்தெரியும்
என்று அவனுக்குத்தெரியும் வரைதான்
இந்த
கும்பமேளாக்களும் கும்பாபிஷேகங்களும்.
பகடைகளாய் உருண்டு கிடந்தது போதும்
புழு அல்ல நீ.
புலியென எழு.
பரிணாமம் அறி.
பாதை உன் கால்களில் தான்.
வீறு கொண்டு எழு
தமிழா! தமிழா! தமிழா!
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக