கல்லிடைக்குறிச்சி ரயில்--2
________________________________________
நான் பிறந்த ஊர் அதோ
முன்னால் ஓடி ஓடிப்போகிறது
அந்த ரயிலைப்போல.
அது வெறும் ரயிலா?
ஊரின் அந்த செம்மண் வரைபடத்தில்
வெள்ளை வெள்ளையாய்
காக்காய் முட்கள் நீட்டிக்கொண்டிருக்கும்
மரமும் செடியுமாய்
இன்னும் அந்த வானம் முழுதும்
இறைந்து கிடக்கும் பூக்களின்
மகரந்தங்களும்
என்னைக் கோர்த்துவைத்து
ஓவியம் காட்டுகிறது.
அந்த தூரிகையின் சில
மின்னல் மயிரிழைகள் மட்டும்
இன்று என்னுடன்
பேசிக்கொண்டே இருக்கிறது.
நாங்கள் ஓயப்போவதில்லை.
பேச்சு தொடரும் ..தொடரும்.
_____________________________________
கவிஞர் ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக