சரணம் அய்யப்பா.
______________________________________
ருத்ரா
சாமியே சரணம் அய்யப்பா.
இதை மீண்டும் மீண்டும்
கேளுங்கள்.
அது அந்த தூய புத்தனை
சரணம் அடைந்தவர்களின்
அடிவயிற்று முழக்கம் அது.
சங்கம் சரணம் கச்சாமி
என்ற தூய
மானிட சங்கம் நோக்கித்தான்
அதுவும் ஒலியெழுப்புகிறது.
வைதிகம் கவ்விப்பிடித்திருக்கிற
காரணத்தால்
புராணக்கதைகள் அதில்
ஒட்டிகொண்டன.
நாயர் புடிச்ச புலிவால் கதை தான்.
அந்த யாத்திரையின் நடுவில்
வாவர் சாமிகள்
எனும் பாபர் சாமிகள் தான்
ஐயப்பனின் அத்யந்த நண்பராக
இருக்கிறார்.
அவருக்கும் சேர்த்து தான்
பக்தர்களின் யாத்திரை இங்கு
தொடர்கிறது.
இந்த வாவரைக்காட்டி
ஐயப்பனைப்பிரிக்க
இவர்கள் நினைத்தால்
ஐயப்பனே அந்த
அந்த மசூதிக்குள் போய்
உட்கார்ந்து கொள்வார்.
இது தான்
"நாயர் புடிச்ச புலி வால்" என்பது.
மிகவும் "வைராக்கியம்" மிகுந்த
தபசு இவருடையது.
அதனால் தான் அந்த
சாவதானமான
பத்மாசனைத்தை விட்டு
முழங்கால்களை மடக்கி
குத்த வைத்த அந்த
கடினமான ஆசனத்தில்
அமர்ந்து இருக்கிறார் அய்யப்பன்.
இரு முடிகளோடு
கல்லையும் முள்ளையும்
காலுக்கு மெத்தையாக்கி
ஊர்கின்றன.
பிறப்பு என்பது தாய்மையின் வாசல்.
அது தோன்றும் இடமே
பிரம்மமும் தோன்றுகிறது.
அது எப்படி பாவத்துவாரம் ஆகும்?
அது எப்படி தீட்டு ஆகும்.
அங்கு கன்னிக்குடம் உடைத்து
வரும் பிரம்மம் கூட
தீட்டு ஆகிவிடுமா?
அதனால் தானே உச்சநீதி மன்றமும்
அந்த தீர்ப்பை நல்கியது.
பெண்களும்
படியேறி வந்து
படிநிலையில்
அவள் ஒரு கொற்றவை ஆகலாம்
என்பது தானே உட்குறிப்பு.
ஆனால் பழமை வாதிகளோ
அந்த தீண்டாமைக்கு
இன்னும் பூண் பிடிக்க
நீதி மன்றத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறார்கள்
அன்பு தானே படைப்பின்
உலக மகா ஊற்று.
இது தானே "தெளிவு" எனும் ஒளிர்வு.
இதை சமஸ்கிருதத்தில் பிரசாதம் என்று
சொல்லி அப்பமாய் அதிரசமாய்
உண்கிறோம்.
இந்த வெளிச்சம் தானே
அந்த காந்தமலையில்
மகரஜோதியாய் தெரிகிறது.
அன்பு கொழுந்து விட்டு எரிந்து
சுடர் காட்டும் இந்த
மனித உணர்வே பக்தியின் அடிப்படை.
மனித உணர்வில் பேதங்கள் வளர்க்கும்
அசுரத்தனம்
கொளுத்தப்படத்தானே வேண்டும்.
சாமியேயே...ய்
சரணம் அய்ய்..யப்பா!
இந்த அடிமனத்து ஆழத்தின்
முழக்கம்
உலகமெல்லாம் கேட்க வேண்டும்.
__________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக