குயில் குரல்கற்ற வேனில்
______________________________________________________
சொற்கீரன்
மாமை மணிநிறம் மறப்ப விடாது
இலஞ்சி அடர்நிழல் அருகு சினைஇய
பழுப்புத்தீயின் தளிர்மின் கலிப்ப
மாவும் நோக்கும் என் பசலை ஆர்த்து.
புன்காற் பாதிரி வரிநிழல் தூஉய்
தும்பி சேர் நெடுவனம் கல்லென எடுக்கும்
புலம்பொலி மறக்கல் நேராது ஈண்டு
என் மொழி அவன்பால் நுணங்கறல் போன்ம்
நீள்வரி எழுதும் என் கண்ணிணை நோக்கும்.
வேனில் பொறிகிளர் வெங்கான் பறந்தலை
துடிசெய் அம்புள் கருங்குயிலும்
என் புலம்புகொள் பண்ணில் தன்
அலம்பல் தீங்குரல் கற்றிட வருமே.
குயில் குரல்கற்ற வேனில் இவண்
மாறுகொள் நோன்றல் எய்தியது என்னே.
_____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக