புதன், 7 நவம்பர், 2018

இந்த புயலுக்கு பெயர் வைப்போம் "கமல்" என்று .

இந்த புயலுக்கு பெயர் வைப்போம் "கமல்" என்று .
====================================================ருத்ரா


கமல்
ஸ்டார்ம் இன் ய டீ கப்
இல்லை தான்.
அவரது ட்விட்டர் படகு
கிராம சபைகளில்
நங்கூரம்
பாய்ச்சத்தொடங்கி இருக்கிறது.
அவருக்குப்பின்னே
திரளுபவர்கள்
பிக்பாஸ் விசிறிகளா?
இல்லை
இதையும் ஒரு பிக்பாஸின்
தொடர்காட்சியாக‌
நினைத்துக்கொண்டு
தலை காட்டுபவர்களா?
என்பதும் தெரியவில்லை.
தேவர் மகன் 2 ஐ
கையில் துருப்புச்சீட்டாக்கி
வைத்திருக்கிறார்.
ஊழலை எதிர்க்கவேண்டுமென்றால்
திராவிடத்தை அழிக்கவேண்டும்
என்கிறார்.
ஈழத்தமிழ் அலைவிரிப்பை
அவரது கருப்புச்சட்டையில்
பார்த்து சிலிர்த்தவர்கள்
ராஜபக்ஸேவுக்கு ஆரத்தி எடுத்தால் என்ன?
அவர் இனி திருந்தியவராக இருக்கமாட்டாரா?
என்கிற தொனியில்
பேசுவதைக்கேட்டு
அதிர்ந்து போனார்கள்.
இப்போது மக்கள்
அவருக்கு நம்பிக்கை ஓட்டு
போடக்கூடாது என்பதே என் விருப்பம்
என்கிறார்.
அவர் அறிவுஜீவி எனக்காட்டிக்கொள்வதில்
நமக்கு எல்லாம் ஒரு மகிழ்வு தான்.
தமிழ் நாட்டின் கூர்மையான‌
அரசியல்
தமிழும் திராவிடமும் தான்.
சமஸ்கிருதத்தின் அந்த நாலுவித உச்சரிப்பு
இல்லாமலேயே
உலகத்தமிழ் செம்மொழியாய் இருப்பது
தமிழ் தான்.
இதிலும் அவர் குழப்ப இசம் வெளிப்பட்டு
தமிழை தமிழர்கள்
சுருட்டி கொஞ்சம் கக்கத்தில்
வைத்துக்கொண்டால் என்ன‌
என்று கூட கேட்கலாம்.
திராவிட படுதா(திரை)வை மூடி
நாடகமேடையை விட்டு இறங்கியவராய்
பேசத்தொடங்கி விட்டார்.
ஊழல் எதிர்ப்பு என்பது
திராவிட எதிர்ப்பு அல்ல.
இரண்டையும் ஒன்றாய் காட்டி
மத்தாப்பு கொளுத்துவதைத் தான்
மதத்தை அரசியலாய் குத்தகைக்கு
எடுத்தவர்கள் பேசிவருகிறார்கள்.
அவர்களின் "கருவி"யாய்
அவர் ஆகவில்லை என்கிறார்.
நான் குழலும் இல்லை ஊதுகுழலும் இல்லை
கருவி...
மக்களின் கருவி என்கிறார்.
மைய அரசின்
மக்கள் எதிர்ப்புக்கொள்கையையெல்லாம்
தையா தக்கா என்று குதித்துக்கூச்சல் போட்டு
எதிர்க்கும் வன்முறையுடையது
எனது அரசியல் "மய்யம்"அல்ல என்கிறார்.
போராட்டத்தை கொச்சைப்படுத்திக்கொண்டு
அவர் எந்த போராட்டத்தை
நடத்தப்போகிறார்?
பிக் பாஸுக்குள்
நடிப்பவர்கள் வேண்டுமானால்
எலிமினேட் ஆகலாம்.
பிக்பாஸை இயக்குபவரும் கூட‌
எலிமினெட் ஆகலாமா?
ஆம்.
அது தான் கார்பரேட் அரசியல்.
தமிழைக்"கருவி"க்கோண்டு
திராவிடத்தைக்"கருவி"க்கொண்டு
அவர் எந்த மக்களின் கருவி
என்பது தான்
அவர் தன்னைச்சுற்றி மூடியிருக்கும்
மெல்லிய‌ சல்லாத்துணி என்கிற‌
ஐயம் அல்லது குழப்பம்.
இந்த மூட்டங்களைக்கலைத்த‌
"கலை"ஞனாக‌
மாற்றங்களின் புயலாக‌
அவர் உலா வரவேண்டும்.
திரை ஜிகினாக்களின்
நிலாவாக அல்ல!

================================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக