வெள்ளி, 16 நவம்பர், 2018

கஜா

கஜா
================================ருத்ரா


கடல் "யானையே" உன்
தும்பிக்கைக்கு பெயர்
900 கிலோ மீட்டர் நீள
துவம்சம்.

நாகையும்  வேதாரண்யமும்
இந்த "யானைப்பசிக்கு "
வெறும் சோளப்பொரி


இது புயல் அல்ல.
20 தொகுதி இடைத்தேர்தல்
பரீட்சை பாடங்களுக்கான‌
ஹோம் வொர்க்.

அரசு பாராட்டுக்குரியது தான்.
அது எச்சரிக்கை கொடுத்ததற்கு அல்ல.
எச்சரிக்கை அடைந்ததற்கு
மக்களின் புயலை எதிர்பார்த்து.

அதிகாரிகள் அனைவரும்
இந்த "கஜாவுக்கும்" சிறப்பாய்
விநாயக சதுர்த்தி விழாவை
கொண்டாடி விட்டார்கள்.

கமல் ஸ்டாலின் பாராட்டுகளில்
உச்சி குளிர்ந்து
"ஜலதோஷம்" பிடிக்கவைத்ததற்காக‌
கூட வழக்குகள் அவர்கள் மீது பாயலாம்.

சிறகு பிய்ந்த காக்கை.
இது தான் வேதாரண்யம் எனும்
திருமறைக்காடு.
தமிழுக்கும் புயல் என்று பேர்.

சபரிமலை பக்கம் போகிறாளே
"கஜா"
என்ன வயதிருக்கும் அவளுக்கு
இப்போது?

ஆயிரக்கணக்கில் மின்கம்பங்களும்
மரங்களும் வீழ்ந்தன‌
வீடுகளின் கூரைகள் பிய்ந்தன.
மோடிஜியிடம் பணம் வாங்க‌
"கஜாவின்" இந்த கையெழுத்து போதுமா?

ஊடகங்கள் ஓடி ஓடி
உழைத்தன.
விட்டால் "கஜா"வுக்கு
நாலுவேடம் போட்டு
நாற்காலியில் உட்காரவைத்து
பேச வைத்திருப்பார்கள்.

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக