திங்கள், 5 நவம்பர், 2018

தீபாவளி

தீபாவளி
=============================================ருத்ரா

வெடித்தால் தான் சிறுவருக்கு தீபாவளி
இனித்தால் தான் உண்போருக்கு தீபாவளி
பட்டு தான் பெண்களுக்கு தீபாவளி.
"படங்கள்" தான் விடலைகட்கு தீபாவளி.

தொலைகாட்சியில் தொலைவதுவும் தீபாவளி.
தொலைந்தபின்னே தேடுவதுவும் தீபாவளி.
தீப்பட்ட புண்ணும் கூட தீபாவளி.
தீபாவளி மருந்தும் கூட தீபாவளி.

ரெண்டுவாங்கி மூணுகிடைக்கும் தீபாவளி.
விடியும் வரை கடைகள் எல்லாம் தீபாவளி.
நாளை எனும் விளிம்பு வரை தீபாவளி.
விடிந்து விட்டால் முடிந்துவிடும் தீபாவளி.

லட்டு மைசூர் பாக்குகளும் தீபாவளி.
பிட்டு தின்றால் முடிந்துவிடும் தீபாவளி.
பட்டாசுகள் வெடித்தன.பூவாணங்கள் தெறித்தன.
காகிதக்குப்பைகளே வாசல்தோறும் கோலங்கள்.

கிளறிப்பார்த்தோம் சலித்துப்பார்த்தோம்.
கிண்டி கிண்டித் தேடிப்பார்த்தோம்.
கிடைக்கலை.கிடைக்கலை எங்கணுமே கிடைக்கலை.
நரகாசுரன் பிணங்கள் அங்கு எங்கணுமே கிடைக்கலை.

===============================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக