நண்பர் சேகர் கிருஷ்ணசாமிக்கு இனிய வணக்கங்கள்
_________________________________________________________
06.55.காலை.11.07.2023)
மணற்கடிகைகள் காலத்தின்
வரலாற்றை நூலேணி போல
காட்டியிருக்கிறது
ஏறிக்கொள்..இறங்கிக்கொள் என்று.
காலத்தை நசுக்கிப்பிழிந்து
கஷாயம் குடித்தவர்கள்
நம் சித்தர்கள் என்கிறார்கள்.
சித்தர்களிடம்
ஏதொ ஒரு நுண் ஓர்மையின்
டெலஸ்கோப் இருந்திருக்கலாம்.
அந்த போகர்கள்
அதோ அந்த
"ப்ளாங்க் லெந்துக்கும் ப்ளாங்க் டைமுக்கும்"
பாலம் கட்டுவதாய் சொல்லப்படுகிறது.
இது பீலாவா? பிலிமா?
போகட்டும் இதுவும் நமக்கு
சைன்ஸ் ஃபிக்ஷன் தான்.
அறிவின் நமைச்சல்களுக்கு
360 டிகிரிகளையும் விட நுண்மையான
சுழல்கள் உண்டு.
நீங்கள் வணங்கும் பாக்கியவான்கள்
பிரபஞ்சத்தின் மூலை முடுக்குகளில்
உட்கார்ந்து கொண்டு
அந்த சில்லறைகளை
மழை பெய்து கொண்டே இருக்கிறார்கள்.
இப்படி ஒரு
அற்புத காலைவணக்கங்களை
கிளறி விட்ட உங்களுக்கு
இனிய இதய வணக்கங்கள்.
_____________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக