வியாழன், 6 ஜூலை, 2023

ஒரு புரிதல்

ஒரு புரிதல்

_______________________________________

ருத்ரா



கண்ணுக்குத் தெரியாத‌

கூர் நகங்கள் உன்

கழுத்தை 

சாதி என்றும் மதம் என்றும்

கிழித்துக்கொண்டிருப்பதையும்

அதன் ரத்தம்

இத்தனை நூற்றாண்டுகளாக 

உன் மீது அருவியாக

கொட்டிக்கொண்டிருப்பதையும் 

அதிலும் "சுற்றுலாக்களிப்பில்"

நீ திளைத்துக்கொண்டிருப்பதையும் 

பார்த்தால்

எல்லாம் புரிந்து கொள்ளமுடிகிறது

உனக்கு இந்த உலகம் வீண்

அல்லது

நீ இந்த உலகத்துக்கு வீண்

என்று.

ஆம் எல்லாம் புரிந்தது

உன்னை எப்போதும் கழுவில் 

ஏற்றிக்கொண்டிருப்பதும் 

கடவுள் என்ற‌

அந்த கற்பனை தான்

என்று.


__________________________________________________






 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக