சனி, 10 நவம்பர், 2018

ரஜனி விட்ட அம்பு

ரஜனி விட்ட அம்பு
===========================================ருத்ரா


திரைப்படங்கள்
வெளிவரும்போதெல்லாம்
அந்தக்குளத்தில்
கல்லெறிந்து விளையாடும்
அரசியல் இது.
இப்படி பேனர்கள் கிழிப்பது..
மக்கள் மனம் புண்பட்டது என்று
மக்களையே கலவரங்களால் புண்படுத்துவது..
சென்ஸார் என்ன சென்ஸார்
நாங்கள் தான் சென்ஸார் என்று
இதை வெட்டு
அதை நீக்கு
என்று
கண்ணில் காணுவதை எல்லாம்
அடித்து நொறுக்குவது...
ப்ரொஜெக்டர் இல்லாமல்
இப்படி வீதியில் டெர்ர‌ரிஸம் எனும்
சினிமாவை அரங்கேற்றுவது...
............
இதைக்கண்டு
மனம் வெதும்பி
வில் வளைத்துவிட்டார் ரஜனி.
அம்பு வந்து விழுந்தது.
அலறிப் புடைக்கவேண்டியவர்கள் எல்லாம்
அலறி புடைத்து விட்டார்கள்.
மயிர் பிளக்கும் வாதங்களால்
டிவி ஊடகங்கள்
விவாத பற்சக்கரங்களைச்
சுழற்றி
சொற்களை கசக்கிப்பிழிந்து
சாறு பிழிந்து கொண்டது
தங்கள் தங்கள் ரேட்டிங்குக்கு.
"என்னங்ணா" பாணியில் கூட‌
விஜய் இங்கே குரல் கொடுக்கவில்லையே!
இதிலிருந்து
உங்களுக்கு புரியும்.
கண்ணுக்குத்தெரியாத ஹிட்லரின்
நறுக்கு மீசையும் உருட்டு விழிகளும் தான்
இங்கே ஒரு
ஹோலோகிராபி படம் காட்டுகிறது என்று.
இந்த ஹிட்லர் மார்க் பிராண்டில் தான்
இங்கே
ஜனநாயக பிரியாணி பொட்டலங்களும்
குவார்டர் கட்டிங்குகளும்
போணி ஆகிறது என்று.
கமல்களே!
ரஜனிகளே!
விஜய்களே!

வசனங்களும் "டீசர்"களும்
இங்கே வெறும் சோளக்காட்டு
பொம்மைகள் தான்.
அரசியல் இல்லாத ஒரு அரசியலின்
கூட்டணிக்கு
கூட்டு சேரும் தருணம்
உங்களுக்கு வந்திருக்கிறது.
ஒரு படத்துக்கு பூஜை போடுவது போல்
நெருங்கி வரும்
இந்த தேர்தலுக்கும்
ஒரு பூஜைபோட்டுவிடுங்கள்.
மக்களின்
விழி திறக்கும்!
விடிவு பிறக்கும்!

======================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக