திங்கள், 3 ஜூலை, 2023

குவாண்டம் ப்ராபபலிடி

 (18) The Big Bang Didn't Happen? - Something Stranger Happened Before It! - YouTube


குவாண்டம் ப்ராபபலிடி

_______________________________________________

இபியெஸ்



ஜேம்ஸ்வெப் தொலைனோக்கி எனும் 

வேட்டை நாய்

நுரை கக்க நுரை கக்க விரட்டிக்கொண்டே போய்

அந்த பெருவெடிப்பு வெடிக்கும் திரியின் முனை

பற்ற வைக்கப்படும் முன்னரே 

நடந்தது என்ன‌

என்று மோப்பம் பிடித்து விட்டது.

ஆம் 

அதுவே குவாண்டம் கிராவிடி அல்லது குவாண்டம் காஸ்மாலஜி.

அதில் காலம் இல்லை 

எனும் நிலைக்கு மிக மிக அருகில் உள்ளது.

அதில் 

தூரம் அல்லது வெளியும் கூட‌

இல்லை என்னும் நிலைக்கு மிக மிக அருகில் உள்ளது.

ப்ளாங்க் எனும் புள்ளிக்குள் 

நுழைந்து விட்டது.

ஈர்ப்பு எனும் கிராவிடியை பற்ற வைப்பதே

இந்த கால வெளிப் பொறி தான்.

இதிலும் கூட‌

குவாண்டம் எனும் ஒற்றையா ரெட்டையா

விளையாட்டை துவக்கி விட்டது.

உறுதியற்ற நிலைப்பாடு எனும் 

குழம்பியமே "ப்ராபபலிடி" என்பது.

நம் விண்வெளியின் முதல் மைல்கல்

இந்த குவாண்டம் ப்ராபபலிடி தான்

என்று

ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி

ஒரு முட்டுச்சந்தில் முட்டிக்கொண்டு நிற்கிறது.

இன்னும் 

அது பல்லைக்கடித்துக்கொண்டு

நரம்பு முறுக்கிக்கொண்டு

காஸ்மாலஜியின் தோல் உரிப்பு இயக்கத்தில்

ஓடிக்கொண்டே இருக்கிறது.

கடவுள் இருக்கிறது 

கடவுள் இல்லை.

என்ன இல்லை என்று சொல்லும் 

தைரியம் உன்னிடம் இருக்கிறதா?

அனுமார் கதாயுதத்தை சுழற்றிக்கொண்டு

தாக்க வருகிறார்.

இருக்கலாம்..இல்லாமல் இருக்கலாம்

என்று

முணுமுணுக்கிறேன்

குவாண்டம் ப்ராபபலிடியாய்.

என்னது?

இன்னும் சந்தேகமா?

அதோ வாயுபுத்திரன்

தாக்க வருகிறார்.

கதாயுதத்தை அங்கும் இங்கும் சுழற்றுகிறார்.

கதாயுதத்தைக்கொண்டு

இந்த கொசுக்கடியை எப்படி சமாளிப்பது?


____________________________________________________________


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக