திங்கள், 19 நவம்பர், 2018

கலைடோஸ்கோப்

கலைடோஸ்கோப்
_________________________________________ருத்ரா


சிபிஐ
_______

இந்த ரப்பர் துப்பாக்கிகளை
வைத்து தான்
சுட்டுக்கொண்டிருந்தோமா?

ஆர்பிஐ
________

பொருளாதாரத்தின்
ப‌ழைய
புத்தகக்கடை.

புயல் சேதங்கள்
_________________

நாற்பது பேர்களுக்கும் மேல்
இறந்து விட்டார்களாமே..இனி
அத்தனையும் கள்ள ஒட்டுகள்.

ஹெலிகாப்டர்
__________________

ஜாக்கிரதை
அம்மாவின் ஆவியும்
கூட வரும்.

கஜா
‍‍‍‍‍‍____

சமூகவிரோதப்புயல்
என்று அல்லவா
பெயர் சூட்டியிருக்கவேண்டும்.

"சாமியே அய்யப்போவ்"
_______________________

தூரப்போ..தூரப்போ
சமநீதியே
நீ தூரப்போ.

ராமருக்கு சிலை
‍‍‍‍‍‍‍_________________

பயத்தில்
அண்ணாந்து பார்ப்பது
ராமரே தான்.

இலங்கை
__________

மேட் இன் சைனா
மேக் இன் இந்தியா
பாழ் ஆச்சுது யாழ்.

____________________________________________




   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக