அகழ்நானூறு 2
___________________________________
சொற்கீரன்
ஆழல் வாழி அம்புவிழி அணங்கே.
_________________________________________
சொற்கீரன்.
ஆழல் வாழி! அம்புவிழி அணங்கே!
பொறிகொள் சிறுகண் கூர் எயிற்றரவு
ஆறுபடு அத்தம் நிரம்பா நீளிடை
முள்ளிய இலவம் முளியிலை போர்த்த
கொடுங்கவலைய பேழ்விரி விழித்தீ
வானும் நீந்தி வரூஉம் அவன் அஞ்சல்.
புத்தகன் மண்டையர் புளித்தநுரை ஏற்றிய
நறவின் களிகூர் இரும்பேர் ஒக்கல்
நசைஇய குழாஅம் தீர் இருள் இடையின்
தமியச் சென்றான் அரும்பொருள் தேடி.
அறல்மணல் அமர்த்தி பூவொடு நெல் தூஉய்
கல்லென் சும்மையர் வதுவைகொள் என
தமர்தர இற்கிழத்தி ஆதலென்ன செம்பூ பூத்தது.
ஆகுந ஆகுக அவிர்தீ இமைக்கண் திறந்தனம்
கடைக்கோல் காட்டிய நூல்கள் அன்றி
புரியும் திரியும் மெய் மறைத்து புகலும்
முப்புரி நூல்கள் நுவலும் ஓதம்
எற்றுக்கு இவண் என நுண்மாண் அறிவு
நுழை படுத்தாங்கு அன்பின் ஓர்மை
ஒன்றே மக்களின் நெறிகோள் மன்னே.
"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டும்"
மந்திரம் இன்றி மணங்கொள் விழவை
ஏத்திய நெஞ்சில் களியின் மிதவை
கால்வழிப் படூஉம். தீர்க நின் படரே.
கொடுவெண் திங்கள் கொடும்பிறை காட்ட
செறிசுரம் கடந்தான் நின் இறைவளைப் பற்ற.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக